கல்லறை செபமும் திரு இரத்தப் பிரார்த்தனையும்

 திவ்விய இரட்சருடைய கல்லறையில்கண்டெடுக்கப்பட்ட செபம்:

 இயேசுவின் நேச இருதயமே! உம் இருதயத்தின் அருள்சுடர் ஒளியிலிருந்து என் விசுவாச ஒளியைப் பெற்று நான் வாழ, என்னை உமக்கு நிரந்தரமாக அர்பணிக்கிறேன்.

 நமது திவ்விய இரட்சருடைய கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட செபத்தின் வரலாறு:

 கர்த்தர் பிறந்த 803ஆம் வருடத்தில் நமது ஆண்டவருடைய திருக்கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட இப்பரிசுத்த ஜெபமானது, பரிசுத்த பாப்பரசரால், சார்லஸ் என்னும் ராஜாவானவர் யுத்தத்திற்குப் போகும்போது அவர் யாதொரு தீங்குக்குள்ளாகாமல் சுகமே மீண்டும் வர அவருக்கு கொடுக்கப்பட்டது. இப்புனித ஜெபத்தை யாதொருவர் பிரதி தினமும் செபித்தாலும் காதால் கேட்டாலும் அல்லது அவர்களண்டையில் வைத்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் சடுதி மரணத்தால் சாகமாட்டார்கள். கர்ப்ப வேதனைப்படும் எந்த ஸ்திரீகளும் இதை செபித்தால் அவர்கள் யாதொரு துன்பமின்றி பிரசவிப்பார்கள். பிறந்த குழந்தையின் வலது பக்கத்தில் இந்த ஜெபத்தை வைத்திருந்தால் யாதொரு ஆபத்தும் நேரிடாது. இசிவு உண்டாகிறவர்களின் வலதுபுறத்தில் இதை வைத்திருந்தால் அவர்கள் உடனே எழுந்து ஆண்டவரை தோத்தரிப்பார்கள். இதை செபித்து வரும் எந்த வீடும் ஆண்டவருடைய ஆசீர்வாதத்தால் நிறையும். இதை எப்போழுதும்

கூடவே வைத்துக் கொண்டிருப்பவர் மின்னல் இடி முழக்கங்களுக்கெல்லாம் தப்பி வாழ்வார்கள். இவர்கள் மரண நாள் நெருங்குகையில் மூன்று நாள் முன்னதாகவே எச்சரிப்புக்குள்ளாவார்கள் என்று அனேக வேத பாரகர்கள் எழுதிவைத்திருக்கிறார்களென்று சொல்லப்படுகிறது.

 

ஜெபம்: ஆ! மிகவும் வந்திக்கத்தக்க கர்தாவும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவே! எங்கள் பெரும் பாவத்திற்காக, கொலைக்களத்தில் உண்மையாகவே இறந்தீர். ஆ! கிறிஸ்து இரட்சகருடைய பரிசுத்த சிலுவையே எங்கள் நினைவுகளைக் கவனியும். ஆ! ஆண்டவருடைய பரிசுத்த சிலுவையே எந்த ஆயுத அபாயங்களுக்கும் எங்களைத் தப்புவியும். ஆ! கர்த்தருடைய பரிசுத்த சிலுவையே, சகல துன்பங்களினின்றும் காப்பாற்றும். ஆ! இயேசு இரட்சகரின் பரிசுத்த சிலுவையே, எங்கள் எதிரிகளிடமிருந்து எங்களை பாதுகாத்தருளும்.   ஆ! எங்கள் கர்த்தருடைய பரிசுத்த சிலுவையே! எங்கள் அபாய மரணத்தினின்று எங்களைக் காப்பாற்றி நித்திய ஜீவனைத் தந்தருளும். ஆ! சிலுவையில் அறையுண்ட நசரேனாகிய இயேசுநாதரே, எப்பொழுதும் எங்கள்மீது இரக்கம் வையும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய மகிமையாலும் அவருடைய பாடுகளாலும் உயிர்த்தெழுதலினாலும் தெய்வத்தன்மைக்குரிய மோட்ச ஆரோகணத்தினாலும், எங்களைப் பரலோகத்தில் சேர்க்க உண்மையாகவே அந்த நாளில் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தீர். மெய்யாகவே நீர் பிறந்த பதிமூன்றாம் நாள் மூன்று இராஜாக்களால் தூபம், பொன், வெள்ளைப்போளம் முதலிய காணிக்கை அளிக்கப்பட்டீர். பெரிய வெள்ளிக்கிழமையில் கல்வாரி மலையின் மேல் சிலுவையில் அறையப்பட்டு, உயிர்விட்டு, நிக்கோதேமு, சூசை எனும் பக்கர்களால் சிலுவையினின்று இறக்கி அடக்கம் செய்யப்பட்டீர். மெய்யாகவே நீர் மோட்சத்திற்கு எழுந்தருளினீர். ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாதருடைய மகிமையானது எங்களை சத்துருக்களுடைய வஞ்சனைகளினின்றும் இப்போதும் எப்போதும் காப்பாற்றும். ஆ! ஆண்டவராகிய இயேசுவே! எங்கள்மீது கிருபையாயிரும். புனித மரியாயே, புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ............

(வேண்டியதை உறுதியாகக் கேட்கவும்).

ஆ! கர்தராகிய இயேசுவே, உம்முடைய பாடுகளின் வழியாய் இந்த பாவ உலகத்தினின்றும் உம்முடைய ஆத்துமம் பிரிந்தது உண்மையே. அப்படியே நாங்களும் எங்கள் வாழ்வில், நாங்கள் படும் துன்பங்களை உமது இரக்கத்தின் கண்கொண்டு பாரும். எங்கள் பாடுகளை யாதொரு பழியும் கூறாமல் பொறுமையோடு சகிக்க கிருபை கூர்ந்தருளும். உமது பாடுகளின் மூலமாக எங்களுக்கு நேரும் எல்லா இடையூறுகளிலும் இப்போதும் எப்போதும் எங்களைத் தப்புவியும் -ஆமென்.

செபிப்போமாக: எங்கள் சர்வேசுரா சுவாமி! தேவரீர் வார்தைப்பாடு கொடுத்தபடியினாலே இயேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திருஇரத்தப் பலன்ளைப் பார்த்து எங்கள் பாவங்களையெல்லாம் பொறுத்து, உங்களுக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று உறுதியாக நம்பியிருக்கிறோம். –ஆமென்

 

யேசுகிறிஸ்து நாதருடைய திருத்தோள் காயத்தின் ஜெபம் 

என் நேசத்துக்குரிய யேசுவே!  கடவுளின் மாசற்ற செம்மறிப்  புருவையே!  நான் மிகவும் நிர்ப்பாக்கிய  பாவியானாலும், நீர் உமது பாரமான திருச்சிலுவையைச் சுமந்து கொண்டு போனபோது உமது திருத்தோளை நிஷ்டூரமாய் கிழியச் செய்த உமது திருச் சரீரத்திலுண்டான சகல காயங்களால் நீர் அனுபவித்த துயரத்தைப்பார்க்கிலும் அதிக துயரத்தை வருவித்த உமது திருத்தோளின் காயத்தைச் சாஷ்டாங்கமாய் வணங்கி நமஸ்கரிக்கின்றேன். மட்டற்ற துயரப்பட்ட இயேசுவே, உம்மை ஆராதித்து என் முழு இருதயத்தோடு உம்மைப் புகழ்ந்து, ஸ்துதித்து உமது திருத்தோளின் கடூர காயத்திற்காக உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். நீர் அனுபவித்த இந்த மட்டற்ற வேதனை உமது சிலுவையின் பாரச்சுமையால் அதிகரித்ததின் மேல் நான் நொந்தழுது, பாவியாகிய என் பேரில் தேவரீர்  இரக்கமாயிருக்கவும்,  என் பாவ அக்கிரமங்களைப்  பொறுத்து உமது சிலுவையின் பாதையின் வழியாய் என்னை மோட்ச பாக்கியம் சேர்ப்பிக்கவும் தயை புரிய வேணுமென்று உம்மை இரந்து மன்றாடுகிறேன்  ஆமென். 

மதுர யேசுவே!  உமது திருததோளின் கடூர  காயத்தைப் பார்த்து உத்தரிக்கின்ற ஸ்தலத்து  ஆத்துமாக்கள்  பேரில் இரக்கமாயிரும்.

(1பர .1 அருள், 1 திரி)

 

 

யேசுவின் திருமுகத்தைக் குறித்து 9ம் பத்திநாதர் அர்ச். பாப்பானவர் இயற்றிய ஜெபம் 

இனிய இயேசுவே எங்களை உமது கிருபைக் கண்களால் நோக்கியருளும். அன்று வேரோணிக்கம்மாளை  கிருபாகடாட்சமாய் பார்த்தருளினது போல எங்களில் ஒவ்வொருவரையும் தயவாய்ப் பார்த்தருளும் உமது பிரத்தியட்ச தரிசனத்தை அடியோர்கள் இச்சரீரக் கண்களால் காண அபாத்திரவான்களாகையால் என் இருதயத்தை நோக்கி உமது திருமுகத் தரிசனத்தைத்  திருப்பியருளும். இந்த திவ்விய தரிசனத்தால் என் இருதயம் உற்சாகமடைந்து இப் பிரபஞ்ச ஜீவிய ஞான யுத்தத்தில் எனக்கு அவசரமான மனத்திடனை அத்திருக் கிருபாகடாட்ச ஊறனியால் அடையச்  செய்தருளும் சுவாமி. ஆமென்

பிரார்த்திக்கக்  கடவோம்> சமஸ்த விசுவாசிகளின் சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய சர்வேசுரா!  உம்முடைய மகிமை பூலோகமெங்கும் நிறைந்திருக்கிறது. உமது அடியேனுக்கு பாவப்பொறுத்தல் தந்து என் அவசரங்களில் வேண்டிய வரங்களை அடையச் செய்தருளும் சுவாமி. ஆமென்.

 

திரு இரத்தத்தின் பிரார்த்தனை 

(பரிசுத்த 23ம்அருளப்ப பாப்பரசரால் அங்கிகரிக்கப்பட்டது)

சுவாமி கிருபையாயிரும் 

கிறிஸ்துவே கிருபையாயிரும் 

சுவாமி கிருபையாயிரும் 

கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்

கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் நன்றாக கேட்டருளும்

பரமண்டலன்களிலே இருக்கிற பிதாவாகிய சருவேசுரா,

         எங்கள் பேரில் இரக்கமாயிரும் சுவாமி,

உலகத்தை மீட்டு இரட்ச்சித்த   சுதனாகிய சருவேசுரா,

       எங்கள் பேரில் இரக்கமாயிரும் சுவாமி,

பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா,

       எங்கள் பேரில் இரக்கமாயிரும் சுவாமி 

அர்ச்சியஷ்ட தமதிரித்துவமயிருக்கிற ஏக சருவேசுரா,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

நித்திய பிதாவின் சுதனாகிய கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே>

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

மனுவுறு எடுத்த தேவ வார்த்தையானவராகிய கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே>      

 ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

புதிய நித்திய ஏற்பாட்டில் இரத்தமாகிய கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே>

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

பூங்காவனத்தில் அவஸ்தைப்பட்ட பொழுது நிலத்தில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே>

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

சாட்டைகளால் அடிபட்டபோது ஏராளமாய்ச் சிந்தப்பட்ட  கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

முள்முடி சூட்டப்பட்டபோது வடிந்தோடிய கிறிஸ்துவின்  திவ்விய  இரத்தமே,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

சிலுவை மரத்தில் சொரியப்பட்ட கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

எங்கள் இரச்சணியத்தின்  சிகரமாகிய கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

பாவ மன்னிப்புக்கு இன்றியமையாததான கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

ஆத்துமங்களுக்குப் புத்துயிரூட்டும் போசனமும் நற்கருணைப் பானமுமாகிய கிறிஸ்துவின் திவ்ய இரத்தமே,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

பசாசுகளின்மேல் வெற்றி கொண்ட கிறிஸ்துவின் திவ்ய இரத்தமே,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

வேத சாட்சிகளுடைய ஓர்மமாகிய கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

கன்னியர்களின் பிறப்பிடமாகிய கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

ஆபத்திலுள்ளவர்களின் சகாயமாகிய கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

வருந்திச் சுமை சுமக்கிறவர்களின் இளைப்பாற்றியாகிய கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

துயரப்படுவோரின் தேற்றரவாகிய கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

மனத்தாபப்படும் பாவியின் நம்பிக்கையாகிய  கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

மரிக்கிறவர்களின் ஆறதலாகிய கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

இதயங்களின் சமாதானமும்> உருக்கமுமாகிய கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

 

திவ்விய சீவியத்தின் அடைமானமாகிய கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

ஆத்துமாக்களை உத்தரிப்பு ஸ்தலத்திலிருந்து விடுதலையாக்கும் கிறிஸ்துவின் திவ்விய இரத்தமே,

       ⃰எங்கள் பேரில் இரக்கமாயிரும்>

உலகத்தின் பாவங்களை போக்குகிற சருவேசுரனுடைய செம்மறிப்  புருவாகிய இயேசுவே>

       எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி>

உலகத்தின் பாவங்களை போக்குகிற சருவேசுரனுடைய செம்மறிப்  புருவாகிய இயேசுவே>

        எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி>

உலகத்தின் பாவங்களை போக்குகிற சருவேசுரனுடைய செம்மறிப்  புருவாகிய இயேசுவே>

      எங்கள்பேரில் இரக்கமாயிரும் சுவாமி.

மு- உம்முடைய இரக்கத்தினால் எங்களை இரட்சித்தருளினீர்.

து-  எங்கள் தேவனுக்கு ஓர் இராட்சியமாக்கியருளினீர்.

பிரார்த்திப்போமாக> சர்வ வல்லப நித்தியராகிய  சருவேசுரா! தேவரீர் உமது ஏக திருக்குமாரனை உலக இரட்சகராக நியமித்தருளி> அவருடைய திரு இரத்ததினால் சாந்தியடையச் சித்தங் கொண்டீரே எங்கள் ஈடேற்றத்தின் இரகசியத்தை நாங்கள் தக்க விதமாய் வணங்கவும் அதன் வல்லபத்தால் இவ்வுலக ஜீவியத்தின் பொல்லாப்புக்கலில் நின்று காப்பாற்றப்பட்டு அதன் பலனைப் பரலோகத்தில் என்றென்றைக்கும் அனுபவிக்கும் அனுக்கிரகம் பண்ணியருள வேண்டுமென்று தேவரீரைக் கெஞ்சி மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய அதே கிறிஸ்துநாதர் மூலமாய் பெற்றுத்தந்தருளும் ஆமென் இயேசு.

(ஒவ்வொரு முறைக்கும் 7வருடப் பலன் ஒரு மாதம் முழுவதும் பரிபூரண பலன் )

இயேசுவே எனக்கு உதவியருளும்.......... 

⃰என் ஒவ்வொரு தேவைகளின்போதும் தாழ்மையுடன், நம்பிக்கையுடன் உம்மிடம் வர இயேசுவே எனக்கு உதவியருளும்.

⃰என் சந்தேகங்களில், கலக்கங்கள், சோதனைகளில் இயேசுவே எனக்கு உதவியருளும்.

⃰என் நம்பிக்கைகள், ஏமாற்றங்கள், துன்பங்கள் வேதனைகளில் இயேசுவே எனக்கு உதவியருளும்.

⃰மற்றவர் என்னை ஏமாற்றும்போது உம்மை மட்டும் நம்பியிருக்கும் எனக்கு இயேசுவே உதவியருளும்.

⃰நீரே என் ஆண்டவர், மீட்பர் என நான் வரும்போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

⃰என் வாழ்வில் எல்லா முயற்சிகளுமே தோல்விகளாக மாறும்போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

⃰நான் பொறுமையிழந்து என் சிலுவைகள் துன்பத்தின் மீது துன்பத்தைத் தரும்போது இயேசுவே எனக்கு  உதவியருளும். 

⃰நான் தனிமையில் வருத்தத்திலும் வேதனைகளிலும் உழலும்போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

⃰எப்போதும் எனது பலவீனங்கள் தோல்விகளின்போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

 

குறிப்பு:  இச்செபம் வல்லமை மிக்கது, உங்கள் வேண்டுதல் எவ்வளவு கஸ்டமானதாக இருந்தாலும் இச் ஜெபத்தின்மூலம் அடையலாம். மாதத்தின் முதல் வெள்ளியிலிருந்து தொடர்ந்து  15 நாட்களுக்கு இச்செபத்தை  செபிக்கவும். 

ஆண்டவரிலேயே  மகிழ்ச்சி கொள் உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.