பீடப்பணியாளர்


ஒவ்வொரு செயலுக்கும் இலக்கு அவசியம். ஆகவே பீடத்தில் உதவிசெய்கின்ற பீடப்பணியாளர்கள் தங்கள் பணியின் நோக்கத்தை அறிந்து அதனைச் சிறப்பாக செய்து வருகின்றார்கள். ஆலயத்தில் குருவானவருக்கு அடுத்தபடியாக பீடத்தை நெருங்கியிருப்பதும், புனிதபொருட்களை கையாளுவதும் பீடப்பணியாளர்களே. எனவே மிகுந்தபக்தியோடும், மரியாதையோடும் திருப்பலிக்கு உதவிசெய்வதையே இவர்கள் தம் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இக்குழுமத்தில் புதுநன்மை எடுத்தவர்கள் அங்கத்தவர்களாகலாம்;.

செயற்பாடுகள்:
1) திருப்பீடத்தில் குருவானவருக்கு ஒத்துழைத்தல்.
2) மாதத்திற்கு ஒரு தடவை ஒன்றுகூடி வழிபாட்டு ஒழுங்குகளை அறிந்து ஆயத்தமாகுதல்;.
3) ஆலயத்தை சுத்தம் செய்தல்.
4) செபத்தில் இணைதல்.
5) அங்கத்தவர்களின் இல்லம் தரிசித்தல்.

குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள், என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கிறார். அவரிடம் வந்துள்ள, அவரது பீடத்திற்கு அருகில் பணிசெய்யும் பீடப்பணியாளர்கள் எப்படிவாழவேண்டும், என்னசெய்யவேண்டும் போன்ற நல்ல செயல்களை இந்த குழமத்தினூடாக அறிந்து உற்சாகத்தோடு உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். 

 

 

ஒருங்கிணைப்பாளர் :

Mickingston Michaelthasan

Mob: 47747735

E-post: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.