Home | Guestbook | Links | Webmaster  

 
 

kontonavn
Bergen Tamilkatolske Forening

Driftkonto
36242493111

post@bergentamilkat.com

 

RETNINGSLINJER FOR NASJONALE GRUPPER I ST PAUL MENIGHET

 

 

 

 

 
b
 
.
 
 
 


சமூக அளவிலே ஆற்றப்படும் இறைபணிக்கு தெளிவான எடுத்துக்காட்டாய் அமைவது பங்கு. ஏனெனில் அது தன் எல்லைக்குள் காணப்பெறும் வேறுபட்ட எல்லா மனித வளங்களையும் ஒன்று திரட்டி திருச்சபையின் பொதுமைக்குள் கொணர்கிறது. பங்கானது மறைமாவட்டத்தின் ஓர் உயிரணுவைப் போன்றுள்ளது. எனவே, பொதுநிலையினர் தம் சொந்த மறைமாவட்டத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருக்க வேண்டும். மறைமாவட்டம் மேற்கொள்ளும் முயற்சிகளில் பங்குகொள்ள வேண்டும்.

நோர்வே - ஒஸ்லோ மறைமாவட்டத்தில் உள்ள பங்குகளில் ஒன்றுதான் பேர்கன் புனித பவுல் பங்கு. இப்பங்கில் அதிக தமிழ் கத்தோலிக்கர்கள் வாழ்கிறார்கள். இத்தமிழ் கத்தோலிக்கர்களின் ஆன்மீக, விசுவாச, சமூக, பண்பாட்டு வாழ்க்கை நிலைகளை மேம்படுத்துகின்ற, பாதுகாக்கின்ற பொறுப்பு பங்குக் குருவானவருக்கு அடுத்தபடியாக பங்குச்சபைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்பங்குச்சபையே பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் ஆகும்.

தோற்றமும் வளர்ச்சியும்:

1987 ஆம் ஆண்டு அருட்தந்தை பே. இருதயநாதன் அடிகளாரின் முயற்சியால் தமிழ் கத்தோலிக்கர்களிலிருந்து 9 அங்கத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது. சில வருடங்களாக பேர்கனில் தமிழ் குருவானவர் இல்லாத காரணத்தால் செயற்பாடு குன்றியிருந்த இவ் ஒன்றியம் மீண்டும் அருட்தந்தை ஜெகத் பிறேமநாத் குணபாலா அடிகளாரின் வருகையினால் புத்துயிர் பெற்று இன்று 11 அங்கத்தவர்களுடன் பங்கிற்கும் திருச்சபைக்கும் தனது பணியை ஆற்றிவருகிறது.

செயற்பாடுகள்:

 

1 - குருவுடன் சேர்ந்து பங்கை வழிநடத்துவது.

2 - மக்கள் கத்தோலிக்க விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் தொடர்ந்து வாழ உழைத்தல்.

3 - பங்கு மக்களிடையே ஒற்றுமையையும் ஒன்றிணைந்து வேலை செய்யும் தன்மையை உருவாக்குதல்.

4 - ஆண்டுக்கொருமுறை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உதவி செய்தல்.

5 - பக்திசபைகளுக்கான ஒன்று கூடலை ஒழுங்குபடுத்துதல்.

KONTO

kontonavn: Bergen Tamil Katolsk

Driftkonto: 36242493111


epHthf mikg;G

 


 

 

 

 

 

.

 
Home |
Guestbook | Links | Webmaster  

 

Copyright 2007 URdesign. All rights reserved.