புனித இனிகோ

இயேசு சபையின் அன்னை

பிறப்பு:கி.மு 20 இறப்பு:கி.பி 41

இனிகோ (லயோலா இஞ்ஞாசியார்) ஸ்பெயின் நாட்டிற்கும், பிரான்சு நாட்டிற்கும் இடையே நடந்த போரில், ஸ்பெயின் நாட்டுப் படைத்தளபதியாக பணிபுரிந்தார். அப்போது போரில் அவரின் காலில் குண்டு துளைத்தது. இதனால் இவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற அனுமதிக்கப்பட்டார்.

அப்போது பொழுதுபோக்கிற்காக வாசிப்பதற்காக இரண்டு புத்தகங்களை பெற்றார். அந்நூல்களில் ஒன்று புனிதர்களின் வரலாறு. அதை வாசிக்கும்போது அவரை அறியாமல் மனமாறினார். இச்சூழ்நிலையில் ஆகஸ்டு 1521-ல் ஒருநாள் மாலைப்பொழுதில், அவர் தனிமையில் அவரின் அறையில் இருக்கும்போது மரியன்னை குழந்தை இயேசுவைக் கையில் தாங்கிக்கொண்டு வந்து காட்சியளித்தார். இக்காட்சியைக் கண்ட இனிகோ அளவில்லா ஆனந்தம் அடைந்தார். தனிப்பட்ட ஆறுதலை உணர்ந்தார். இந்த வேளையில்தான் இனிகோ மனமாற்றத்தின் ஆரம்பநிலையை அடைந்தார். தனது பாவ

வாழ்க்கையின் மீது வெறுப்பும், புனிதர்களின் பாதையில் நடைபோட வேண்டுமென்ற ஆவலும் ஏற்பட்டது. 

1522 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இனிகோவின் வலது காலின் காயம், போதுமான அளவு குணமடைந்தது. இதனால் இனிகோ புனித நாட்டு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டார். தன் குடும்பத்தினரிடமிருந்து மறைவாக விலகி பார்சலோனா சென்றடைந்தார். அப்போது அருகிலிருந்த மரியன்னையின் சிற்றாலயத்தை நோக்கிப் புறப்படுமுன், மான்செராற் (Manserar) என்ற இடத்திற்குச் சென்று, திருப்பயணிகள் அணியும் உடை ஒன்றை வாங்கினார். இவ்வுடை சாக்கு போன்று முரடாக இருந்தது. நீளமான அங்கி போன்று காணப்பட்டது. இந்நிலையில் மார்ச் 21 -ல் அன்னையின் ஆலயத்தை அடைந்தார். அங்கு சென்றவுடன் குருவானவரை சந்தித்து பாவ மன்னிப்பு பெற்றார். பொது பாவமன்னிப்பு அருட்சாதனத்தைப் பெற்ற பிறகுதான் மன அமைதி அடைந்தார். 

பின்னர் மார்ச் 24-ல் மரியன்னையின் மங்கள வார்த்தை தினத்தன்று, தனது உயர்தர ஆடைகளை எடுத்து ஓர் ஏழைக்குத் தானம் அளித்துவிட்டு, தான் வாங்கியிருந்த திருப்பயணியின் ஆடையை உடுத்திக்கொண்டார். அந்த இரவில் அன்னையின் ஆலயத்திலிருந்த பலி பீடத்தை விரைந்து ஓடினார். அந்தக்காலத்தில் படைவீரர்கள் தங்களின் வீரத்தில், மேலும் முன்னேற்றம் அடைய, மரியன்னையின் முன் இரவு நேரத்தை செலவழித்த முறையில், முழந்தாளிட்டும் எழுந்துநின்றும், மாறி மாறி இரவு முழுவதும் செலவிட்டு, வைகறையில் தனது படைத்தளபதிக்குரிய அடையாளங்களான போர்வாளை அன்னையின் பாதங்களில் வைத்தார். அபோதிலிருந்தே இனிகோ "மரியன்னையின் மாவீரர்" என்றே தன்னைப்பற்றி நினைத்துக் கொண்டார். 

இனிகோ அன்னையின் திருநாளன்று காலையில் பார்சிலோனா நகரை நோக்கி விரைந்தார். போகும் வழியில் கார்டனேர் (Cardaner) ஆற்றங்கரையில் இருந்த மன்ரேசாவில்

சுமார் 10 மாதங்கள் தங்கிவிட்டார். இங்குதான் இனிகோ முழுமையான, நிரந்தரமான மனமாற்றம் அடைந்தார். அதன்பிறகு "ஆன்மீகப் பயிற்சிகள்" என்ற நூலையும் எழுதினார். சுமார் 2 ஆண்டுகள் அங்கேயே தங்கியபிறகு, புதிய மனிதனாக உருமாற்றம் பெற்று, திருத்தந்தை நான்காம் ஏட்ரியன் அவர்களின் அனுமதி பெற்று, புனித நாட்டை அடைந்தார். சிலகாலம் அங்கேயே தங்கிவிட்டு, தனது 33 ஆம் வயதில் குருவாக எண்ணினார். இதனால் இனிகோ பல எதிர்ப்புகளை சந்தித்தார். 22 நாட்கள் டொமினிக்கன் துறவியர்களால் சிறைபடுத்தப்பட்டார். இவர் சேவையும், போதனைகளும் சரியானவையே என்று சான்று கிடைத்தபின் 02.02.1528 - ல் பாரீஸ் நகரை அடைந்தார்.

 அங்கு இனிகோ, கல்லூரி படிக்கும்போது, பீட்டர், பேபர், பிரான்சிஸ் சவேரியார் தங்கி படித்த அறையில் தங்க வாய்ப்பு கிடைத்தது. அச்சமயத்தில் இம்மூவரையும் தனது ஆன்மீக பயிற்சிகளின் மூலம் தன் பக்கம் ஈர்த்து இணைபிரியா நண்பர்களாக்கி கொண்டார். அப்போது இவர்கள் அனைவரும், குருவாகி மக்களை இறைவனிடம் ஈர்த்து செல்ல வேண்டுமென்பதை குறிக்கோளாக கொண்டனர். 

இதனால் 1534 -ல் ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாளில் 7 பேரும் கற்பு, ஏழ்மை என்னும் இரண்டு வார்த்தைப்பாடுகளை எடுத்துக்கொண்டனர். இவர்கள் வார்த்தைப்பாடு பெற்ற அந்நாள் மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழா நாள். எனவே இனிகோ மனமாற்றம் பெற்று, புதிய இயேசு சபையைத் தோற்றுவிக்க உடனிருந்து வழிநடத்திய மரியன்னை "இயேசு சபையின் அன்னை" என்று கூறி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். 

செபம்:

அம்மா மரியே! விண்ணேற்பு தாயே! சேசு சபை உருவெடுப்பதற்கு முதல் காரணமாய் இருந்தவர் நீர். தொடர்ந்து இச்சபையை நீர் ஆதரித்து, வழிநடத்திடுவீர்.