பேர்கன் தமிழ் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம்

 சமுதாயத்தில் இளைஞர்கள் பெரும் செல்வாக்குக் கொண்டுள்ளனர். இவர்களின் வாழ்க்கைச் சூழல்கள், மனநிலைகள், தங்கள் குடும்பங்களோடு இவர்கள் கொண்டுள்ள பிணைப்பு அனைத்துமே மாற்றம் அடைந்துள்ளன. இவர்கள் புதிய சமூகம், பொருளாதார சூழல்களுக்கு தங்களை அடிக்கடி மாற்றிக்கொள்பவர்கள். சமுதாயத்தில் உயர்வடைந்திருக்கும் இவர்களது செல்வாக்கு திருச்சபையிலும் உயர்வடைய வேண்டுமென்பதே திருச்சபையின் ஆவலாகும்.
இவர்களிடமிருக்கின்ற ஆற்றல்களை, இயல்பான பண்புகளை இனங்கண்டு, தங்களைப் பற்றி அதிகம் உணரவைத்து அவர்களை வாழ்வின் நேரியபாதையில் வழிநடத்துவதே திருச்சபையின் நோக்கமாகும்.
எமது திருச்சபையின் நோக்கத்திற்கு இணங்க சமுதாயவாழ்விலும், விசுவாசவாழ்விலும், பண்பாட்டுவாழ்விலும் பேர்கன் தமிழ் கத்தோலிக்க இளைஞர்கள் தங்கள் பொறுப்பை உணரந்து விசுவாச ஆர்வத்துடன் கிறிஸ்துவின் பாதச்சுவட்டை பின்பற்றி நடக்கவேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்டதே பேர்கன் தமிழ் கத்தோலிக்க இளைஞர்ஒன்றியம்.

செயற்பாடுகள்
1) திருப்பலி மற்றும் வழிபாடுகளில் பங்களிப்புச் செலுத்துதல்
2) தமிழ் கத்தோலிக்க சமய, சமுக பண்பாட்டு வாழ்வில் ஆர்வமாயிருத்தல். 
3) ஓன்றுகூடல்கள், கருத்தமர்வுகள், சுற்றுப்பயணங்கள் போன்றவற்றை முன்னெடுத்து தம் தலைமைத்துவ ஆளுமைப் பண்பை வளர்த்து தமிழ் கர்தோலிக்க இளையோர் என்ற தம் அடையாளத்தோடு வளர்தல்.
4) தம் ஆற்றல் கல்வி, அறிவு, திறமைகளினால் தாம் சார்ந்த சமுகத்திற்கு பங்களிப்பும் தலைமைத்துவமும் வழங்குதல் போன்ற பணிகளினால் தாம் வாழும் மண்ணில் பேர்கன் தமிழ் கத்தோலிக்க இளையோர் உப்பாகவும் ஒளியாகவும் எதிர்கால நம்பிக்கையாகவும் திழ்கிறார்கள்.

 

ஒருங்கிணைப்பாளர் :