- Details
- Super bruker
- அகிலத் திருஅவை
- Hits: 1603
உயிர்த்த கிறிஸ்துவை அறிவிப்பது ஒன்றே, திருஅவையின் முக்கிய பணி
உலகெங்கும் இன்று நிலவிவரும் குடிபெயர்தல் என்ற எதார்த்தத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்தவர், புனித Charles Borromeo என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு துறவு சபையின் உலகப் பிரதிநிதிகளிடம் கூறினார்.
Scalabrinian மறைபரப்புப் பணியாளர்களுடன் திருத்தந்தை
- Details
- Super bruker
- அகிலத் திருஅவை
- Hits: 1665
மீட்பின் தேவை குறித்த உணர்வே, விசுவாசத்தின் துவக்கம்
செவிமடுப்பது, அருகிருப்பது, மற்றும், சாட்சி பகர்வது என்ற மூன்று நிலைகளும் விசுவாசப் பயணத்தின் முக்கியப் படிகள் என 28, ஞாயிறு திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர்களுடனும், அதில் பங்குபெற்ற ஏனைய உறுப்பினர்களுடனும் மாமன்ற நிறைவுத் திருப்பலியை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், அக்டோபர் 28, ஞாயிறன்று நிறைவேற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு வாசகம் எடுத்துரைத்த, பார்வைத் திறனற்ற பர்த்திமேயுவை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.
- Details
- Super bruker
- அகிலத் திருஅவை
- Hits: 1654
'ஒருவரையொருவர் அன்புடன் தாங்கிக்கொள்ளுங்கள்'
ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வளர்க்க திருத்தூதர் பவுல் கூறும் அறிவுரைகளை மையப்படுத்தி வெள்ளி-26.10.2018 காலையில் மறையுரை வழங்கிய திருத்தந்தை, அதன் தொடர்ச்சியாக அக்கருத்தை, தன் டுவிட்டர் செய்தியிலும் பகிர்ந்துகொண்டார். "நம்மிடையே ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு, 'ஒருவரையொருவர் அன்புடன் தாங்கிக்கொள்ளுங்கள்' என்று, புனித பவுல், நடைமுறைக்கு ஏற்ற அறிவுரையை வழங்குகிறார்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக வெள்ளியன்று வெளியிட்டார்.
- Details
- Super bruker
- அகிலத் திருஅவை
- Hits: 1570
நம் முயற்சிகளில் மற்றவர்களையும் இணைப்போம்
மற்றவர்களோடு இணைந்து நாம் அனைத்தையும் சாதிக்க முடியும் என்ற கருத்தை மையமாக வைத்து இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'வருங்காலத்தை நீங்கள் உங்கள் கரங்களோடும், இதயத்தோடும், அன்போடும், ஆர்வத்தோடும் கனவுகளோடும் கட்டியெழுப்புவீர்கள். மற்றவர்களோடு இணைந்து' என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
- Details
- Super bruker
- அகிலத் திருஅவை
- Hits: 1883
இயேசுவை அடித்தளமாகக் கொண்டிருப்பது துணிகச் செயல் 25.10.2018
நாம் பாவிகள் என்று ஏற்றுக்கொள்வதே, இயேசு கிறிஸ்துவின் அன்பை புரிந்துகொள்வதற்கு முதல் படியாக அமைகிறது என்றும், இதைத் தொடர்ந்து நாம் 'வெறும் வார்த்தையளவில் கிறிஸ்தவர்களாக' இருக்க முடியாது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வியாழன் 25.10.2018 வழங்கிய மறையுரையில் கூறினார்.