பாடகர்களின் பாதுகாவலி  புனித செசீலியா

வாழ்க்கை வரலாறு:

                                 செசீலியா  உரோமை நகரிலே அலெக்ஸாண்டர் செவேருஸ் (Alexander Severus) ஆட்சி புரிந்த காலத்தில் மூன்றாம் நூற்றாண்டில் பிறந்தவர். இளவயதிலேயே இனிமையாக பாடுவதிலே அதிக சிறப்பு  பெற்றிருந்தார். இறைவனுடைய அன்புக்கு தன்னையே அர்பணமாக்கி வாழ்ந்தார். அந்த நாட்களிலேயே ஏற்பாடு செய்து பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணம் சரியல்ல என்று எதிர்த்தவர். கடவுளுக்காக  தனது கன்னிமையைக் கையளித்திருந்தார். வல்லேரியன் எனும் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் இவரை அதிகம் விரும்பியதால் பெற்றோரால் மணம் முடித்துக் கொடுக்கப்  பட்டார். ஆனால் திருமணத்திற்குப் பிறகும் தனது தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார்.

இவரது மன உறுதியையும்  திட நம்பிக்கையையும் கண்ட அவரது கணவர், அவரது கன்னிமையை மதித்தார். அவரைத் தொடர்ந்து நேசித்தார். திருமணத்தில் இசைத்துப்  பாடப்பட்ட பாடலிலே  தன் விண்ணகத் தந்தைக்கு தன்னையே அர்ப்பணித்து, தன் நம்பிக்கையை  உறுதி செய்தார். அவரது இசையின் நாட்டம் அவரைப் பாடகர்களின் பாதுகாவளியகக் கொள்ளச் செய்துள்ளது.

 

         திருமணம் முடிந்த அன்று தன் கணவனை நோக்கி "கடவுளின் தூதர் ஒருவர் என் கற்புக்குக் காவலராய் இருக்கின்றார். எதையும் செய்ய நீர் முயற்சிக்கலாகாது" என்றார். வலேரியன் அவரைப் பார்த்து, "கடவுளின் அந்தத் தூதரை  நான் பார்த்தால் இயேசு கிறிஸ்துவை விசுவசிப்பேன் என்றார். அப்போது   செசீலியா, திருமுழுக்கு பெற்றால் ஒழிய அவரைப் பார்க்க முடியாது" என்றார். சுரங்கங்களில்  வாழ்ந்த உர்பன் என்னும் திருத்தந்தையிடம் சென்று வலேரியன் திருமுழுக்குப்பெற்றுக் கொண்டார். வீட்டிற்குத்  திரும்பிய வலேரியன் தன் மனைவியின்  அருகில்

ஓர் அழகிய வானதூதர் நிற்பதைக் கண்டார். அவர் கையில் ஒரு ரோசா மலையும் ஒரு லீலி மலையும் வைத்திருந்தார் . 

பிறகு, வானதூதர் அதை இருவருக்கும் அணிவித்து, இவை வாடா மாலைகள்; இவற்றைப் பிறர் காண இயலாது நீங்கள் புனித வாழ்வு  வாழ இது உங்களை அறிவுறுத்தும். என மொழிந்து வலேரியனிடம், "நீ விரும்பும் வரம் ஒன்று கேள்" என்றார் அவர், "எனக்கு ஒரு சகோதரன் உள்ளான். அவன் பெயர் திபுர்சியுஸ், அவனும் என்னைப்போல் கிறிஸ்தவனாக வேண்டும் இதுவே நான் கேட்கும் வரம்" என்றார். "அவ்வாறே ஆகுக! இருவரும் வேதசாட்சி முடிபெற்று  சான்று பகர்ந்து இறப்பீர்கள்" என உரைத்து மறைந்தார். அவ்வாறே, திபுர்சியுசும் மனம்மாறி திருமுழுக்கு பெற்ற்றபின் தேவதூதரைக்கண்டான். உரோமின் அதிகாரி அல்மாகுஸ் என்பவர் இவர்கள் இருவரையும் கைது செய்யும் நாள்வரை வலேரியனும், திபுர்சியும் மிக நல்ல பணிகளைச் செய்துவந்தனர். 

 

         உரோமின் அதிகாரி அல்மாகுஸ் செசிலியா, வலேரியன் , திபுர்சியுஸ் ஆகியோரைக் கைதுசெய்து அழைத்து வந்தான் . "நம் கடவுள் ஜூபிடருக்கு தூபம் காட்டி வழிப்பட்டால் பிழைப்பீர்கள். இல்லையேல் கொல்லப்படுவீர்கள். என்று எச்சரித்தான். ஜுபிடர் சிலைக்கு முன் இவர்களை அனுப்பினான்.

          மாக்சிமுஸ் என்ற அதிகாரி இவர்கள்மீது பரிவு கொண்டு இவர்களைத் தம் இல்லம் அழைத்துச் சென்று உபசரித்தான். இவர்களின் சாட்சியத்தைக் கேட்டு அவனும் அவன் வீட்டாரும் கிறிஸ்தவர்களா- யினர். மூன்றுபேரும் வேதசாட்சிகளாக மாறி புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். ரோமன் கடவுளுக்கு பலியிட வந்த மக்களை செசீலியா மனந்திருப்பினாள். அவரைக் காணவந்த திருத்தந்தை உர்பன்

அவர் இருந்த இடத்தில் நானூறு பேருக்கு அதிகமான பேருக்குத் திருமுழுக்கு க் கொடுத்தார்.

       செசீலியா கோர்ட்டுக்கு வந்தபோது அல்மாகுஸ் மீண்டும் அவளை மறுதலிக்கக் செய்ய பலமுறை முயன்றான். அசைக்க முடியாத அவளது நம்பிக்கையைக் கண்டு மூச்சுமுட்டி சாகச் செய்ய தீர்ப்பு வழங்கப் பட்டது. 

அதன்படி அவளது வீட்டிலேயே அவள் குளியலறையில் பெரும் அக்கிணிக்குண்டம் தயாரானது. மூச்சுமுட்டும்படியாக வாழை மட்டைகளும் சேர்க்கப்பட்டது. அது புகைந்து புகைந்து பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது. இதன் நடுவில் செசீலியா இறக்கப்பட்டாள்.  அப்போது அவள் பெரும்குறலெடுத்து பாடல் ஒன்றைப்பாடினாள்.

" பிதா, சுதன், பரிசுத்த ஆவி என் சிரசைக்காக்க, அன்னை மரியாள் என் முகத்தைகாக்க, நீதியின் சர்வேசுரன் என் நெஞ்சை காக்க, வானோர் என் வலது தோளைகாக்க, திவ்ய இஸ்பிரீத்து சாந்து என் இடது தோளைக்காக்க,  என்னையும் என் குடும்பத்தையும் காக்க."

இந்தப்பாடல் ஒரு பெரும் ஜெபமாக அமைந்தது. செசீலியாவின் அந்தப்பாடல் அமரத்துவம்

வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது வழிப்பயணம் மேற்கொள்பவர்களும், யாரும் அசுத்த  ஆவியால் பீடிக்கபடாதிருக்கவும் பழங்கால கிறிஸ்த்து-வர்களால் பக்தியுடன் சொல்லப்பட்டு வந்தது. இப்போதும் இந்த மந்திரத்தை தெரிந்தவர்கள் அதை சொல்லிக்கொண்டுதான் இருகிறார்கள்.

இந்தப்பாடலின் மகத்துவத்தினால் ஆண்டவரும் பெரும் அதிசயம் ஒன்றை செய்தார். ஒருவாரம் அளவாக இந்த அக்கிணிக்குண்டத்தில் பெரும் புகை மண்டலத்தில் நம் செசீலியா யாதொரு துன்பமும் நேரிடாதபடி அமைதியாக ஆண்டவரின் திரு நாம கீர்த்தனைகளை பாடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு வியர்வைகூட ஏற்படவில்லை என்று இந்த  தண்டனையை நிறைவேற்றியவன் தன்னுடைய வாக்கு மூலத்தில் கூறியிருக்கிறான்.

இறுதியாக இவரது தலை வெட்டப்பட உத்தரவு இடப்பட்டபோது, மூன்று முறை வெட்டப்பட்ட நிலையிலும் மூன்று நாள் உயிர் பிரியவில்லை. அந்த வேதனையின் மத்தியிலும் இறைவனைப்பாடி புகழ்ந்த வண்ணம் வாழ்ந்து அதன் பின்னரே இறைவனடி  சேர்ந்தார்.

செசீலியாவை சூழ்ந்திருந்த பல ரகசிய கிறிஸ்த்துவ பெண்கள் கூட்டம் இந்த அதிசயத்தை கண்டார்கள். வீட்டின் மேல் விதானம் மறைந்து ஒரு பரலோக ஒளிவெள்ளம் சூழ்ந்தது. ஆண்டவராம் யேசுகிறிஸ்த்து தன் அன்பான விசுவாசமான பத்தினியை தன்னுடன் வர அழைத்தார். நம் செசீலியாவின் உடல்முழுவதும் ஒருவிதமான ஒளிவெள்ளத்தால் சூழப்பட்டு மின்னியது. செசீலியாவின் ஆன்மா ஒரே ஒளிப்பிரவாகமாக  அவளிடமிருந்து எழும்பியது. அது அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே காற்றில் கறைந்து போனது. ஆண்டவறாகிய யேசுகிறிஸ்த்து தன் விசுவாசமான அன்பான பத்தினியை  தன் வானக வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார். 

 

       இவரது உடலை திருத்தந்தை உர்பான் எடுத்துவந்து நல்லடக்கம் செய்தார். இவர் இறக்கும்முன் தனது வீட்டை ஒரு கோவிலாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவரால் மனம் திரும்பிய உரோமானிய அதிகாரி கொர்தையான் என்பவர் செசிலியாவின் வீட்டை ஆலயமாக்கும் பணியை செய்தார். திருத்தந்தை உர்பன் பிற்காலத்தில் அந்த ஆலயத்திற்கு  செசீலியாவின் பெயரை வைத்தார். 

     1599 ஆம் ஆண்டு அவரது ஆலயம் திரும்பக் கட்டப்பட்டபோது செசீலியாவின் கல்லறை திறக்கப்பட்டது. அதிலே சிதைவுறாமல் அவரது உடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது . ஆனால் காற்று பட்டவுடன் விரைவாக கெட ஆரம்பித்தது. எனவே மடேர்னா என்ற சிற்பி அவரது உயரத்தில் வலது பக்கம் சாய்ந்து உறங்குவதுபோல  சிற்பம் ஒன்று செதுக்கினார். கலிஸ்டஸ்  கல்லறை தோட்டத்திலே இந்த சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. பதினாராம் நூற்றாண்டிற்குப்  பிறகுதான் செசீலியா

பாடகர்களின் பாதுகாவலியாகப் புகழ்பெற ஆரம்பித்தார்.    செசீலியா பாடகர் குழுவினருக்கும்  இசை வல்லுனர்களுக்கும்  பாதுகாவலி , அனேகமாக  கையில் வயிலினுடனோ அல்லது சிறு ஆர்கனுடனோ  இருப்பதாகத்தான் இவரது படம் வரையப்பட்டிருக்கும்.

 

இவரது திருவிழா நவம்பர் 22 அன்று கொண்டாடப்படுகிறது. 

செசீலியாவிற்கும் அவருடன் உயிரைக் கொடுத்தவர்களுக்கும் அவர்களுக்கு  ஏற்படுத்தப்பட்ட  அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும்  எதிர்த்து நிற்க அழ்ந்த நம்பிக்கைதான் உதவி செய்தது. இந்த அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுக்காமல் செசீலியாவும் அவரது கணவர், கணவரின் சகோதரர் அவர்களை சந்தித்த  அனைவரையும் 

இயேசு கிறிஸ்து பக்கம் இழுத்துக் கொண்டார். நம்முடைய வார்த்தையாலும், வாழ்வாலும் நாமும் நமது நம்பிக்கையை .

புனித செசீலியம்மாளிடம் செபம்

கற்பின் அலங்காரமும் கன்னிகாரெத்தினமுமான புனித செசிசீலியம்மாளே, இயேசுவின் நேசப் பத்தினியே, பரிசுத்த புண்ணியவதியே, உமது பரிசுத்த புண்ணியத்தைக்காக்க உம்மிடம் ஒரு காவல் சம்மனசு உண்டென்று நீர் சொன்னதைக் கேட்டு அஞ்ஞானிகளாயிருந்த வலேரியானும் அவரது சகோதரனும் ஞானதீட்சை பெற்ற வேதசாட்சிகளாக மரிக்கக் காரணமாயிருந்தீரே, நீர் வேதத்துக்காக சிரசாக்கினை அனுபவித்துச் சாகும் தருவாயில் சர்வேசுரனைச் சந்தோசமாய்  புகழ்ந்து பாடிக் கொண்டு மரித்தீரே! நாங்களும் உம்மைப்போல் இவ்வுலகில் பரிசுத்த சீவியம் சீவித்துக் கடைசியாய்

நன் மரணமடைந்து உம்மோடு என்றென்றும் சர்வேசுரனைச் சுகித்தனுபவிக்க எங்களுக்காக மன்றாடும் - ஆமென் .