மாதாவின் வணக்கமாதம்

அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபம்:

1ம் நாள்: பரிசுத்த கன்னிகையே! என் தாயே! ஆண்டவளே, என்னை வழி நடத்தியருளும.;

2ம் நாள்: உம்முடைய மாசில்லாத கன்னிமையையும் ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்த மகிமையையும் பார்த்து பரிசுத்த கன்னிமரியாயே! என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் சுத்தப்படுத்தியருளும்.

3ம் நாள்: பிதாவாகிய சர்வேசுரனுக்குப் பிரியமுள்ள குமாரத்தியே வாழ்க. சுதனாகிய சர்வேசுரனுக்குத் தாயாரே வாழ்க! இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனுக்கு மிகவும்பிரியமுள்ள தேவாலயமே வாழ்க.

4ம் நாள்: மாமரியே வாழ்க, ஆண்டவளே வாழ்க, சமுத்திரத்தின் நட்சத்திரமே வாழ்க.

5ம் நாள்: உம்முடைய தயாபமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும்.

6ம் நாள்: நான் உம்மை ஸ்துதிக்கவும், என் சத்துருக்களை வெல்லவும் உதவி செய்தருளும் தாயே!.

7ம் நாள்: எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே,வாழ்க.

8ம் நாள்: இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாய் இருக்கத்தக்கதாக. தேவதாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

9ம் நாள்: ஓ! மரியாயே! தயையுள்ள கன்னிகையே, கிருபாகரியே, கருணாகரியே, அருணோதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

10ம் நாள்: பிரியதத்தத்தினாலே பூரணமானவளே வாழ்க!

11ம் நாள்: ஓ! தேவமாமதவே, மெய்யான சர்வேசுரனான இயேசுக் கிறிஸ்துநாதர் பேரில் என்னுடைய இருதயம் தேவசிநேகத்தால் பற்றி எரியச் செய்தருளும்.

12ம் நாள்: எங்களுடைய ஆண்டவளே, எங்களுடைய உபகாரியே, எங்களுக்காக உம்முடைய திரக்குமாரனிடத்தில் வேண்டிக்கொள்ளும்.

13ம் நாள்: பாவிகளுக்கு அடைக்களமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

14ம் நாள்: தேவமாதாவே! ஊம்முடைய தயாபமுள்ள திருக் கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும்.

15ம் நாள்: நல்ல உபகாரியே, உமது பேரில் என் நம்பிக்கை எல்லாம் வைத்திருக்கிறேன்.

16ம் நாள்: நேசத்துக்குரிய தாயாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

17ம் நாள்: உம்மிடத்தில் பிறந்து எங்களை மீட்க வந்த இயேசு நாதர் உமது வழியாக எங்களுடைய வேண்டதலை ஏற்றுக் கொள்ள அருள் புரிவாராக.

18ம் நாள்: கிறிஸ்தவர்களுடைய சகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

19ம் நாள்: கிறிஸ்தவர்களுக்கு சகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

20ம் நாள்: தயாளமுள்ள தாயாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

21ம் நாள்: பரிசுத்த கன்னிகையே! இயேசுநாதருக்குப் பின் நீரே என் உறுதியான நம்பிக்கையாயிருக்கிறீர்.

22ம் நாள்: எங்கள் தாயே! நாங்கள் சாகிற வேளையில் எங்கள் ஆத்துமம் மோட்ச பேரின்பத்தை அடைய கிருபை செய்தருளும்.

23ம் நாள்: கன்னிகைகளுக்குள் உத்தம கன்னிகையே நான் என் பாவங்களை வெறுத்து எப்பொழுதும் உம்மை நோக்கி அழும்படியாக உதவி செய்தருளும்.

24ம் நாள்: ஓ! மரியாயே, இஷ்டப்பிரசாதத்தின் மாதாவே, தயையின் சமுத்திரமே, என் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றி என் மரண வேளையில் என்னைக் கைவிடாதேயும்.

25ம் நாள்: ஓ! தாயாரே, உம்முடைய அடைக்கலத்தில் நாங்கள் இருக்கிறது பேரின்ப பாக்கியம்.

26ம் நாள்: பரிசுத்த தாயாரே, எங்கள் பரிசுத்தராக்கி எங்களை மோட்சத்துக்கு போகும் வழியில் நடப்பித்தருளும்.

27ம் நாள்: தேவமாதாவின் மாசற்ற இருதயமே! இயேசுகிறிஸ்து நாதருடைய திரு இருதயத்தின் உத்தமமான சாயலே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

28ம் நாள்: சகல மோட்சவாசிகளுக்கும் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

29ம் நாள்: மோட்ச இராக்கினியே! நான் உம்மிடத்தில் சேருமளவும் என்னைக் கைவிடாதேயும்.

30ம் நாள்: தேவமாதாவின் அடைக்கலத்தைத் தேடியவர் அதைப் பெறாமலிருப்பவர்களுண்டோ?

31ம் நாள்: உம்முடைய பிள்ளைகளாய் இருக்கிற எங்களைக் காப்பாற்றி இரட்சியும் தாயாரே!