மறையாசிரியர்
- Details
- Super bruker
- மறையாசிரியர்
- Hits: 3600
மறையாசிரியர் குழுமம்
இயேசுவின் பணி இறையரசின் பணி. இருள் நிறைந்த இவ்வுலகில் இறைவனின் அருளாட்சியை மலரச்செய்ய தன்னை முற்றிலும் அர்ப்பணித்தவர் இயேசு. இறையரசின் ஆக்கமும் அறிவிப்பும்தான் அவரது உயிர்மூச்சு. இந்த இறையரசுப்பணிக்கு அத்திவாரமாக திருச்சபையை ஏற்படுத்தி அதை வழிநடத்த சீடர்கள், ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலையினர் போன்றோரை தேர்ந்தெடுத்தார்.
திருச்சபையின் உயிர்மூச்சாகிய இறையரசை கட்டியெழுப்பும் பணி புலம்பெயர் மண்ணில் வாழும் கத்தோலிக்க பொதுநிலையினரிடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறானதோர் உன்னத பணியினூடாக நாம் வாழும் இச்சமூகத்திலே எதிர்கால சந்ததியினரை கத்தோலிக்க மறை அறிவிலும் விசுவாசத்திலும் வளர்த்தெடுக்கவும், திரு அவையைக் கட்டியெழுப்பவும் அழைக்கப்பட்டவர்கள் தான் பேர்கன் புனிதபவுல் பங்குதமிழ் மறையாசிரியர் குழுமம். மறைக்கல்வியின் அடிப்படை நோக்கம் இறையரசை வளரச்செய்வதே ஆகும்.
செயற்பாடுகள்:
1) பங்கில் மறைக்கல்வி வகுப்புக்கள் நடாத்துதல்.
2) காலத்திற்குக்காலம் எமது மறைக்கல்வி மாணவமாணவியர் மத்தியில் மறையறிவை மேம்படுத்த நிகழ்வுகள், போட்டிகளை நடத்துதல்.
3) மறைவாழ்வுசார் கருத்தரங்குகளை ஒன்றுகூடல்களை ஒழுங்கமைதல் போன்ற பணிகளினால் தாம் வாழும் இந்த பேர்கன் மண்ணில்
இறையரசைக் கட்டியெழுப்பும் பணியில் குருவுடன் இணைந்து செயலாற்றுகின்றது இந்தமறையாசிரியர்குழாம்.
ஒருங்கிணைப்பாளர் :
Malini Anton Rajeswaran
Mob: 91334915
E-post: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.