திருவழிபாட்டுப்  பாடல்கள்

25.12.2021

 

நத்தார்  தமிழ்  திருப்பலி

பேர்கன், 
25-12-2021

 

வருகைப்பாடல்

ஒலிவடிவம்

 

 

 

புது  சூரியன்  இந்த  இரவிலே 

உலகே  வியக்கும்  ஒளியிலே

புது  சந்திரன்  நம்  உருவிலே

ஆனந்தம்  நம்  கையிலே (2)

 

எழுவோம்  திருக்குலமே

இறைவன்  யேசுவை  வரவேற்க

இணைவோம்  ஒரு  குலமாய்

அன்பைக்  கொண்டாடுவோம்

 

சீயோனே  ஜெருசலமே

நற்செய்தி  உரைப்பவளே

உயர்மலை  நின்று  குரலெழுப்பு

அஞ்சாதே  என  முழங்கு (2)

இவரே  நம்  மெசியா

இவரால்  மீட்பைக்  கண்டோம் - 2

அதோ  விண்ணில்  மகிழ்ச்சி

இதோ  மண்ணில்  அமைதி

இன்பம்  பொங்கும்  happy  Christmas (2)

        

தகுந்த  வேளையில்  பதிலளித்து  உன்

 கண்ணீரைத்  துடைத்திடுவார்

விடுதலை  நாளில்  துணை  நின்று  உன்

வெற்றிக்கு  வழி  வகுப்பார் (2)

இவரே  நம்  ஆயன்  இவரின்  ஆடுகள்  நாம்  -  2    

அதோ  விண்ணில்  மகிழ்ச்சி

இதோ  மண்ணில்  அமைதி

இன்பம்  பொங்கும்  happy  Christmas (2)

 

 

 

தியானப்பாடல் / பதிலுரைப்பாடல்

ஒலிவடிவம்

 

 

 

இறைவார்த்தையான கடவுள் இன்று
நம்மிடையே குடிகொண்டார்
நிறை வாழ்வு வழங்க
இறை நிலை துறந்து
குழந்தையாய் பிறந்துள்ளார் (2)
வாருங்கள் வாருங்கள் இறைமக்களே
மீட்பராம் இயேசுவை பாடிடுவோம்
வாருங்கள் வாருங்கள் இறைமக்களே
மரியாளின் மைந்தனை பணிந்திடுவோம்

உலகில் உள்ள படைப்பு எல்லாம்
இறைவனால் உண்டானது
உயிர்கள் தழைக்க வாழ்வும் ஒளியும்
இயேசுவில் ஊற்றானது (2)
இயேசுவே உம்மீது நம்பிக்கை கொண்டு
உள்ளத்தில் ஏற்றுக்கொள்வேன்
கடவுளின் மகனாவேன் - நான்
கடவுளின் மகளாவேன்

மாட்சிமை நிறைந்த கடவுளின் பிரசன்னம்
யாருமே கண்டதில்லை
அப்பா தந்தை என உரிமையில் அழைக்கும்
யேசுவிற்கிணையில்லை (2)
இயேசுவின் வாழ்வில் உண்மையும் அருளும்
முழுமையாய் வெளிப்பட்டது
நிறை வாழ்வு மலர்ந்துள்ளது - இங்கு
குழந்தையாய் பிறந்துள்ளது 

 

 

காணிக்கைப்பாடல்

ஒலிவடிவம்

 

 

 

இயேசுவே உம் பிறப்பு
இந்த உலகுக்கு காணிக்கையே
இயேசுவே உம் வருகை
இறை அன்பதன் அர்ப்பணமே
கைமாறு நான் என்ன செய்வேன்
என்னையே காணிக்கை தந்தேன் - 2
இயேசுவே உம் பிறப்பு
இந்த உலகுக்கு காணிக்கையே
இயேசுவே உம் வருகை
இறை அன்பதன் அர்ப்பணமே

கரிஸ கரிஸ ஸாஸ நிஸபா மஸஸா ஸகரிம கா ரிகஸா
கரிஸ கரிஸ ஸாஸ நிஸபா பஸநிரிஸா பஸநிரிஸா
விண்மீன்கள் ஒளி காணிக்கை
விண்தூதர் துதி காணிக்கை (2)
பொன் தூப வெள்ளைப் போளம்
மூவேந்தர் இறை காணிக்கை
என் தேவா உம் பீடம்
ஏற்பாய் என்னைக் காணிக்கை

கரிஸ கரிஸ ஸாஸ நிஸபா மஸஸா ஸகரிம கா ரிகஸா
கரிஸ கரிஸ ஸாஸ நிஸபா பஸநிரிஸா பஸநிரிஸா
உடல் பொருளாவி காணிக்கை
உழைப்பதன் பயனும் காணிக்கை (2)
என்னிடையே உள்ளதெல்லாம்
வைத்தேன் இங்கு காணிக்கை
என் தேவா மகிழ்வுடனே
அளித்தேன் ஏற்பாய் காணிக்கை 

 

 

திருவிருந்துப்பாடல்

ஒலிவடிவம்

 

 

 

எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க
எனக்கென்ன கவலை என் இறைவா
இனி அச்சமென்பதெனக்கில்லை
வழி எங்கும் தடை இல்லை தலைவா (2)
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே
இறை அரசு நனவாகுமே - 2

உந்தன் வார்த்தை என் வாழ்வின்
உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே எந்தன் நெஞ்சுக்குள்ளே
எந்தன் நெஞ்சுக்குள்ளே பிறக்கவா - 2


வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன் - நான்
உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய் – 2
உந்தன் உறவானது ஆ… உயிர்த் துணையானது ஆ….
உந்தன் உறவானது உயிர்த் துணையானது
உந்தன் வார்த்தை என் வாழ்வின்
உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே ….

 

 

நன்றிப் பாடல்

ஒலிவடிவம்

 

 

 

கன்னி ஈன்ற செல்வமே
இம்மண்ணில் வந்த தெய்வமே (2)
கண்ணே மணியே அமுதமே – என்
பொன்னே தேனே இன்பமே
எண்ணமேவும் வண்ணமே
என்னைத் தேடி வந்ததேன்
ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ

எங்கும் நிறைந்த இறைவன் நீ
நங்கை உதரம் ஒடுங்கினாய்
ஞாலம் காக்கும் நாதன் நீ
சீலக்கரத்தில் அடங்கினாய்
தாயுன் பிள்ளை அல்லவா
சேயாய் மாறும் விந்தை ஏன்

வல்ல தேவ வார்த்தை நீ
வாயில்லாத சிசுவானாய்
ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ
அன்னை துணையை நாடினாய்
இன்ப வாழ்வின் மையம் நீ
துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்

 

 

நிறைவுப் பாடல்

ஒலிவடிவம்

 

 

 

வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார்

கீதங்கள் இசைக்கட்டும் நாதங்கள் முழங்கட்டும்
நேசங்கள் மலரட்டும்

இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று மலர்ந்தநாள் மண்ணிலே
இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று மலர்ந்தநாள் மண்ணிலே
அன்பின் குழந்தை இயேசுவே - உந்தன்
மழலை மொழி கேட்கவே - எந்தன்
மனமும் தினம் ஏங்குதே உந்தன்
மழலை மொழி கேட்கவே - எந்தன்
மனமும் தினம் ஏங்குதே
இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று மலர்ந்தநாள் மண்ணிலே
Happy christmas happy happy christmas
Merry  Christmas merry merry Christmas - 2

ஒரு விண் தெய்வம் நம்மோடு மண்மீதிலே
மழலையாய் மலர்ந்ததே – அந்த
விண் வாழ்க்கை நம்வாழ்வில் இந்நாளிலே
விடியலாய் புலர்ந்ததே
இனி வேற்றுமை மறையட்டும் எங்கும் வேதனை தீரட்டும் - 2
வையம் மகிழும் வான்படை போற்றும் வானதேவன் வரவில்
நல்ல இதயம் நிறையும் உதயம் மலரும்
தேவமைந்தன் உறவில்
இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று மலர்ந்தநாள் மண்ணிலே
Happy christmas happy happy christmas
Merry  Christmas merry merry Christmas - 2

 

 

 

 

 

திருவழிபாட்டுப்  பாடல்கள்

26.12.2021

 

திருக்குடும்பப்  பெருவிழா  ஞாயிறு  தமிழ்  திருப்பலி

புனித பவுல் ஆலயம், பேர்கன், 26-12-2021

 

 

வருகைப்பாடல்

ஒலிவடிவம்

 

 

 

இறையாட்சியின் மனிதர்களே மரி மைந்தனின் சீடர்களே
இறையழைக்கின்றார் அன்பில் இணைக்கின்றார் - புது
உலகொன்றைப் படைத்திட வாருங்களே

நாம் வாழும் இந்த பூமி நலமாகிட வேண்டாமா
நலிவுற்றவர் வாழ்வினில் நீதி இன்று
நிலைத்திட வேண்டாமா
இயேசுவே காட்டிய வழியுண்டு
இயங்கிட நமக்கொரு நெறியுண்டு
எதிர் நோக்குடன் வாருங்கள்
கதிர் விளைந்திடும் காணுங்கள்

இன்று மானிட இதயங்கள் எல்லாம்
ஒன்று சேர்ந்திட வேண்டாமா
இறையாட்சியின் மாற்றங்கள் எங்கும்
நிறைவேறிட வேண்டாமா
மாநிலம் முழுவதும் ஒரு குடும்பம்
மாந்தர்கள் எல்லாம் உடன்பிறப்பே
இந்த உண்மையை வாழ்ந்திடுவோம்
எந்தப் பகையினும் வென்றிடுவோம்

 

 

 

தியானப்பாடல் / பதிலுரைப்பாடல்

ஒலிவடிவம்

 

 

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் - 2
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் - 2
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் - 2
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்..

தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்-2
நிரந்தரம் -2 நீயே நிரந்தரம் - (2)
அம்மையப்பன் ….

செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலைவாழ்வு என்றும் நிஜமான நீயே நிரந்தரம்-
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் -2
நிரந்தரம் -2 நீயே நிரந்தரம் - 2 (2)
அம்மையப்பன்…. 

 

 

காணிக்கைப்பாடல்

ஒலிவடிவம்

 

 

 

உனக்கென நான் தரும் காணிக்கையை
உவப்புடன் ஏற்பாய் என் இறைவா - 2

பலியென எனை நான் தருகின்றேன்
உன் பதமலர் பணிந்து மகிழ்கின்றேன்
பதமலர் பணிந்து மகிழ்கின்றேன் - 2

உழைப்பின் கனியிது உனக்காக
உன்னருள் கொடைகளின் பலனாக
படைத்தவன் கரங்களில் மகிழ்வாக - 2
உன் படைப்பினில் சிறந்ததை தருகின்றேன்
படைப்பினில் சிறந்ததை தருகின்றேன்

உடல் பொருள் ஆவி உனக்காக
உன் பணி புவிதனில் நிறைவாக
மடிந்திடும் மனிதத்தின் விளக்காக - 2
நான் மகிழ்வுடன் என்னையே தருகின்றேன்
மகிழ்வுடன் என்னையே தருகின்றேன்

 

 

திருவிருந்துப்பாடல்

ஒலிவடிவம்

 

 

 

தேடும் அன்பு தெய்வம் - என்னைத்
தேடி வந்த நேரம்
கோடி நன்மை கூடும் - புவி
வாடும் நிலைகள் மாறும் - 2

இந்த வானதேவன் தந்த வாழ்வுப்பாதை
எந்தன் வாழும் காலம் போகும் - 2

உறவப்பாலம் இன்று வளர - இங்கு
இறைவன் அரசு மலர
உதயமாகி வந்து இதயம் யாவும் தந்து
உலகம் வாழவைத்த இறைவன்
ஞாலம் காத்த கலைஞன் என் தலைவன்
இந்த வானதேவன் ….

அடிமை அமைப்பு இங்கு ஒழிய – எங்கும்
மனித மாண்பு நிறைய
புரட்சிக் குரல் கொடுத்து புதிய வழிவகுத்து
புதுமை செய்த பெரும் புனிதன்
வாழ்வைக் கடந்த இறைவன் என் தலைவன்
இந்த வானதேவன் ….


வார்த்தையகி நின்ற இறைவன் - இந்த
வாழ்வைத் தேர்ந்த தலைவன்
பாரில் எங்கும் புதுப்பார்வை தந்து – அந்தப்
பாதையில் அழைத்த அறிஞன்
காலம் கடந்த கலைஞன் என் தலைவன்
இந்த வானதேவன் …. 

 

 

நன்றிப் பாடல்

ஒலிவடிவம்

 

 

 

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம்
இயேசு ராஜன் நம் சொந்தமாகினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்கார் அவர்
எந்தன் உள்ளத்தில் சொந்தமானார்
ஆ. .ஆ. . .ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே இந்த பார்தலத்தின் ….

சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டு கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்

எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும்வரை காத்துக் கொள்வேன்

 

 

நிறைவுப் பாடல்

ஒலிவடிவம்

 

 

 

அன்னைக்குக் கரம் குவிப்போம்

அவள் அன்பைப் பாடிடுவோம் - 2

கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் - அந்த
முன்னவனின் அன்னை எனத் திகழ்ந்தாள் - 2
மனுக்குலம் வாழ்ந்திடப் பாதை படைத்தாள் - 2
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்

பாவமதால் மனிதன் அருள் இழந்தான் - அந்த
பாசமதால் அன்னை கருணை கொண்டாள் - 2
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் - 2
பாவினில் அவள் புகழ் பாடிடுவோம்

 

 

 

திருவழிபாட்டுப்  பாடல்கள்

1.1.2022

 

மரியாள், இறைவனின் தாய் - வருடப் பிறப்பு திருப்பலிப் பாடல்கள் 


பேர்கன், 
1-1-2022

 

 

 

 

வருகைப்பாடல்

ஒலிவடிவம்

 

 

 

புனிதம் பிறந்தது புதுமை மலர்ந்தது
பாலனை காண வாருங்கள்
உலகம் ஒளிர்ந்தது இதயம் கனிந்தது
பாலனை பாட வருங்கள் (2)
அகரமும் நகரமும் இவரே – 2
இவர் ஆட்சிக்கு முடிவேது – 2

புனிதம் பிறந்தது புதுமை மலர்ந்தது
பாலனை காண வாருங்கள்


ஆண்டாண்டு காலமாய் மீட்பரை காணவே
ஆவலாய் காத்திருந்தோம்
ஆண்டவர் மீட்பராய் நமக்காக மண்ணில்
வந்திங்கு பிறந்துள்ளார் (2)
இம்மானுவேல் என்று அதை;திடுவோம்
கடவுள் நம்மோடு வாழ்ந்திடுவார் – 2
இவர் ஆட்சிக்கு முடிவேது – 2


வானமும் பூமியும் மீட்பரை பாடவே
ஆவலாய் அழைக்கின்றன
கீதமும் ராகமும் பாலனைச்சேரவே
நாம் இங்கு பாடிடுவோம் (2)
அமைதியின் அரசர் இவர்தானே
அகிலத்தின் வேந்தரும் இவர் தானே – 2
இவர் ஆட்சிக்கு முடிவேது – 2

புனிதம் பிறந்தது புதுமை மலர்ந்தது
பாலனை காண வாருங்கள்

 

 

 

தியானப்பாடல் / பதிலுரைப்பாடல்

ஒலிவடிவம்

 

 

 

தெய்வீக ராகம் இசைத்தேனே உனக்காய்
என் இயேசு பாலா கண் மூடி தூங்கு - 2
விண்ணக தூதர் தாலாட்டும் இசையில்
உனக்காக நான் பாடுவேன் - 2
தெய்வீக ராகம் இசைத்தேனே உனக்காய்
என் இயேசு பாலா கண் மூடி தூங்கு

என்னன்பு தேவா எனைத்தேற்றும் நாதா
உலகிற்கு வளியாக வந்தீர்
மண்மீது இன்று நீர் மனுவான போது
எனதுள்ளம் மகிழ்வானது
என் மீட்பரே என் நேசரே
தெய்வீக ராகம் நான் மீட்டுவேன் - 2
விண்ணக தூதர் தாலாட்டும் இசையில்
உனக்காக நான் பாடுவேன் - 2
தெய்வீக ராகம் இசைத்தேனே உனக்காய்
என் இயேசு பாலா கண் மூடி தூங்கு - 2

அறியாத உலகில் புரியாத உறவில்
நிலையான சொந்தம் நீர் தானே
மாறாத அன்பை நான் காணும் போது
என் வாழ்வு அமுதானது
என் மீட்பரே என் நேசரே
தெய்வீக ராகம் நான் மீட்டுவேன் - 2
விண்ணக தூதர் தாலாட்டும் இசையில்
உனக்காக நான் பாடுவேன் - 2
தெய்வீக ராகம் இசைத்தேனே உனக்காய்
என் இயேசு பாலா கண் மூடி தூங்கு – 2
விண்ணக தூதர் தாலாட்டும் இசையில்
உனக்காக நான் பாடுவேன் - 2 

 

 

காணிக்கைப்பாடல்

ஒலிவடிவம்

 

 

 

தெய்வீகப் பலியில் உறவாடும் தெய்வமே – 2
உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன்
காணிக்கை ஏற்றிடுவாய் - 2

வானம் காணும் ஒளியெல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை - 2
மேகம் சிந்தும் துளியெல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை
இந்த நினைவில் எந்தன் வாழ்வை
காணிக்கை தந்தேன் உன் மலர்ப்பாதம்
தெய்வீகப்பலியில் …..

வேதம் சொன்ன வழியெல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை - 2
பாதம் படைத்த கனியெல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை
உந்தன் நினைவில் எந்தன் வாழ்வை
காணிக்கை தந்தேன் உன் மலர்ப்பாதம்
தெய்வீகப்பலியில் …..

 

 

திருவிருந்துப்பாடல்

ஒலிவடிவம்

 

 

 

ஒளியாக எழுந்து வா
எந்தன் இருளை நீக்க விரைந்துவா - 2
ஆனந்த வாழ்வை அளிக்க வா - 2
என் நெஞ்சினில் ஒளியை ஏற்ற வா லலலா…

வறியோர் வாழ்வில் வளம் பெறவும்
உபாதையில் தவிப்போர் குணம் பெறவும் - 2
உரிமைகள் வாழ்வில் கிடைக்கவும் - 2
உலகினில் நீதி செழிக்கவும் லலலா

ஏற்றம் வாழ்வில் தினம் பெறவும்
ஏமாற்றம் இன்றி நலம் பெறவும் - 2

அன்பினை நெஞ்சினில் விதைக்கவும் - 2
ஆனந்த வாழ்வு மலரவும் லலலா…
ஒளியாக எழுந்து வா
எந்தன் இருளை நீக்க விரைந்துவா - 2
ஆனந்த வாழ்வை அளிக்க வா - 2
என் நெஞ்சினில் ஒளியை ஏற்ற வா லலலா…

 

 

நன்றிப் பாடல்

ஒலிவடிவம்

 

 

 

இசைமழையில் தேன் கவி பொழிந்தே
பாலன் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள்
இசைமழையில் தேன் கவி பொழிந்தே
பாலன் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள்

வான் மலர்தான் இப்புவியினிலே
மலர்ந்திட்டதே நம் வாழ்விலின்று
வான் மலர்தான் இப்புவியினிலே
மலர்ந்திட்டதே நம் வாழ்விலின்று
நமக்காய் பிறந்தார் பாசம் கொண்டு
வாழ்வின் மீட்பின் பாதையிலே

இசைமழையில் தேன் கவி பொழிந்தே
பாலன் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள்

மாசற்றவர் நம்வாழ்வினிலே
மகிமை இன்றே கண்டோமே இன்று
மாசற்றவர் நம்வாழ்வினிலே
மகிமை இன்றே கண்டோமே இன்று
விடிவெள்ளியாக தேவபாலன்
தாழ்மை தாங்கி அவதரித்தார்

 

 

நிறைவுப் பாடல்

ஒலிவடிவம்

 

 

 

நீயே எந்தன் அடைக்கலமே
உன்னையன்றி எனக்கேது சொந்தமே -2
உன் பார்வையில் உன் வழியில்
கரம்பிடித்து நடத்திடுமே -2
அம்மா தாயே மரியே
தஞ்சமென்று நம்பி வந்தேன்
நீயே……சொந்தமே

மனுக்குலம் எடுத்து மரியான தாயே
வாழ்வினை மறந்து கன்னியான தாயே -2
இயேசுவை சுமந்த தாயே
மாந்தர்க்கு தாயான தாயே -2
உலகிற்கு தயவாக இருக்கின்ற தாயே
நம்பிக்கை தீபமாய் ஒளிர்ந்திடும் தாயே
உன் பார்தையில் ……………

உலகத்தை மீட்ட இயேசுவின் தாயே
துன்பத்தைத் தாங்கிய வெற்றியின் தாயே -2
அழிவை அகற்றிய தாயே
வாழ்வை வழங்கிய தாயே -2
மண்ணில் மனிதத்தை நேசிக்கும் தாயே
எளிமையின் வடிவாய் இருக்கின்ற தாயே
உன் பாதையில்………………..