வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 1ம் திகதி

தேவமாதா சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்டதின் பேரில் செபிப்போமாக

செபம்: இயேசுநாதருடைய திவ்விய தாயாரே! அநேகர் தங்கள் பாவத்தினால் கெட்டுப்போய் நரகத்தில் விழுந்து மோட்சத்துக்குத் தெரிந்து கொள்ளப்பட மாட்டார்கள் என்ற பரம இரகசியத்தை ஆராய்ந்து எண்ணுகிறபோது நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன்.

ஆகிலும் வேதபாரகர் எழுதியிருக்கிறபடி உமது பேரில் வைத்த நேசமான பக்தியானது மோட்சம் சேருவதற்கு நிச்சயத்துக்கு அடுத்த அடையாளமாய் இருக்கிறதினால் ஆறுதலடைந்து தேறி சந்தோஷப்படுகிறேன். என் நல்ல தாயாரே! நான் உம்மைச் சிநேகித்து உமது பேரில் என் நம்பிக்கையெல்லாம் வைத்து கூடின மட்டும் எவ்விதத்திலும் உமக்கு ஊழியம் செய்ய ஆசையாயிருக்கிறேன். உமது பேரில் நம்பிக்கை வைத்து, சாகும் வரையிலும் உம்மை சிநேகித்து, உமக்கு ஊழியம் செய்தால் நான் சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்டு, உம்முடைய உதவியினால் பேரின்ப பாக்கியத்தை அனுபவிப்பேன் என்று நிச்சயமாயிருக்கிறேன். ஆனால் என் பலவீனமும் என் உறுதியின்மையும் உமக்கு தெரிந்திருக்கின்றதே. என் ஆத்துமத்தில் நீர் மூட்டின பக்தி ஒருக்காலும் குறையாமல் மரணமட்டும் நிலைகொண்டு நான் இடைவிடாமல் உம்மை வணங்கி சிநேகித்து மன்றாடி மோட்சத்தை அடைந்து உம்மோடுகூட சதாகாலமும், நானிருக்கும்படி எனக்கு உதவி செய்தருளும்.  -  ஆமென்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

பரிசுத்த கன்னியே! என் தாயே, என் ஆண்டவளே, என்னை வழி நடத்தியருளும். 


புனித பெர்நர்துவின் செபம் ......

சென்ம பாவமில்லாமல் .....

விண்ணுலகில்... அருள்... திரி..