ர்  அருள்தந்தை  அல்பேர்ட்  விக்டர்  ஜெயசிங்கம்  அதி


யாழ் அமல மரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருள்தந்தை அல்பேர்ட் விக்டர் ஜெயசிங்கம் அடிகளார் 29-09-2020 அன்று  காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் காலமானார். 

1955 சித்திரை 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த அருள்தந்தையவர்கள் 1979ம் ஆண்டு அமல மரித்தியாகிகள் சபையில் துறவியானார். 1984ல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டபின்பு அமல மரித்தியாகிகளின் மறையுரைஞர் குழுவில் சிறிது காலம் பணியாற்றியபின் அமதிகள் சிறிய குருமடத்தின் பொறுப்பாளராகவும் அமதிகளின் யாழ் மாகாண நிதிமேலாளராகவும் கடமையாற்றினார். பின் 1994ல் அமல மரித்தியாகிகளின் உரோமை உயர்பீடத்தில் துணை நிதிமேலாளராகப் பணியாற்ற அழைக்கப்பட்ட அருட்டந்தையவர்கள், அப்பணியில் 2005ம் ஆண்டுவரை சிறப்பாகப் பணியாற்றினார்.

பின்பு 2005 தொடக்கம் 2013ம் ஆண்டுவரை இத்தாலிய பலர்மோ நகரில் இருந்துகொண்டு முழு இத்தலியிலும் தமிழ் கத்தோலிக்க ஆன்ம குருவாகச் செயற்பட்டார்.

தொடர்ந்து 2013ம் ஆண்டு பங்குனி 14ம் திகதி நோர்வே ஓஸ்லோ தமிழ் கத்தோலிக்க ஆன்மீகக் குருவாகப் பணியாற்ற அனுப்பப்பட்ட அருட்டந்தையவர்கள், 2014ல் ஆவணியில் மீண்டும் அமலமரித் தியாகிகளின் யாழ் மாகண நிதிமேலாளராகப் பணியாற்ற அழைக்கப்படும்வரை தமிழ் கர்தோலிக்க ஆன்மீகக் குருப்ணியைச் சிறப்பாகச் செய்தார்.

2014ம் ஆண்டுதொடக்கம் தன் நிதிப்பொறுப்பளார் கடமைகளில் நேர்த்தியாகச் செயல்பட்ட அருட்டந்தையவர்கள் தன் அலுவலகம்நோக்கி வழமைபோல் துவிச்சக்கரவண்டியில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் காயமுற்றார். 

கடந்த நான்குவார தீவிர சிகிச்சை பயனளிக்காத நிலையில் 29-09-2020 அன்று  காலை 10 மணியளவில் யாழில் உயிரிழந்தார்.

அருள்தந்தையவர்களின் பூதவுடல் யாழ். கொழும்புத்துறை புனித யூஜீன் டி மசனட் சிற்றாலயத்தில் 1ம் திகதி, வியாழன்வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.  

அடிகளாரின் நல்லடக்கத் திருப்பலி வியாழன், ஐப்பசி 1ம் திகதியன்று மாலை 3:30 மணிக்கு யாழ். மரியன்னை பேராலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் நல்லடக்கத்திற்காக புனித மரியாள் சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

அடிகாளரின் பிரிவில் துயருறும் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவரின் ஆன்மா நிலைவாழ்வில் இளைப்பாற இறைவனை இரைஞ்சுகின்றோம்.

- நோர்வே பேர்கன் தமிழ் கத்தோலிக்கர்