ஆண்டவரது  மலையில்  ஏறத்  தகுதியுள்ளவர்  யார்?  அவரது  திருத்தலத்தில்  நிற்கக்  கூடியவர்  யார்?  கறைபடாத  கைகளும்  மாசற்ற  மனமும்  உடையவர்;  பொய்த்  தெய்வங்களை  நோக்கித்  தம்  உள்ளத்தை  உயர்த்தாதவர்;  வஞ்சக  நெஞ்சோடு  ஆணையிட்டுக்  கூறாதவர்,  இவரே  ஆண்டவரிடம்  ஆசி  பெறுவார்;  தம்  மீட்பராம்  கடவுளிடமிருந்து  நேர்மையாளர்  எனத்  தீர்ப்புப்  பெறுவார்.  திருப்பாடல்கள் 24: 3-6

ஒவ்வொரு  மனிதனின்  மாண்பை  அங்கீகரிப்பதன்மூலம்,  உலகம்  முழுவதும்  உள்ள  சகோதரத்துவத்திற்கான  விருப்பத்திற்கு  நாம்,  அனைவருக்கும்  புத்துயிர்  அளிக்கலாம்.

சகோதரத்துவம்  என்பது,  மனிதகுலத்தின்  பயணத்திற்கான  படைப்பாளரான  கடவுள்  வடிவமைத்த  இலக்காக  இருக்குமேயானால்,  அந்த  முக்கிய  இலக்கு  அங்கீகரிப்பதுதான்  ஒவ்வொரு  மனிதரின்  மாண்பாகும்.                              திருத்தந்தை  பிரான்சிஸ்

வழிபாட்டுக்குழுவினர்


திருஅவையின் வாழ்வின் ஊற்றும் மையமும் உச்சமுமாய் இருப்பது திருப்பலியே. வழிபாடுகளே இறைவனை மனிதரிடமும், மனிதரை இறைவனிடமும் ஐக்கியப்படுத்துவதில் முதலிடம் பெறுகின்றது. இயேசுவின் இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்ற வேண்டுகோள் அவரது கல்வாரிப் பலியை ஆலயப்பீடத்தில் இரத்தம் சிந்தாவகையில் மீண்டும் மீண்டும் ஒப்புக்கொடுக்க உன்னத சந்தர்ப்பம் தந்திருக்கின்றது. 
அத்தகைய வழிபாடுகளை பக்திசிரத்தையோடும் ஒழுங்குநேர்த்தியோடும் ஒழுங்கமைக்க குருவிற்கு ஒத்தாசையாகப் பணியாற்றுகின்ற ஒரு குழுமமே வழிபாட்டுக் குழுவினர். ஆலயத்திற்குள்ளும் பிறஇடங்களிலும் பொதுவழிபாட்டு ஒழுங்குளை மேற்கொண்டு வாழிபாடுகள் சிறக்க இக்குழுவினர் உழைக்கின்றார்கள். 
செயற்பாடுகள்


1) திருப்பலி மற்றும் வழிபாடுகளை ஒழுங்குபடுத்தல்.
2) வழிபாடுகளுக்குரிய முன்னுரை, மன்றாட்டு, நன்றிச்செபங்களை ஆயத்தம்செய்து வாசகர்களைநியமித்தல். 
3) வணக்கமாதம் போன்ற விசேடதருணங்களில் இறையன்னையின் திருச்சுரூப வீட்டுத் தரிசிப்பு மற்றும் செபமாலைதியானத்தில் குடும்பங்களை ஊக்குவித்தல்.
4) இறைவார்த்தைப்பகிர்வு போன்ற செபவழிபாடுகளை ஒழுங்கமைத்தல்.

இவ்வாறான பணிகளினால் தாம் வாழும் இந்த பேர்கன் மண்ணில் தமிழ்மொழியில் கத்தோலிக்க இறைவழிபாடும் ஆன்மிகமும் சிறக்ககுருவுடன் இணைந்துசெயலாற்றுகின்றது பேர்கன் தமிழ் கத்தோலிக்க வழிபாட்டுக் குழு.

 

ஒருங்கிணைப்பாளர்:

Chrishanthi Elmer

Tel:  92859649

E-post:  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

Go to top
Template by JoomlaShine