✠ புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் ✠  ( St. Ignatius of Antioch )

ஆயர், இரத்த சாட்சி மற்றும் திருச்சபையின் தந்தையர் 

“ நான் ஆண்டவரின் கோதுமை. அவருடைய புனித மாவாக ஆகும்படி சிங்கங்களின் பற்களால் நான் அறைக்கப்பட வேண்டும்” 

பிறப்பு : சுமார், கி.பி 35 , இறப்பு : சுமார் கி.பி 108

சித்தரிக்கப்படும் வகை : சங்கிலியால் கட்டப்பட்ட அல்லது சிங்கங்களால் தாக்கப்படும் ஆயர்

அந்தியோக்கு இஞ்ஞாசியார் அல்லது தியோபோரஸ் (அதாவது கடவுளை தாங்குபவர்) என கிரேக்க மொழியில் அறியப்படும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார், அந்தியோக்கியா நகரின் மூன்றாம்

ஆயரும், திருச்சபையின் தந்தையரும், திருத்தூதர் யோவானின் சீடரும் ஆவார்.

கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் 17 அக்டோபர் ஆகும்.

இக்னேசியஸ் திருத்தூதர் ஜானின் மாணவர். அந்தியோக்கிய நகரின் மூன்றாவது ஆயர். இவர் கத்தோலிக்க திருச்சபையின் தந்தை என்றழைக்கப்பட்டார். காட்டு மிருகங்களால் கடித்துக் கொல்லப்பட்ட மறைசாட்சியர்களைப்பற்றி கடிதங்கள் எழுதியுள்ளார். இவர் ஆதிகால திருச்சபையின் இறையியலாளர் என்று அழைக்கப்பட்டார். திருச்சபையில் ஆயர்கள் எப்படி வாழ வேண்டுமென்பதைப்பற்றியும் திவ்விய நற்கருணையைப்பற்றியும் முக்கிய கடிதங்களை எழுதியுள்ளார். இவர் அந்தியோக்கியாவின் மூன்றாவது ஆயராக பொறுப்பேற்றார்.

இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடிதங்களின்மூலம் ஆதி கிறித்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப்பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் திருவருட்சாதனங்கள், ஆயர்களின் பணி முதலியவைப்பற்றி எழுதியுள்ளார். கத்தோலிக்க திருச்சபை என்னும் சொல்முறையை முதன்முதலாக எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே.

இவர் கிறிஸ்துவத்தை பரப்ப அரும்பாடுபட்டார். இதனால் தற்போது உரோம் நகரில் உள்ள கொலோசேயத்தில் (Kolosseum) சிறைபிடித்து வைக்கப்பட்டு பல கொடிய மிருகங்களால் கடிக்கப்பட்டு மறைசாட்சியாக கிறிஸ்துவின் பொருட்டு தன் உயிரை ஈந்தார்.

 

மன்றாட்டு இறைவா, உம் திருமகனைப் பின்பற்றி நாங்களும் பிறருக்குப் பணிசெய்து வாழ்ந்திட அருள்தாரும்.