வைகாசி 7 ம் திகதிமுதல்  ஆலயவழிபாடுகளில்  கடைப்பிடிக்கவேண்டிய  ஒழுங்குமுறைகள்

இறைமக்கள் செய்யவேண்டியவை:

 ➢ வழிபாடுகளில் பங்கெடுப்பதற்கு முன்பதிவும் அனுமதியும் பெற்றிருத்தல்வேண்டும். (நாளாந்த வழிபாடுகளுக்கு (திங்கள்  -  வெள்ளி) முன்பதிவுசெய்வது இலகுவானது)

 ➢ நோய் அறிகுறியெதுவும் (சிறிய அறிகுறியேயாயினும்) தென்பட்டால் ஆலயத்திற்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

 ➢ ஆலயத்திற்குள்ளேயும் வெளியேயும் நபர்களுக்கிடையில் 1 மீற்றர் இடைவெளியைப் பேணவும். (ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளி கட்டாயமானதல்ல)

 ➢ ஆலயத்திற்குள் நுழைவதற்குமுன்னும் நற்கருணை பெறுவதற்குமுன்னும் கைகளைத் தொற்றுநீக்கிகொண்டு சுத்தப்படுத்துதல் அவசியமானது.

 ➢ ஆலய உதவிப்பணியாளர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியமானது.

 ➢ மற்றவர்களுக்கு கைலாகு கொடுப்பதைத் தவிர்த்துக்கொள்ளவும்.

 ➢ இருமும்போதோ, தும்மும்போதோ காகிதக் கைக்குட்டைகளையோ முழங்கைகளையோ பயன்படுத்தவும்.

 ➢ தொற்றுக்குறித்த பயமிருக்கும்பட்சத்தில் நற்கருணை பெறுவது கட்டாயமானது என்று எண்ணத்தேவையில்லை.


தொற்றைத்தடுக்க ஆலயத்தில் நடைபெறவிருப்பது:

 ➢ வழிபாடுகளுக்கிடையில் ஆலயம் சவர்க்காரம் மற்றும் தொற்நீக்கிகள்கொண்டு முழுவதுமாகச் சுத்தம் செய்யப்படும்.

 ➢ ஆலயத்தில் தொடுகைத்தொற்று சாத்தியமுள்ள அனைத்து இடங்களையும், பொருட்களையும் சுத்தம்செய்ய மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 ➢ ஆலய கழிவறைகளைச் சுத்தம்செய்ய கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 ➢ பாடற்புத்தகங்கள் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.


குருக்கள் செய்யவேண்டியவை:

 ➢ குருக்கள் வழிபாட்டிற்கு முன்பாகவும், வழிபாட்டு வேளையிலும், வழிபாட்டிற்குப் பின்பாகவும் கைகளைச் சுத்தமாகப்பேணுவர்.

 ➢ குருக்கள் நற்கருணைப் பகிர்விற்கு முன்னும் பகிர்வின்போதும் கைச்சுத்தம்பற்றி மேலதிக கவனம் செலுத்துவர்.

 ➢ குருக்கள் வழிபாடுகளுக்கிடையில் ஆலயம் சரியானமுறையில் தொற்றுநீக்கப்படுவதை உறுதிசெய்வர்.

 ➢ குருக்களுக்கு நோய் அறிகுறியெதுவும் (சிறிய அறிகுறியேயாயினும்) தென்பட்டால் வழிபாடுகளெதையும் நடத்தக்கூடாது.


ஆலய உதவிப்பணியாளர்;கள் செய்யவிருப்பவை:

 ➢ முன்பதிவுசெய்திருப்பவர்களை மாத்திரம் ஆலயத்தில் அனுமதிப்பர்.

 ➢ குறித்த வழிபாட்டில் (வழிபாட்டுப்பணியாளர்ஃபீடப்பணியாளர் தவிர்ந்த) ஐம்பது பேரை மட்டுமே அனுமதிப்பர்.

 ➢ ஆலயத்தில் அனைவரும் கைகளுக்கு தொற்றுநீக்கி பயன்படுத்துவதை உறுதிசெய்வர்.

 ➢ முழுவழிபாட்டுவேளையிலும் நபர்களுக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளி பேணப்படுவதை உறுதிசெய்வர்.

 ➢ பாடற்புத்தகங்கள் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படாதிருப்பதை உறுதிசெய்வர்.