தொற்றுநோய் மற்றும் நோய்க்கிருமி பரவும் காலங்களில் சிலுவையில் அறையுண்ட இயேசுவை நோக்கிச் செபம்

அன்பான  இயேசுவே,  உலகின்  மீட்பரே,  நாங்கள்  உம்மேல்  கொண்டுள்ள  நம்பிக்கை எம்மை ஒருபோதும் கைவிடாது. எம்மேல் இரக்கம் வைத்து எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றும்.உலகெங்கும்பரவிவரும் இந்நோய்க்கிருமியின் தாக்கத்திலிருந்து எங்களைக் காத்தருள உம்மையே வேண்டுகிறோம்.

நோயுற்றவர்களைக்குணமாக்கும்,ஏனையோரைநோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்தருளும். அனைவரின் உடல் நலனுக்காகவும் பணியாற்றுபவர்களைத் திடப்படுத்தும்.  உம்  இரக்கத்தின்திருமுகத்தை  எம்மீது  திருப்பி,  உமதுபேரன்பினால்  எம்மைக் காத்தருளும். என்றும் எமக்காய்ப் பரிந்துரைக்கும் உம் தாயும் எங்கள் அன்னையுமான கன்னி மரியாவின்  பரிந்துரையால்  உம்மை  நோக்கி  மன்றாடுகின்றோம்,  என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்றவர் நீரே -ஆமென்.