ஆண்டவர்  உம்மை  வேடரின்  கண்ணியினின்றும்  கொன்றழிக்கும்  கொள்ளை  நோயினின்றும்  தப்புவிப்பார்.  அவர்  தம்  சிறகுகளால்  உம்மை  அரவணைப்பார்;  அவர்தம்  இறக்கைகளின்கீழ்  நீர்  புகலிடம்  காண்பீர்;  அவரது  உண்மையே  கேடயமும்  கவசமும்  ஆகும்.  இரவின்  திகிலுக்கும்  பகலில்  பாய்ந்துவரும்  அம்புக்கும்  நீர்  அஞ்சமாட்டீர்.  இருளில்  உலவும்  கொள்ளை  நோய்க்கும்  நண்பகலில்  தாக்கும்  கொடிய  வாதைக்கும்  நீர்  அஞ்சமாட்டீர்.      திருப்பாடல்கள் 91:3b-6

மனிதரான  கடவுளே,  தொழிலை  வெறுத்து  ஒதுக்கவில்லை  என்பதை,  தொழிலாளரான  புனித  யோசேப்பு  நமக்கு  நினைவுபடுத்துகிறார்.  எந்த  ஓர்  இளையோரும்,  எந்த  ஒரு  மனிதரும்,  எந்த  ஒரு  குடும்பமும்,  வேலையின்றி  இருக்கக்கூடாது  என்பதை  நாம்  உறுதியுடன்  சொல்வதற்குரிய  வழிகளைக்  காண,  புனித  யோசேப்பிடம்  மன்றாடுவோம்!

 

திருத்தந்தை  பிரான்சிஸ்

நோர்வேயில் முதல் தமிழ் குரு அருள்பணியாளர் பிராங்ளின் பெர்ணாண்டோ     குருத்துவ அருள்பொழிவும் முதல் திருப்பலியும்


2020ம் ஆண்டு ஜூன் 20ம் நாள் நோர்வே தளத்திரு அவை வரலாற்றில் இன்னுமொரு முக்கிய நாளாகும். அருட்சகோதரர் பிராங்ளின் பெர்ணாண்டோ அவர்கள் ஒஸ்லோ மறைமாவட்ட ஆயர் மேதகு பேர்ண்ற் ஐட்ஸ்விக் (Bernt Eidsvig) அவர்களால் ஒஸ்லோ புனித யோவான் ஆலயத்தில் அருள்பணியாளராக குருத்துவ அருள்பொழிவு செய்யப்பட்டார்.

நோர்வே கத்தோலிக்க திருச்சபை

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கத்தோலிக்க விசுவாசம் நோர்வே மண்ணில் நிலைகொண்டது. புனித ஊளாவ் (St Olav) என்னும் நோர்வேஜிய மன்னன் கத்தோலிக்க மறையைப் பரப்ப தம் உயிரையும் ஈந்தார். பின்பு மத்தியகாலத்தில் எழுந்த  பிரிவினைச் சபையின் நெருக்குவாரத்தினால் நோர்வே கத்தோலிக்க திருச்சபை களையிழந்தது.
இருபதாம் நூற்றாண்டின் இறுதி தாசப்தங்களிலும் தொடர்ந்த 2000ம் ஆண்டையடுத்த  காலத்திலும் நோர்வேயை நோக்கிப் புலம்பெயர்ந்த கணிசமான கத்தோலிக்கரின் வருகையைத் தொடர்ந்தும் நோர்வே கத்தோலிக்க திருச்சபை புதுவடிவம் பெறுகிறது.
நோர்வே கத்தோலிக்க திருச்சபை முறையே, ஒஸ்லோ (Oslo), ட்றொம்சோ (Tromsø), ட்றொண்ட்ஹைய்ம்(Trondheim) என மூன்று நிர்வாக மறையலகுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் சுமார் 150000 கத்தோலிக்கரைக் கொண்டிருக்கும் ஒஸ்லோ மறைமாவட்டம் அதி வந்தனைக்குரிய ஆயர் பேர்ண்ற் ஐட்ஸ்விக் (Bernt Eidsvig) ஆண்டகை அவர்களின் ஆயத்துவத்தில் வளர்ந்து வருகின்றது. மொத்தம் 28 பங்குப் பணித்தளங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒஸ்லோ மறைமாவட்டத்தில் ஆயரவர்களோடு இணைந்து சுமார் 70 குருக்களும், 25இற்கு மேற்பட்ட துறவற சபைகளைச் சேர்ந்த ஆண், பெண் துறவிகளும் இன்னும் நூற்றிற்கு மேற்பட்ட பொது நிலைப்பணியாளர்களும் ஆர்வமாய்ப் பணிபுரிகின்றனர்.

 

Go to top
Template by JoomlaShine