என்  கற்பாறையும்  மீட்பருமான  ஆண்டவரே!  என்  வாயின்  சொற்கள்  உமக்கு  ஏற்றவையாய்  இருக்கட்டும்;  என்  உள்ளத்தின்  எண்ணங்கள்  உமக்கு  உகந்தவையாய்  இருக்கட்டும்.

''நெருக்கடி  வேளையில்  உமக்கு  ஆண்டவர்  பதிலளிப்பாராக!  யாக்கோபின்  கடவுளது  பெயர்  உம்மைப்  பாதுகாப்பதாக!  தூயகத்திலிருந்து  அவர்  உமக்கு  உதவி  அனுப்புவாராக!  சீயோனிலிருந்து  அவர்  உமக்குத்  துணை  செய்வாராக!'' 

 திருப்பாடல்கள் 19: 14,  20: 1-2

நாம் மற்றவர்களுக்கு ஆற்றும் பணிகளே நம் வாழ்விற்கு அர்த்தத்தைக் கொடுக்கின்றன.  நம் திறமைகள் நல்ல கனி தரவும், நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கவும் உதவுவது, நாம் பிறருக்கு ஆற்றும் பணிகளே. பணிபுரிவதற்காக வாழாதவர்கள், இவ்வுலக வாழ்வை முழுமையாக வாழாதவர்கள்.

நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம் இறைமகன் இயேசு, நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற நம் நம்பிக்கையை மேலும்  உறுதிப்படுத்த இத்திருவருகைக்காலம் உதவுவதாக. இக்காலத்தில் நாம் விழிப்புடனும், இறைவேண்டலில் உறுதியுடனும், நற்செய்திமீது ஆர்வத்துடனும் செயல்பட இயேசு அழைப்பு விடுக்கிறார்.

திருத்தந்தை  பிரான்சிஸ்

There are no articles in this category. If subcategories display on this page, they may have articles.

Go to top
Template by JoomlaShine