ஆண்டவர்  உம்மை  வேடரின்  கண்ணியினின்றும்  கொன்றழிக்கும்  கொள்ளை  நோயினின்றும்  தப்புவிப்பார்.  அவர்  தம்  சிறகுகளால்  உம்மை  அரவணைப்பார்;  அவர்தம்  இறக்கைகளின்கீழ்  நீர்  புகலிடம்  காண்பீர்;  அவரது  உண்மையே  கேடயமும்  கவசமும்  ஆகும்.  இரவின்  திகிலுக்கும்  பகலில்  பாய்ந்துவரும்  அம்புக்கும்  நீர்  அஞ்சமாட்டீர்.  இருளில்  உலவும்  கொள்ளை  நோய்க்கும்  நண்பகலில்  தாக்கும்  கொடிய  வாதைக்கும்  நீர்  அஞ்சமாட்டீர்.      திருப்பாடல்கள் 91:3b-6

மனிதரான  கடவுளே,  தொழிலை  வெறுத்து  ஒதுக்கவில்லை  என்பதை,  தொழிலாளரான  புனித  யோசேப்பு  நமக்கு  நினைவுபடுத்துகிறார்.  எந்த  ஓர்  இளையோரும்,  எந்த  ஒரு  மனிதரும்,  எந்த  ஒரு  குடும்பமும்,  வேலையின்றி  இருக்கக்கூடாது  என்பதை  நாம்  உறுதியுடன்  சொல்வதற்குரிய  வழிகளைக்  காண,  புனித  யோசேப்பிடம்  மன்றாடுவோம்!

 

திருத்தந்தை  பிரான்சிஸ்

பேர்கன் கத்தோலிக்க திருச்சபை

ஒஸ்லோ மறைமாவட்டப் பங்குகளுள் விஸ்தீரணத்தாலும் ஒரே கோயிலைச் சார்ந்த கத்தோலிக்கரின் எண்ணிக்கையாலும் முதலிடம் பெறுகிறது பேர்கன் புனித பவுல் ஆலயப்பங்கு. மேற்கு நோர்வேயின் கேந்திரமாக விளங்கும் பேர்கன் நகர்மத்தியில் 1858ம் ஆண்டளவில் கட்டப்பட்ட புனித பவுல் ஆலயம் இன்று 20000ற்கு மேற்பட்ட கத்தோலிக்கரைக் கொண்டுள்ளது.
தற்போதைய பங்குக்குரு அருட்டிரு. டொம் அலொய்ஸ் ப்ரூடெர்சென் (Dom Alois Brodersen) இன்னும் அவரோடிணைந்து மேலும் 8 குருக்கள், பல்வேறு மொழிக்குழுமங்களுக்குப் பணிபுரியும் 3 ஆன்மிககுருக்கள் மற்றும் 12 அருட்கன்னியர்கள் 1 திருத்தொண்டர் அத்தோடு இன்னும் பல பொதுநிலைப்பணியாளர் போன்றோரின் சேவையினால் பேர்கன் புனித பவுல் ஆலயப்பங்கு வளர்ச்சி காண்டு வருகிறது.

Go to top
Template by JoomlaShine