‛கடவுள்  அவனை  விடுவிக்கமாட்டார்’  என்று  என்னைக்  குறித்துச்  சொல்வோர்  பலர்.  ஆயினும்,  ஆண்டவரே,  நீரே  எனைக்  காக்கும்  கேடயம்;  நீரே  என்  மாட்சி;  என்னைத்  தலைநிமிரச்  செய்பவரும்  நீரே.  நான்  உரத்த  குரலில்  ஆண்டவரிடம்  மன்றாடுகிறேன்;  அவர்  தமது  திருமலையிலிருந்து  எனக்குப்  பதிலளிப்பார்.

 

திருப்பாடல்கள் 3:2-4

மோதல்களாலும்,  பிரிவினைகளாலும்  சிதறுண்டு  நிற்கும்  இவ்வுலகிற்கு  நற்செய்தியை  எடுத்துரைக்கும்  நோக்கத்தில்,  நமக்கு,  ஒன்றிப்பு  எனும்  கொடையை  அருளுமாறு  இறைத்தந்தையிடம்  தனிப்பட்ட  விதத்தில்  இறைவேண்டலை  மேற்கொள்ள,  இயேசு  கிறிஸ்துவை  பின்பற்றவேண்டும்.  தன்  மீட்பளிக்கும்  பாடுகள்  வழியாக  கிறிஸ்து  பெற்றுத்தந்த  குணப்படுத்தலையும்,  ஒப்புரவையும்  நமக்கு  வழங்கவேண்டும்  என்பதே,  நம்  முதன்மை  இறைவேண்டலாக,   இந்த  முரண்பாடுகள்,  மற்றும்,  பிரிவினைகளுக்கான  பதிலுரையாக,  இருக்கவேண்டும்.

 - திருத்தந்தை  பிரான்சிஸ்

Go to top
Template by JoomlaShine