✠ வியாகுல அன்னையின் புனித கபிரியேல் ✠ ( St. Gabriel of Our Lady of Sorrows )

பிறப்பு :  மார்ச் 1, 1838 அசிசி (தற்போது இத்தாலி)

இறப்பு :  ஃபிப்ரவரி 27, 1862 ( அகவை 23 ) இசோலா டெல் க்ரன் சாஸ்சோ, இத்தாலி அரசு. (Isola del Gran Sasso, Kingdom of Italy)

முத்திப்பேறு பட்டம் :  மே 31, 1908 ரோம், திருத்தந்தை பத்தாம் பயஸ்.

புனிதர் திருநிலை :  மே 13, 1920 ரோம், திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்

பாதுகாவலர் : மத குருமார்கள், குருத்துவ மாணவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் இத்தாலியின் அப்ரஸோ பகுதி

நினைவுத்திருநாள் :  ஃபிப்ரவரி 27 ம் தேதி ஃபிப்ரவரி 28 (ஆதி கத்தோலிக்கர்) 

(For Traditional Roman Catholics)

இவர் மார்ச் 1ம் தேதி அசிசி நகரில் பிறந்தார். இவரின் கிறிஸ்தவ பெயர் பிரான்சஸ்கோ ஆகும். இவர் தந்தை திருத்தந்தையின் அலுவலகத்தில் உயர் பதவி வகித்தவர். இவருடை நான்காம் வயதில், இவர் தன்னுடைய தாயை இழந்தார். இவருடைய தந்தை தன்னால் இயன்றவரை குடும்பப் பொறுப்புகளை கவனத்துடன் அனுசரித்தாலும் இவருடைய மூத்த குருவாக ஆக முடியாது என்பதை எண்பித்தன. ஆனால் பிரான்செஸ்கோவிற்கென சகோதரி லூசியாவின் அன்பும் அரவணைப்பும் கிட்டியபோதும் தாயின் இடத்தை நிரப்ப யாருமில்லை என்பதே உண்மை.

பிரான்சஸ்கோ தனது உயர்கல்விக்கு இயேசு சபையினரால் நடத்தப்பட்ட பள்ளியில் சேர்ந்தார். சிறந்த படிப்பாளர். தந்தையைப் போலவே உயர்ந்த பதவி வகிக்க ஆர்வம் கொண்டார். சமூக ஈடுபாடும் ஆடம்பர வாழ்வும் இவர் ஒரு பொதுநிலையினராக இருந்துதான் கடவுள் பணி ஆற்ற முடிந்தது.  மாறாக இவர், தம் சகோதரர்களைப்போல் தமது வாழ்வையும் கடவுளுக்கு அர்பணிக்க எண்ணினார். 17ம் வயதில் இயேசு சபை தலைமை அருட்தந்தையிடம் சென்று சபையில் சேரும் விருப்பத்தை தெரிவித்தார். அவருடைய இளவயதை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டார். அவருடைய தந்தையும் அவருடைய இம்முடிவை ஏற்கவில்லை. 1856ல் அவர் மிகுந்த சட்டதிட்டங்களை உடைய பாடுகளின் சபையில் இணைத்தார். இங்கு அவருக்கு வியாகுல அன்னையின் தூய கபிரியேல் என்ற பெயர் வழங்கப்பட்டது.

எடுத்துக்காட்டான கடவுள் பணி சுகபோக வாழ்வில் பழக்கப்பட்ட கபிரியேல், துறவற வாழ்வில் இன்னல்களையும் தியாகங்களையும் மனமுவந்து ஏற்றார். பணியில் முன்மாதிரியாக விளங்க பல்வேறு முயற்சிகள் எடுத்தார். குழப்பகாலங்களிலும் போராட்ட சூழல்களிலும் கடவுளின் அன்பு மற்றும் பிறரன்பு எல்லாவித வேறுபாடுகளையும் களைத்துவிடும் என நிருபித்தார். கடுமையான துறவற வாழ்வில் பாதிப்படைந்தார். இவர் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டார்.

சிலுவையில் அரையப்பட்ட இயேசுவின் படத்தையும் வியாகுல அன்னையின் படத்தையும் நெஞ்சில் வைத்து வானத்தை நோக்கி கண்களை உயர்த்தி "ஒ என் அன்னையே துரிதமாக வாரும்" என்று சொல்லியபடியே, ஃபெப்ரவரி 27,1862ம் நாள் தன்னுடைய கனவாகிய குருத்துவத்தை  அடையமுடியாமல் உயிர்விட்டார்.

திருத்தந்தை 10ம் பத்திநாதரால் 1908ல் முத்திப்பேறு பட்டம் பெற்ற இவர், 1920ல் திருத்தந்தை 15ம் ஆசிர்வாதப்பரால் புனிதராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

சிந்தனை : 

சட்டங்களுக்குக் கீழ்ப்படிதல், கடமையை நன்கு நிறைவேற்றுதல், கடவுளது எவுதல்களுக்குப் பணிதல் இவையே புனிதராகும் வழி.

செபம் : 

வியாகுலமும், நேசமும், இரக்கமும் உள்ள மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும், ஆமென் †