திருவழிபாட்டுப் பாடல்கள்
ஞாயிறு திருப்பலி
பேர்கன், 24-4-2022
வருகைப்பாடல்
ஒலிவடிவம்
இறைவனின் ஆவி நிழலிடவே
இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே
என்னை அழைத்தார் அன்பில் பணித்தார்
அவர் பணிதனைத் தொடர்ந்திடவே
வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும்
அடிமைகள் விடுதலை அடைந்திடவும்
ஆண்டவர் அரசில் துயரில்லை என
வான்; அறிய பறை சாற்றிடவும்
என்னை அழைத்தார் அன்பில் பணித்தார்
அவர் பணிதனைத் தொடர்ந்திடவே
குருடரும் ஒளியுடன் நடந்திடவும்
குவலயம் நீதியில் நிலைத்திடவும்
அருள் நிறை காலம் அவனியிலே - இங்கு
வருவதை வாழ்வினில் காட்டிடவும்
என்னை அழைத்தார் அன்பில் பணித்தார்
அவர் பணிதனைத் தொடர்ந்திடவே
தியானப்பாடல் / பதிலுரைப்பாடல்
ஒலிவடிவம்
உயிர்த்த என் இறைவன் எனைத்தேடிவந்தார்
என் நம்பிக்கை பலமானது ஒருபோதும் இனி நான்
பயம் கொள்ளமாட்டேன்
என் ஆண்டவரின்; அடிதொட்டு நடப்பேன்
என் ஆண்டவரே என் தேவனே
நீரே என் கடவுள்
ஐயா நீரே என் கடவுள்
என் கண்கள் என்ன பாக்கியம் செய்தன
கண்டேன் கண்டேன் என் தேவனைக்கண்டேன்
காயத்தழும்பினை தொட்டுப்பார்தேன்
விரல்களை அங்கு இட்டுப்பார்த்தேன
நம்பினேன் நம்பினேன் என் ஆண்டரை நம்பினேன்
உள்ளத்தில் நான் கண்ட பெருஞ் ஜோதியை
உலகெங்கும் எடுத்துரைப்பேன் ஒளியேற்றுவேன்
இனிமாறாது மறையாது என் நம்பிக்கை
அடிதிரளாது திரையாது இறை மாளிகை
உலகெங்கும் நான் சொல்வேன் நற்செய்தியை
அன்பென்னும் ஆண்டவரின் திருப்பாடலை
நம்பினேன் நம்பினேன் என் ஆண்டரை நம்பினேன்
காணிக்கைப்பாடல்
ஒலிவடிவம்
உடல் பொருள் ஆவி எல்லாம் உன் பாதம் நான் படைத்தேன் -2
நான் பார்க்கும் உலகெல்லாம் உன் சொல்லின் விரிவுரையே அதில் வாழும் உயிர்களெல்லாம் உன் அன்பின் தொடர்கதையே அதைத் தந்தேன் பலிப்பொருளாய் ஏற்பாய் எனைத் தந்தேன் ஒரு பொருளாய் சேர்ப்பாய் திரு அப்பம்போல அதைப் பகிர்ந்து அனைவர்க்கும் வாழ்வருள்வாய்
நிறைவாழ்வு உனதாகும் நான் கண்டேன் பலிவாழ்வில் பொருள் வடிவில் பலி தந்தேன் உன் வாழ்வைத் தர வருவாய் புது உரு என என்னை மாற்றிடுவாய் புது உலகிது என நான் வாழ்வேன் திருமகன் சாயலில் வளரவிடும் நிறையருள் நான் பெறுவேன்
திருவிருந்துப்பாடல்
ஒலிவடிவம்
அன்பனே விரைவில் வா
உன் அடியேனைத் தேற்ற வா
அன்பனே விரைவில் வா
பாவச் சுமையால் பதறுகின்றேன்
பாதை அறியாது வருந்துகின்றேன்
பாதை காட்டிடும் உன்னையே நான்
பாதம் பணிந்து வேண்டுகின்றேன்
அமைதி வாழ்வைத் தேடுகிறேன்
அருளை அளிக்க வேண்டுகிறேன்
வாழ்வின் உணவே உன்னையே நான்
வாழ்வு அளிக்க வேண்டுகிறேன்
இருளே வாழ்வில் பார்க்கின்றேன்
இதயம் நொந்து அழுகின்றேன்
ஒளியாய் விளங்கும் உன்னையே நான்
வழியாய் ஏற்றுக் கொள்கிறேன்
ஏழ்மை நிலையில் இருக்கின்றேன்
அன்பு உருகிக் கிடக்கின்றேன்
வாழ்வின் விளக்கே உன்னையே நான்
வாழ்வின் துணையாய் பெறுகின்றேன்
நன்றிப் பாடல்
ஒலிவடிவம்
நன்றி யேசுவே உமக்கு நன்றி யேசுவே
மனிதனாய் படைத்து மாண்பினைக் கொடுத்து
என்னை இன்று வாழச்செய்யும் இறைவனை நான் பாடுவேன்
நன்றி யேசுவே மனிதனாய் படைத்து
மாண்பினைக் கொடுத்து என்னை இன்று வாழச்செய்யும்
இறைவனை நான் பாடுவேன்
ஓராயிரம் வார்தைகளில் தீராது எங்கள் நன்றி
கவலை கண்ணீர் போக்கி
கண்ணின் மணிபோல் காத்தீர்
உருக்குலைந்த என்னை உருமாற்றி
பலருக்கும் பயன் அளிக்கும் பகலவனாய் மாற்றினாய்
பயணங்கள் நிறைவேற பாதையாய் நீ ஆகினாய் - 2
நன்றி யேசுவே - உமக்கு நன்றி யேசுவே
பரந்து விரிந்த உலகில்
பணிகள் செய்து வாழ்ந்திடுவேன்
பதரான என்னை பயனாக்கி ஒரு கோடி ஓசைகளை
இசையோடு நான் பாடுவேன்
என்னையே நன்றியாய் தருகின்றேன் இறைவா - 2
நிறைவுப் பாடல்
ஒலிவடிவம்
அலைகடல் ஒளிர்மீனே - செல்வ
ஆண்டவர் தாயாரே - 2
நிலை பெயராக்கன்னி - மோட்ச
நெறிக்கதவே வாழி
வானவன் கபிரியேலின் - தூய
மங்களமொழி ஏற்பாய் - 2
ஞான சமாதான - வழிநாம்
நடந்திடத் தயை செய்வாய்
பாவ விலங்கறுப்பாய் - குருடர்
பார்த்திட ஒளிவிடுப்பாய் - 2
சாவுறும் தீமையெல்லாம் - நீக்கிச்
சகல நன்மை அளிப்பாய்
தாயென உனைக்காட்டாய் - உந்தன்
தனையனாம் இயேசுவுக்கு - 2
சேயர் நாம் செய்யும் செபங்கள் - எல்லாம்
சேர்த்து நீ ஒப்புவிப்பாய்
கன்னியரில் உத்தம - தாயே
கடும்பவம் நின்றெம்மை ஆள் - 2
உன்னத சாந்தமுள்ள . மரியே
உத்தம வரம் ஈவாய்