ஆண்டவரே,  எனக்கு  இரங்கும்;  ஏனெனில்,  நான்  தளர்ந்து  போனேன்;  ஆண்டவரே,  என்னைக்  குணமாக்கியருளும்;  ஏனெனில்,  என்  எலும்புகள்  வலுவிழந்து  போயின.  என்  உயிர்  ஊசலாடுகின்றது;  ஆண்டவரே,  இந்நிலை  எத்தனை  நாள்?  ஆண்டவரே,  திரும்பும்;  என்  உயிரைக்  காப்பாற்றும்.  உமது  பேரன்பை  முன்னிட்டு  என்னை  மீட்டருளும். 

 

திருப்பாடல்கள் 6:2-4

அனைவரின்  உரிமைகளைப்  பாதுகாத்து  ஊக்குவிப்பதற்கு,  அரசியல்  மற்றும்,  மதத் தலைவர்கள்  ஒருங்கிணைந்த  அணுகுமுறையைக்  கையாளும்  பொறுப்பைக் கொண்டுள்ளனர்.  பிரதிநிதிகள்  மேற்கொள்ளும்  முயற்சிகளில்,  ஏழைகள்,  மற்றும்,  விளிம்புநிலையில்  உள்ளோருக்கு  சிறப்புபக்  கவனம்  கொடுக்கப்படவேண்டும்.  சந்திப்புக்  கலாசாரமே,  ஒன்றுபட்ட,  மற்றும்,  ஒப்புரவாக்கப்பட்ட  உலகை  அமைப்பதற்கும்,  நம்  பொதுவான  இல்லமாகிய  இப்பூமியைப்  பாதுகாப்பதற்கும்,  அடித்தளமாக  அமையும்.

- திருத்தந்தை  பிரான்சிஸ்

ஜெயந்தன் அமதி
(தமிழ் கத்தோலிக்க ஆன்மகுரு, புனித பவுல் ஆலயம்)

Nygårdsgaten 3, 5015, பேர்கன், நோர்வே

Tlf - 0047-46321641, {0047-55215968} 

e-mail - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

 

 

 இறையுறவுகளுக்கு வாழ்த்துக்கள்!

இறைபணியை இலகுபடுத்த இணையவழி கூடுதல் சந்தர்ப்பம் தருகின்றது. இறைவார்த்தையை எடுத்துச்சொல்ல இலத்திரனியல் உதவிக்கு வருகின்றது.
கோடானகோடி தளங்கள் வலையமைப்பில் கொட்டிக்கிடக்கின்றன.

பொழுதுபோக்கிற்காக, தகவலுக்காக, கல்விக்காக, சேவைக்காக, வியாபாரத்திற்காக, விளையாட்டிற்காக, அரசியலுக்காக, ஆக்கத்திற்காக, அழிவிற்காகவென அம்பாரமாய் வலைத்தளங்கள் குவிந்துகிடக்கின்றன.

ஆண்டவரில் இணைக்கின்ற ஆன்மீக தளங்களும் அதிகமாய்த் தேவைப்படுகின்றன. மனிதனை இறைவனோடும், மனிதனை மனிதனோடும் இணைக்கின்ற பணியில் நம் Bergentamilkat.com ஒரு சிறு பங்களிப்பையேனும் செய்துவிடும் என்பது நம் உறுதி.

இறைசெய்தியையும் ஆலயத் தகவல்களையும் அறிவித்து நாம் இறையன்பிலும் மனித உறவிலும் வளர இவ்வூடகம் நமக்கு உதவுவதாக! அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாக என்ற நம் ஆண்டவரின் செபம் நமக்கு பலம் தருவதாக!

நன்றி,
ஜெயந்தன் அமதி
(தமிழ் கத்தோலிக்க ஆன்மீககுரு, புனித பவுல் ஆலயம், Nygårdsgaten 3, 5015, பேர்கன், நோர்வே
Tlf - 0047-46321641, {0047-55215968}  e-mail - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

 

Go to top
Template by JoomlaShine