என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும்  வல்லமை,  என்  அரண்.  போற்றற்குரிய  ஆண்டவரை  நோக்கி  நான்  மன்றாடினேன்;  என்  எதிரிகளிடமிருந்து  நான்  மீட்கப்பட்டேன்.  சாவின்  கயிறுகள்  என்னை  இறுக்கின;  அழிவின்  சுழல்கள்  என்னை  மூழ்கடித்தன.  பாதாளக்  கயிறுகள்  என்னைச்  சுற்றி  இறுக்கின;  சாவின்  கண்ணிகள்  என்னைச்  சிக்க  வைத்தன.  என்  நெருக்கடிவேளையில்  நான்  ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.  திருப்பாடல்கள் 18: 1-6

ஏழைகளுக்கு மிகத்தாராளத்தோடு ஆற்றப்படும் அன்புப்பணியின் வழியாக மட்டுமே, கிறிஸ்துவில் நம் உரிமை வாழ்வு வளரும் மற்றும், கனிதரமுடியும் எனவும், புனித பவுல் நமக்குச் சொல்கிறார். இயேசு, தம் பாடுகள், மற்றும், மரணத்திற்கு முந்திய நாளில், தம் சீடர்களோடு இறுதி இரவு உணவு அருந்தியபோது, தன்னலமற்ற அன்பு வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார். அவர் அந்நிகழ்வில் தம் சீடர்களின் பாதங்களைக் கழுவினார். அவ்வாறே நாமும் செயல்படவேண்டுமென்று அவர் போதிக்கிறார். கிறிஸ்தவ உரிமை வாழ்வு, முக்கிய சமுதாய அம்சங்களையும் கொண்டிருக்கின்றது. தற்போதைய பெருந்தொற்றின் பாதிப்புக்கள், உரிமை வாழ்வின், தான் என்ற தன்னலக் கருத்தியலைக் குறைத்து, ஆழமான குழும உணர்வைக் கண்டுணர அழைப்புவிடுக்கிறது.         

 

திருத்தந்தை  பிரான்சிஸ்

திருவழிபாட்டுப்  பாடல்கள்

24.10.2021

 

ஞாயிறு  தமிழ்  திருப்பலி

புனித  பவுல்  ஆலயம்,  பேர்கன்.

24-10-2021

 

வருகைப்பாடல்

ஒலிவடிவம்

 

 

அன்பினில் இணைந்த இறைகுலமே

ஆவியில் மலர்ந்த புது இனமே - இறை

இயேசுவின் அரசினை அமைத்திட நீயும்

இறைவனின் அழைப்பினை ஏற்று வா ஆ...

 

எளிய நிலையில் உள்ளோர் ஏற்றம் பெறுவர் என்று

உரைத்திட விரைந்திடுவாய்

அடிமை வாழ்வில் உள்ளோர் உரிமை யாவும் பெற

வழிதனைக் காட்டிடுவாய்

புதிய வானமும் புதிய பூமியும் மாந்தர் நம்மிலே மலர்ந்திட

வருக இறையே வருக எழுக விரைந்து எழுக ஆ - 2

 

சிறையில் வாடும் பல மாந்தர் வாழ்வை இன்று

மாற்றிட எழுந்திடுவாய்

தனிமைத் தீவில் நின்று தவிப்போர் நிலையை கண்டு

துணிவினைத் தந்திடுவாய்

புதிய வானமும் புதிய பூமியும் மாந்தர் நம்மிலே மலர்ந்திடுக

வருக இறையே வருக எழுக விரைந்து எழுக ஆ 

 

 

தியானப்பாடல் / பதிலுரைப்பாடல்

ஒலிவடிவம்

 

 

பார்வை பெற வேண்டும்

நான் பார்வை பெற வேண்டும்

என் உள்ளம் உன்னொளி பெறவேண்டும்

புதுப் பார்வை பெற வேண்டும்

நான் பார்வை பெற வேண்டும்

 

வாழ்வின் தடைகளைத்தாண்டியெழும்

புதுப் பார்வை பெறவேண்டும் - 2

நாளும் பிறக்கும் உன்வழியை

காணும் பார்வை தரவேண்டும் - 2

உன்னாலே எல்லாமுமே

ஆகும் நிலை வேண்டும்

நான் பார்வை பெற வேண்டும்

 

பார்வை பெற வேண்டும்

நான் பார்வை பெற வேண்டும்

என் உள்ளம் உன்னொளி பெறவேண்டும் 

புதுப் பார்வை பெற வேண்டும்

நான் பார்வை பெற வேண்டும்

 

நீதி நேர்மை உணர்வுகளை நான்

பார்க்கும் வரம் வேண்டும் - 2

உண்மை அன்பு உயர்ந்திடவே

உழைக்கும் உறுதி தரவேண்டும் - 2

எல்லோரும் ஒன்றாகவே வாழ வழிவேண்டும்

நான் பார்வை பெற வேண்டும்

 

பார்வை பெற வேண்டும்

நான் பார்வை பெற வேண்டும்

என் உள்ளம் உன்னொளி பெறவேண்டும்

புதுப் பார்வை பெற வேண்டும்

நான் பார்வை பெற வேண்டும்

பார்வை பெற வேண்டும்

 

 

காணிக்கைப்பாடல்

ஒலிவடிவம்

 

 

இறைவா படைக்கின்றேன் இரங்கி ஏற்க வா

என்னையே தருகின்றேன் ஏற்று மகிழ வா

இறைவா படைக்கின்றேன்

 

வாழ்வில் உந்தன் அருட்கரம்

வடித்த பெருஞ் செயல்களை

நினைந்து மகிழ்ந்து பாடினேன் - 2 - அந்த

நினைவில் என்னையே தருகின்றேன் - 2

 

அப்பமும் இரசமும் படைக்கையில்

அதன் வழி என்னை முழுவதும்

உன் மகன் பலியில் ஒன்றித்து - 2 - என்றும்

விண்ணவன் உமக்குத் தருகின்றேன் - 2

 

 

 

திருவிருந்துப்பாடல்

ஒலிவடிவம்

 

 

இயேசுவே என் உள்ளம் வாருமே என்

உள்ளத்தில் நீர் வந்து தங்குமே

பேசுமே என்னோடு பேசுமே

இயேசுவே இயேசுவே இயேசுவே

 

ஆசையாய் நான் காத்திருக்கிறேன்

ஆண்டவர் இயேசு என்னில் வர வேண்டும்

ஆண்டவர் இயேசு என்னில் வளர்ந்திட வேண்டும்

ஆண்டவர் இயேசு என்னை ஆட்கொள்ள வேண்டும்

 

நீயில்லாமல் வாழ்ந்தபோது வெறுமையாகினேன்

நீ என் வாழ்வில் கலந்தபோது முழுமையாகினேன்

நீ என்னோடும் நான் உன்னோடும் கலந்திட வேண்டும்

நாளும் நெஞ்சில் புதியராகம் மலர்ந்திட வேண்டும்

 

 

நன்றிப் பாடல்

ஒலிவடிவம்

 

 

படைப்புக்களே நம் ஆண்டவரைப் பாடுங்களே

நீங்கள் பாடுங்களே - 2

 

அருஞ்செயல் எனக்கு அவர் செய்தார்

ஆனந்தமே என்னில் ஆனந்தமே

 

அன்பீந்தார் அருள் தந்தார் -

பண்பும் பணிவும் அவர் அளித்தார்

யார் என்னைக் கைவிடினும் -

ஆண்டவர் என்னை அழைக்கின்றார்

இறைவனின் அன்பினுக்கு –

இந்த உலகினில் உவமையுண்டோ – 2

 

மனம் கலங்கி பரிதவித்தேன் -

நிம்மதி மனதில் எனக்களித்தார்

மாசுடன் நான் நிற்கையிலே -

மன்னிப்பு அவர் எனக்களித்தார்

இறைவனின் அன்பினுக்கு -

இந்த உலகினில் உவமையுண்டோ - 2

 

 

நிறைவுப் பாடல்

ஒலிவடிவம்

 

 

அலையொளிர் அருணனை அணிந்திடுமா

மணிமுடி மாமரி நீ

 

வாழ்க்கையின் பேரரசி

வழுவில்லா மாதரசி

கலையெல்லாம் சேர்ந்தெழு

தலைவியும் நீயல்லோ

காலமும் காத்தருள்வாய்

 

அகால வேளையிலே

அம்மா உன் கருணையாலே

பொல்லாத கூழியின்

தொல்லைகள் நீங்கிட

வல்ல உன் மகனிடம் கேள்

 

அகோரப் போர் முழங்கி

அல்லலும் தோன்றுதன்றோ

எல்லோரும் விரும்பிடும்

நல்லதோர் அமைதியை

சொல்லாமல் அளித்திடுவாய்

 

 

Go to top
Template by JoomlaShine