Home

St.Paul

BERGEN TAMIL KATOLSKE FORENING

DRIFTKONTO: 36242493111

 

பேர்கன் புனித பவுல் ஆலயத்துக்கு

போலந்து நாட்டிலிருந்து இறை இரக்கப்படத்தின் வருகை

செப்டெம்பர் 24 இலிருந்து – ஒக்ரோபர் 1 வரை

 

இரக்கத்தின் விசேட யூபிலி ஆண்டாகிய இந்த ஆண்டை எமது பங்கில் விசேடவிதமாக நினைவுகூரும் முகமாக எமது பங்குக்குருவும் எமது பங்கிலுள்ள போலந்து நாட்டைச் சேர்ந்த குருக்களும் மேற்கொண்ட ஓர் அரிய முயற்சியின் பயனாகப் போலந்து நாட்டின் கிராக்கோ நகரில் வாகியெவ்நீக்கி எனும் இடத்தில் அமைந்துள்ள இறை இரக்கத் திருத்தலத்திலிருந்து முன்னைய திருத்தந்தை 16ம் பெனடிக்ற் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட ஓர் பெரிய அளவிலான இறை இரக்கப்படம் எதிர்வரும் செப்டெம்பர் 24ம் திகதி எமது பங்குக்கு எடுத்துவரப்பட இருக்கிறது. இந்நாட்களில் விசேட நிகழ்வுகள் எமது பங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.

 

இந்நிகழ்வுகள் தொடர்பான மேலதிக விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

செப்டெம்பர் 24 – சனிக்கிழமை

 

16.30 எமது ஆலயத்துக்கு அருகிலுள்ள அருங்காட்சியக முன்றலில் (Museplassen)

 

பங்கு மக்கள் ஒன்றுகூடுவார்கள்

 

17.00 இறை இரக்கப்படம் மற்றும் புனித இரண்டாம் ஜோன் போல், புனித பவுஸ்தீனா ஆகியோரது திருப்பண்டங்களுக்கான வரவேற்பு நிகழ்வு

 

வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து இறை இரக்கப் படத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் புனித பவுல் ஆலயத்தில் இடம்பெறும்.

 

பங்கு மக்கள் அருங்காட்சியக முன்றலில் இருந்து ஆலயத்திற்குப் பவனியாகச் செல்வார்கள்.

18.00 இறை இரக்கப்படத்துடன் வருகின்ற போலந்து ஆயர் மற்றும் குருக்களுடன் இணைந்து இலத்தீன் மொழியில் பாடற்திருப்பலி

திருப்பலியின் பின் விசேட வழிபாடுகள்

 

20.00 தமிழ்மொழி

 

20.30 நோர்வீஜியன் மொழி

 

21.00 ஸ்பானிய மொழி

 

21.30 பிலிப்பீன் மொழி

 

22.00 வியட்நாம் மொழி

 

22.30 போலந்து மொழி

 

24.00 போலந்து ஆயரின் தலைமையில் போலந்து மொழியில் திருப்பலி

 

செப்டெம்பர் 25 – ஞாயிற்றுக்கிழமை

 

வழமையான ஞாயிறு திருப்பலிகள்

 

13.00 தமிழ்மொழியில் திருப்பலி

 

செப்டெம்பர் 26 திங்களிலிருந்து செப்டெம்பர் 30 வெள்ளிக்கிழமை வரை

 

நாள் முழுவதும் செபங்களும் வழிபாடுகளும் நடைபெறும்

 

செப்டெம்பர் 26 – திங்கட்கிழமை

 

15.00 மணியிலிருந்து 19.00 மணிவரை தமிழ் மொழியில் வழிபாடுகள்

 

19.00 வழமையான திங்கட் திருப்பலி

 

செப்டெம்பர் 27 – செவ்வாய்க்கிழமை

 

நோர்வீஜியன் மொழியில் சிறப்புரை

 

இறை இரக்கச் செய்தி பற்றிய ஒரு வரலாற்றுப்பார்வை – அருட்தந்தை றெஜினோல்ட் அ.ம.தி

 

பாடசாலைக் கேட்போர் கூடம் - Auditorium

 

எதிர்வரும் செப்டெம்பர் 24ம் திகதி நடைபெறவுள்ள இறை இரக்கப்படத்தையும் புனித பண்டங்களையும் வரவேற்கும் நிகழ்விலும் தொடர்ந்து நடைபெறும் வழிபாடுகளிலும் எமது தமிழ் மக்கள் பண்பாட்டு ரீதியிலான உடைகளுடன் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு மிகவும் அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

 

முக்கிய அறிவித்தல்

 

செப்டெம்பர் 24ம் திகதி சனிக்கிழமை 15.00 மணியிலிருந்து 20.00 மணிவரை புனித பவுல் பாடசாலை வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

 

ஆன்மீககுரு

 

புனித பவுல் ஆலயம், பேர்கன்

 

BERGEN TAMIL KATOLSKE FORENING - NORWAY

DRIFTKONTO : 36242493111

புனித பூமிக்கு திருப்பயணம்

2018ம் ஆண்டு மாசி மாத முடிவில் புனித பூமிக்கு திருப்பயணம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. திருப்பயணத்திற்கான ஒருவருக்குரிய செலவு அதிகமாக இருப்பதால் குடும்பங்கள் பங்குபற்றுவதற்காக முன்கூட்டியே திருப்பயணம் தொடர்பாக முன் அறிவிக்கப்படுகின்றது. திருப்பயணத்தில் பங்குபற்ற விரும்புவோர் எதிர்வரும் 3ம் திகதி திங்கட்கிழமை நடைபெறும் தமிழ் திருப்பலியின் பின்னர் கிறிப்டன் மண்டபத்தில் நடைபெறும் சந்திப்பில் பங்குபற்றுமாறு கேட்கப்படுகின்றனர். திருப்பயணம் தொடர்பான சந்திப்பில் பங்குபற்ற முடியாதவர்கள் திரு தேவதாசன் ராசதுரை, திரு எட்மண்ட் யோசப் (யோகன்), திரு லோட்டன் லோறன்ஸ் ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.

St.Faustina's Diary

 

புனித பவுஸ்தீனாவின் நாட்குறிப்பிலிருந்து...

ஆண்டவரே, முற்றுமுழுதாக உமது இரக்கமாக மாற்றமடைந்து அதன் உயிரோட்டம் நிறைந்த பிரதிபலிப்பாக நான் விளங்க விரும்புகிறேன். இறைவனின் இயல்புகளில் எல்லாவற்றையும் விடப் பெரிதாக இருக்கின்ற இந்த ஆழம் காணமுடியாக இறை இரக்கம் எனது இதயத்தின் ஊடாக எனது அயலவரைச் சென்று சேரட்டும்.

ஆண்டவரே, எனது கண்கள் கருணையின் கண்களாக மிளிரச் செய்தருளும். அப்போது வெளித்தோற்றங்களை வைத்து நான் யாரையும் சந்தேகிக்காமல், தீர்;ப்பிடாமல் அவர்களது ஆன்மாவுக்குள் எது இருக்கிறதோ அதைப்பார்த்து அவர்களது ஆபத்தில் இருந்து அவர்களை விடுவிப்பேன்.

எனது காதுகள் இரக்கத்தின் காதுகளாக விளங்கச் செய்யும், ஆண்டவரே. அப்போது நான் என் அயலவரது தேவைகளை இனங்கண்டு அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் வேதனைகளையும் அலட்சியம் செய்யாதிருப்பேன்.

எனது நாக்கு கருணையின் நாக்காக துலங்கச் செய்யும். அப்போது என் அயலவரைப்பற்றி எதிர்மறையாகப் பேசாது எல்லோருக்கும் ஆறுதலையும் மன்னிப்பையும் கொடுக்கும் வார்த்தைகளையே பேசுவேன்.

எனது கரங்கள் கருணையின் கரங்களாகவும் நற்செயல்களின் கரங்களாகவும் விளங்கச் செய்யும் ஆண்டவரே. அப்போது தான் எனது அடுத்தவருக்கு நன்மையை மட்டும் செய்து, கடினமான, பாரமான பணிகளை நான் எனக்காக எடுத்துக்கொள்வேன்.

எனது கால்களை; இரக்கத்தின் கால்களாக மாற்றியருளும், ஆண்டவரே. அப்போது தான் நான் எனது சொந்த இளைப்பையும் களைப்பையும் பாராது அடுத்தவருக்கு உதவ விரைந்துசெல்வேன்.

எனது அயலவருக்குப் பணிபுரிவதே எனது உண்மையான இளைப்பாற்றியாக அமையும்.

எனது இதயம் இரக்கத்தின் இதயமாக மாறச்செய்யும், ஆண்டவரே. அப்போது எனது அயலவரின் வேதனைகள் முழுவதையும் நான் உணர்ந்து கொள்வேன்.

எவருக்கும் எனது இதயத்தைத் திறக்க நான் மறுக்கமாட்டேன். எனது கனிவு நிறைந்த செயல்களை மற்றவர் தவறாகப் பயன்படுத்தலாம் எனும் சூழலில் கூட நான் உண்மையாக நடப்பேன்.

அளவிடற்கரிய இரக்கம் நிறைந்த இயேசுவின் இதயத்தினுள் நான் என்னை பூட்டிக்கொள்வேன்

எனது சொந்த வேதனைகளை மௌனமாக நான் தாங்கிக்கொள்வேன். ஆண்டவரே உமது இரக்கம் என் மேல் தங்குவதாக.

 

 

Jubilee year - Prayer

 

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே,

விண்ணகத் தந்தையைப் போல நாமும் இரக்கமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என எங்களுக்குக் கற்பித்திருக்கிறீர். அத்துடன் உம்மைக் காண்கிறவர்கள் அவரையே காண்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறீர்.

உமது முகத்தை எங்களுக்குக் காட்டியருளும். அப்போது நாங்கள் மீட்படைவோம்.

உமது அன்புப் பார்வை பணத்துக்கு அடிமைப்பட்டிருந்த சக்கேயுவையும் மத்தேயுவையும் விடுவித்தது.

படைப்புகளில் மகிழ்வைத்தேடிய நெறிதவறிய பெண்ணுக்கும் மதலேனாளுக்கும் விடுதலையைத் தந்தது.

உம்மை மறுதலித்த பேதுருவை புலம்பியழவைத்தது.

மனம்வருந்திய கள்வனுக்கு மோட்சத்தை உறுதிப்படுத்தியது.

«கடவுளுடைய கொடை எதுவென நீ அறிந்திருந்தால்» என்று சமாரியப்பெண்ணுக்கு நீர் கூறிய வார்த்தையை நீர் எங்களுக்கே சொல்வதாக நாங்கள் கேட்போமாக.

கண்ணுக்குத் தெரியாத தந்தையின்,

அனைத்துக்கும் மேலாக மன்னிப்பின் மூலமும் இரக்கத்தின் மூலமும் தனது வல்லமையை வெளிப்படுத்தும் இறைவனின் கண்ணுக்குத் தெரியும் முகம் நீரே.

உயிர்த்து, மகிமைப்படுத்தப்பட்ட ஆண்டவராகிய உம்மை வெளிப்படுத்தும் உமது முகமாக

திரு அவை உலகில் விளங்கட்டும்.

அறியாமையிலும் தவறுகளிலும் இருப்போர் மட்டில் கருணையை உணரும் பொருட்டு

உமது திருப்பணியாளர்கள் பலவீனத்தால் அணிசெய்யப்படத் திருவுளங்கொண்டீர்.

இவர்களை அணுகும் அனைவரும் தாம் இறைவனால் வேண்டப்படுபவர்கள், அன்புசெய்யப்படுபவர்கள், மன்னிக்கப்படுபவர்கள் என்பதை உணரட்டும்.

இறைவனின் அருள் நிறைந்த ஆண்டாகக் கருணையின் யூபிலி ஆண்டு மலரவும்

புதுப்பிக்கப்பட்ட உற்சாகத்தோடு உமது திரு அவை ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்

சிறைப்பட்டோருக்கும் அடக்கி ஒடுக்கப்பட்டோருக்கும் விடுதலையை அறிவித்து

பார்வையற்றோருக்குப் பார்வையைப் பெற்றுத்தரவும்