அருட்டந்தை அன்ரன் றஞ்சிற் பிள்ளைநாயகம்

கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயர்

கத்தோலிக்க திரு அவையின் தலைமை ஆயர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கை, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக அருட்டிரு அன்ரன் றஞ்சிற் பிள்ளைநாயகம் அவர்களை கடந்த 13-07-2020 அன்று நியமித்தார்.

1966ம் ஆண்டு புரட்டாதி 23ம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்த அன்ரன் றஞ்சிற் அவர்கள் தம் ஆரம்ப, இடைநிலைக்கல்வியை கொழும்பிலும், உயர்கல்வியை யாழ். சம்பத்தரிசியார் கல்லூரியிலும், விஞ்ஞானப் பட்டப்படிப்பை யாழ் பல்கலைக் கழகத்திலும் நிறைவுசெய்தார். 

2000ம் ஆண்டு புரட்டாதி 16ம் நாள் கொழும்பில் குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட அன்ரன் றஞ்சிற் அவர்கள், கடந்த 20 ஆண்டுகளாக கொழும்பின் பல பிரபல கல்லூரிகளில் ஆசிரியாரகவும் துணை அதிபராகவும் பணியாற்றி வருகிறார்.

புதிய துணை ஆயராக நியமனம் பெற்றிருக்கும் ஆயரவர்களின் பணி சிறக்க நாமும் செபிக்கிறோம், வாழ்த்துகிறோம்.