வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம்  21ம் திகதி

இயேசு கிறிஸ்துநாதர் கல்லறையிலிருந்து உயிர்த்து எழுந்தருளித் தம்முடைய திருத்தாயாருக்குக் காண்பிக்கிறார்.


செபம்:

எல்லாவித சுகிர்த பாக்கியத்தாலும் நிறைந்த தாயாரே! உமது திருமைந்தன் உமக்குக் காணப்படும்பொழுது அந்த மகிமையான இராசாவைத் தொடர்ந்து பிதாப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் ஆதித்தகப்பன், ஆதித்தாய் முதற்கொண்டு நாலாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்த புண்ணிய ஆத்துமாக்கள் எல்லாரும் உம்மைத் தங்கள் இராக்கினியாகவும்,

நல்ல உபகாரியாகவும் வாழ்த்திக் கொண்டிருந்தார்கள். நீர் அவர்களுக்குள்ளே ஆண்டவளாய் நின்று அவர்களைப் பார்க்க அதிக சந்தோசமும் பாக்கியமும் அனுபவித்தீரே. நீசப்பாவியாகிய நானும் அவர்களோடு உம்மை மோட்ச இராக்கினியாக வாழ்த்தி, உமது திருமைந்தன் உயிர்த்ததினால் சந்தோசப்படுகிறேன். நான் மீட்புப்பெறும்வரையிலும் என்னைக் கைவிடாதேயும் என்று பிரார்த்திக்கிறேன். – ஆமென்.   


இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

பரிசுத்த கன்னிகையே! இயேசுநாதருக்குப் பின் நீரே என் உறுதியான நம்பிக்கையாயிருக்கிறீர்.


ü புனித பெர்நர்துவின் செபம் ……

ü சென்ம பாவமில்லாமல் …..

ü விண்ணுலகில்… அருள்… திரி..