✠ புனித பூக் நகர் எடிக்னா ✠ ( St. Edigna of Puch )

துறவி 

பிறப்பு :  11 ஆம் நூற்றாண்டு  பிரான்ஸ்

இறப்பு : 26 ஃபிப்ரவரி  1109  பூக் (Puch), பவேரியா

நினைவுத் திருநாள் : ஃபிப்ரவரி 26

பாதுகாவல் :  திருடர்கள் மற்றும் விஷபூச்சிக்கடியிலிருந்து

புனித எடிக்னா, பவேரியாவிலுள்ள பியூர்ஸ்டன்பெல்டுப்ரூக் (Furstenfeldbruck) என்ற ஊரில் எவராலும் வாழ முடியாத ஒரு வாழ்வை வாழ்ந்து வந்தார்.

இவர் அரசர் முதலாம் ஹென்றி என்பவரின் மகள் என்று கூறப்படுகின்றது. இவர் தனது இளம் பருவ வயதில் பிரான்சு நாட்டிலிருந்து பயணம் ஒன்றை மேற்கொண்டார் எனவும், அப்பயணத்தின் போதுதான் பவேரியா வந்து சேர்ந்தார் என்றும் இவரின் வரலாறு கூறுகின்றது, அப்போது அங்கு இவர் மிக கடினமான ஓர் சூழ்நிலையில் உதவி செய்ய

யாருமற்றவராய் வாழ்ந்துள்ளார். அப்போதுதான் கையில் ஒரு பெரிய மணியுடன் கடவுள் உருவத்துடன் ஒளி ஒன்று தென்பட்டதை கண்டுள்ளார்.

அப்போது அம்மணியானது சப்தமாக தானாகவே ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அத்துடன் எடிக்னாவை எங்கும் நகர்ந்து செல்லாமல் அவ்விடத்திலேயே நிற்கக் கூறியுள்ளது. இவற்றைக் கண்ட எடிக்னா அது கடவுள்தான் என்பதை முழுமையாக நம்பினார். அன்றிலிருந்து இவர் எளிமையாக வாழ்ந்து, கடும் தவ வாழ்வை மேற்கொண்டு தனிமையாகவே வாழ்ந்து வந்துள்ளார். ஏறக்குறைய 35 ஆண்டுகள் மிகச் சிறியதோர் இடத்தில் வாழ்ந்துள்ளார்.

இவர் மேலும் தான் வாழ்ந்த வீட்டின் அருகில் இருந்த வீடுகளுக்கும் ஊர்களுக்கும் சென்று விசுவாசத்தைப் பற்றி போதித்து வந்துள்ளார். பிறகு எழுதவும், படிக்கவும் தெரிந்துக்கொண்டு விலங்குகளை பராமரிப்பது எப்படி? என்பதை பற்றி மற்றவர்களுக்கு கற்பிக்கும் கல்வியைக் கற்றுள்ளார்.

செபம் :

தூயவரானத் தந்தையே!  நீர் ஒவ்வொருவரின் வாழ்வையும் மாற்றி அமைக்கின்றீர். அரசர் குடும்பத்தில் பிறந்தவரென்பதால் கால்போன போக்கில் சென்றடைந்த எடிக்னாவின் வாழ்வை மாற்றியுள்ளீர். இன்றைய உலகில் தாறுமாறான ஒழுக்கமின்றி வாழும் இளைஞர்களை நீர் தடுத்தாட்கொள்ளும். அவர்களின் தவறான வாழ்வை திசை திருப்பி உம்மை பின்செல்ல வழிகாட்டியருள் வேண்டுமென்று எடிக்னா வழியாக உம்மை மன்றாடுகின்றோம், ஆமென் †