- Details
- Super User
- அறிவித்தல்
- Hits: 138
அமரர் அருள்தந்தை அல்பேர்ட் விக்டர் ஜெயசிங்கம் அமதி
யாழ் அமல மரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருள்தந்தை அல்பேர்ட் விக்டர் ஜெயசிங்கம் அடிகளார் 29-09-2020 அன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
1955 சித்திரை 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த அருள்தந்தையவர்கள் 1979ம் ஆண்டு அமல மரித்தியாகிகள் சபையில் துறவியானார். 1984ல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டபின்பு அமல மரித்தியாகிகளின் மறையுரைஞர் குழுவில் சிறிது காலம் பணியாற்றியபின் அமதிகள் சிறிய குருமடத்தின் பொறுப்பாளராகவும் அமதிகளின் யாழ் மாகாண நிதிமேலாளராகவும் கடமையாற்றினார். பின் 1994ல் அமல மரித்தியாகிகளின் உரோமை உயர்பீடத்தில் துணை நிதிமேலாளராகப் பணியாற்ற அழைக்கப்பட்ட அருட்டந்தையவர்கள், அப்பணியில் 2005ம் ஆண்டுவரை சிறப்பாகப் பணியாற்றினார்.
- Details
- Super User
- அறிவித்தல்
- Hits: 395
வைகாசி 7 ம் திகதிமுதல் ஆலயவழிபாடுகளில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குமுறைகள்
இறைமக்கள் செய்யவேண்டியவை:
➢ வழிபாடுகளில் பங்கெடுப்பதற்கு முன்பதிவும் அனுமதியும் பெற்றிருத்தல்வேண்டும். (நாளாந்த வழிபாடுகளுக்கு (திங்கள் - வெள்ளி) முன்பதிவுசெய்வது இலகுவானது)
➢ நோய் அறிகுறியெதுவும் (சிறிய அறிகுறியேயாயினும்) தென்பட்டால் ஆலயத்திற்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளவும்.
Read more: வைகாசி 7 ம் திகதிமுதல் ஆலயவழிபாடுகளில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குமுறைகள்
- Details
- Super User
- அறிவித்தல்
- Hits: 1098
திருத்தந்தை பிரதிநிதியின் ஒஸ்லோ திருப்பலி – 14-01-2019
ஸ்கண்டிநேவியாவிற்கான திருத்தந்தையின் பிரதிநிதி அதிமேற்றாணியார் மேதகு ஜேம்ஸ் பற்றிக் க்றீன் ஆண்டகையினால் ஒப்புக்கொடுக்கப்படும் வருடாந்த திருப்பலி எதிர்வரும் தை 14ம் திகதி (14-01-2019) அன்று ஒஸ்லோ புனித ஊளாவ் பேராலயத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெறும்.
அதனிமித்தம் பேர்கன் புனித பவுல் ஆலயத்தில் திங்கள் மாலை 7 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும் வாராந்தத் தமிழ்த் திருப்பலி 14 தை 2019 அன்று இடம்பெறாது.
- Details
- Super User
- அறிவித்தல்
- Hits: 1806
கரோல் உலா – 2018
பேர்கன் தமிழ் கத்தோலிக்க இளையோரினால் கிறிஸ்து பிறப்புப் பண்டிகையையொட்டி வருடாவருடம் முன்னெடுக்கப்படும்
கரோல் உலா
எதிர்வரும் மார்கழி 17ம் திகதி தொடக்கம் மார்கழி 23ம் திகதிவரை இல்லந்தோறும் நடைபெறும் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
நம் இளையோர் இந்நிகழ்வின்மூலம் திரட்டும் தங்கள் நன்கொடை தாயகத்தில் இயக்கச்சி, கிளிநொச்சி ஆகிய இரு இடங்களிலும் வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வி பொதுத்தராதர சாதாரண தரத்துடன் (O/L) இடைவிலகும் மாணவ / மாணவியரின் (40 பிள்ளைகள்) தொடர்கல்வி உதவித்திட்டத்திற்கான பங்களிப்பாக அமைய இருக்கிறது.
தங்களின் மேலான ஒத்துழைப்பை வேண்டிநிற்கின்றோம்.
நன்றி.
பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம்.
- Details
- Super User
- அறிவித்தல்
- Hits: 1011
Juleverksted 7. des 2018
பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய இளையோருக்கான Juleverksted எதிர்வரும் 7ம் திகதி, வெள்ளி மாலை 5 மணிமுதல் 6:30 மணிவரை நடைபெறும்.
5 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இளையோரையும் கலந்துகொள்ளும்படி அழைக்கின்றோம்.
இடம்: பேர்கன் புனித பாவுலு பாடசாலை Kantinen
நேரம்: 17:00 – 18:30
காலம்: 7. des. 2018
p.ஜெயந்தன் அமதி (Tlf - 0047-46321641, e-mail - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
- Details
- Super User
- அறிவித்தல்
- Hits: 1250
Birgitta Hjem புனர்நிர்மாணப் பணிக்கான நிதியுதவி
அன்புடையீர்,
புனித பவுல் ஆலய வளாக Birgitta Hjem புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.
இப்பணிகளுக்கு பெருந்தொகைப்பணம் (10 மில்லியன் Kr.) தேவைப்படுவதால் பங்கில் இணைந்து செயற்படும் வெவ்வேறு தேசியக் குழுக்களிடமிருந்தும் நிதியுதவியினை புனித பவுல் ஆலய நிர்வாகம் எதிர்பார்த்து நிற்கிறது.
எனவே இதற்கான நிதிப்பங்களிப்பின் ஒரு கட்டமாக பேர்கன் தமிழ் கத்தோலிக்க குடும்பங்கள் (சுமார் 100 குடும்பங்கள்) ஒவ்வொன்றிடமிருந்தும் ஒரு கணிசமான தொகைப் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.
எனவே தங்கள் மேலான பங்களிப்பைச் செலுத்தி இப்பணிக்கு ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக்கொள்ளுகின்றோம்.
நன்றி.
தங்கள் தாராள பங்களிப்பை நாடிநிற்கும்,
பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம்.
Bank konto nr: 3624 24 93154
- Details
- Super User
- அறிவித்தல்
- Hits: 1615
ஆன்மிக குருவின் குடும்ப தரிசிப்பு
அன்புள்ளவர்களே, பேர்கன் தமிழ் கத்தோலிக்க குடும்பங்களை தரிசிப்பதற்கு உதவியாக பொருத்தமான திகதியுடன் உங்கள் பெயர், தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களைத் தெரியப்படுத்தவும்.
அச்சிடப்பட்ட படிவங்களை தமிழ் திருப்பலிகளில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது நேரடியாகவோ, தொலைபேசிவாயிலாகவோ தொடர்புகொண்டு (Fr.ஜெயந்தன் - tlf- 46321641, e-post:This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) உங்கள் இல்லதரிசிப்பை ஒழுங்குசெய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இத்தகவலை மற்றோருக்கும் தெரியப்படுத்தி உதவிபுரியும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்.
நன்றி,
Fr.ஜெயந்தன் அமதி
- Details
- Super User
- அறிவித்தல்
- Hits: 1118
அனைத்து ஆன்மாக்கள் இளைப்பாற்றித் திருப்பலி- 5 கார்த்திகை 2018
அனைத்து ஆன்மாக்கள் இளைப்பாற்றித் திருப்பலி எதிர்வரும் கார்த்திகை 5ம் திகதி (5-11-2018) அன்று 19:00 மணிக்கு புனித பாவுல் ஆலயத்தில் ஒப்பக்கொடுக்கப்படும்.
இறைபதமடைந்த நம் உறவுகள், நண்பர்கள் அனைவருடையவும் பெயர்களை திருப்பலியின் முன் வாசித்து பலி ஒப்புக்கொடுக்க ஏதுவாக பெயர்களை எழுதிவழங்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
(தமிழில் எழுதினால் வாசிப்பது எனக்குச் சுலபம்)
p. ஜெயந்தன் அமதி...
(Tlf - 0047-46321641, e-mail - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
- Details
- Super User
- அறிவித்தல்
- Hits: 1106
இளையோருக்கானகூட்டம் - 30 ஐப்பசி 2018
பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய இளையோருக்கான கூட்டம் வருகின்ற செவ்வாய், 30 ஐப்பசி 2018 அன்று 17:00 மணிக்கு பேர்கன் புனித பவுல் ஆலயத்தில் இடம்பெறும்.
அனைத்து தமிழ் கத்தோலிக்க இளையோரையும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கின்றோம்.
p. ஜெயந்தன் அமதி
Møte for Tamil Katolsk ungdommer – 30. Oktober 2018
Møte for Tamil Katolsk ungdommer vil bli holdt tirsdag 30. Oktober 2018, kl. 17:00 ved St Paul kirke.
Presten inviterer alle tamilsk katolske ungdommer til å delta.