About Us

தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் - பேர்கன், நோர்வே

Sjelesorg for Tamilsk Katolikker – Bergen, Norway

பதிவிலக்கம் - 991832815

நோக்கம்

 

பேர்கன் தமிழ் கத்தோலிக்கர் அனைவரையும் ஒன்றிணைத்து தமிழ் அடையாளத்தோடு கத்தோலிக்க நம்பிக்கையில் வளர்த்து திரு அவைக் கோட்பாடுகளுக்கு இசைவாக வாழத் தூண்டுதல்.

 

புனித பவுல் ஆலயப் பங்கிலும் சமூகத்திலும் உயிர்த்துடிப்புள்ள குழுமமாகப் பங்களிக்க ஆன்மீகக்குருவுடன் இணைந்து பணியாற்றல்.

 

பேர்கன்வாழ் தமிழ் கத்தோலிக்கர் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துதல்.

 

புனித பவுல் ஆலயத்துடனும் பங்குமக்களுடனும் பங்குக்குழுமங்களுடனும் ஒன்றிணைந்து பணியாற்றும் தன்மையை வளர்க்க வழிவகுத்தல்.

 

பேர்கன் தமிழ் கத்தோலிக்கரிடையே சமய, சமூக, பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்துதல்.

 

 

இலங்கைவாழ் மக்களுக்கான (விசேடமாக தமிழ் மக்களுக்கான) வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தல், உதவுதல்.