என் கற்பாறையாகிய இறைவனிடம் ஏன் என்னை மறந்தீர்; எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்’ என்கின்றேன். ‛உன் கடவுள் எங்கே?’ என்று என் பகைவர் நாள்தோறும் என்னைக் கேட்பது, என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல என்னைத் தாக்குகின்றது. என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு. என் மீட்பராம் கடவுளை இன்னும் நான் போற்றுவேன். என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.

 திருப்பாடல்கள் 42: 9-11

  

 ஜூன் 01, இப்புதன் காலையில், வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில் பெருமளவான மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு வழங்கிய முதுமை பற்றிய தன் 12வது மறைக்கல்விப் பகுதியில், கடவுளே, என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும் (தி.பா.71,9) என்ற திருப்பாடல் ஆசிரியரின் வேண்டுதலை மையப்படுத்தி தன் சிந்தனைகளை எடுத்தியம்பினார், திருத்தந்தை.

பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய நிர்வாக அவை


சமூக அளவிலே ஆற்றப்படும் இறைபணிக்கு தெளிவான எடுத்துக்காட்டாய் அமைவது பங்கு. ஏனெனில் அது தன் எல்லைக்குள் காணப்பெறும் வேறுபட்ட எல்லா மனிதவளங்களையும் ஒன்றுதிரட்டி திருச்சபையின் பொதுமைக்குள் கொணர்கிறது. பங்கானது மறைமாவட்டத்தின் ஓர் உயிரணுவைப் போன்றுள்ளது. எனவே பொது நிலையினர் தம் சொந்த மறைமாவட்டத்தின்மீது அதிக அக்கறை கொண்டிருக்க வேண்டும். மறைமாவட்டம் மேற்கொள்ளும் முயற்சிகளில் பங்குகொள்ள வேண்டும்.
நோர்வே – ஒஸ்லோ மறைமாவட்டத்தில் உள்ள பங்குகளில் ஒன்றுதான் பேர்கன் புனித பவுல் பங்கு. இப்பங்கில் ஏராளமான தமிழ் கத்தோலிக்கர்கள் வாழ்கிறார்கள். இத்தமிழ் கத்தோலிக்கர்களின் ஆன்மீக, விசுவாச, சமூக, பண்பாட்டு வாழ்க்கை நிலைகளை மேம்படுத்துகின்ற, பாதுகாக்கின்ற பொறுப்பு பங்குக் குருவானவரின் அணுசரணையோடு தமிழ் கத்தோலிக்க ஆன்மீகக்குருவிடம் வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக இப்பொறுப்பு பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய நிர்வாகஅவையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிர்வாகஅவை, பேர்கன் தமிழ் கத்தோலிக்கரை ஒன்றுசேர்த்து இணைந்தியங்கும் பிற பக்திச்சபைகளையும் பணிக்குழுமங்களையும் உபகுழுக்களையும் ஒன்றிணைத்து தமிழ் கத்தோலிக்கர் சமய, சமுக பண்பாட்டு வாழ்வில் வளர உழைக்கிறது.

 

E-post : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Jenita Sinnarajah : 472 42 775 (- epost: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. )

 

 

பேர்கன் புனித பவுல் ஆலய தமிழ் கத்தோலிக்க ஒன்றிய நிர்வாக அவை

பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியத்தை 9 பேர்கொண்ட நிர்வாக அவை வழிநடத்துகின்றது. கடந்த 2022, மாசியில் பணிப்பொறுப்பேற்ற தற்போதைய நிர்வாக அவையில்:

1 - திருமதி. ஜெனிற்றா சின்னராஜா (தலைவர்)

2 - திருமதி. அமிர்தா இம்மானுவல் (செயலாளர்)

3 - செல்வி. ஜேசுனி ஜேசுநாயகம் (பொருளாளர்)

4 - திரு. ஸ்.ரீக் ரஞ்சிற் எமிலியானுஸ் (உப தலைவர்)

5 - திரு. ரஞ்சன் மரியாம்பிள்ளை (உப செயலாளர்)

6 - செல்வி. ரதேக்கா வேளாயினி அந்தோனிராஜா

7 - திரு.  சிறில் அந்தோனிப்பிள்ளை சிறிதர் 

8 - திரு. விஜயகுமார் ராசையா

9 - திரு. தோமஸ் அக்குவைனஸ் அலோசியஸ்       ஆகியோர் பணியாற்றுகின்றனர். 

 

 

Kontonavn 
Bergen Tamilkatolske Forening

Driftkonto 36242493111

Vipps: 55 65 17

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Nygårdsgaten 3, 5015 Bergen

 

 

Go to top
Template by JoomlaShine