ஆண்டவரே,  உம்  கூடாரத்தில்  தங்கிடத்  தகுதியுள்ளவர்  யார்?  உம்  திருமலையில்  குடியிருப்பவர்  யார்?  மாசற்றவராய்  நடப்போரே!  —  இன்னோர்  நேரியவற்றைச்  செய்வர்;  உளமார  உண்மை  பேசுபவர்;  தம்  நாவினால்  புறங்கூறார்;  தம்  தோழருக்குத்  தீங்கிழையார்;  தம்  அடுத்தவரைப்  பழித்துரையார்.  நெறிதவறி  நடப்போரை  இழிவாகக்  கருதுவர்;  ஆண்டவருக்கு  அஞ்சுவோரை  உயர்வாக  மதிப்பர்;  தமக்குத்  துன்பம்  வந்தாலும்,  கொடுத்த  வாக்குறுதியை  மீறார்.

  திருப்பாடல்கள் 15:1-4

முதல்வராக  இருக்க  விரும்புவோர்,  பணியாளர்களாக  இருக்க  வேண்டும்  என்று  அன்று  தன்  சீடர்களிடம்  இயேசு  கூறிய  வார்த்தைகள்,  இன்று,  நம்மனைவருக்கும்  பொருந்துவதாக  உள்ளன.  ஒருவரிடம்  என்ன  உள்ளது  என்பதை  வைத்து அல்ல,  மாறாக,  என்ன  அவர்  கொடுக்கிறார்  என்பதை  வைத்தே,  ஒருவர்  கணிக்கப்படுகிறார்.  ‘மானிட மகன்  தொண்டு  ஏற்பதற்கு  அல்ல,  மாறாக,  தொண்டு  ஆற்றுவதற்கு  வந்தார்'  என்ற  இயேசுவின்  வார்த்தைகளில்  அனைத்தும்  அடங்கியுள்ளன.  இயேசுவின்  பாதையில்,  அதாவது  பணியின்  பாதையில்  நடைபோடுவது  என்பது,  சிலுவையின்  சுவையைத்  தருவதாக  உள்ளது  என்றபோதிலும்,  பிறருக்கு  உதவும்  பணி  நம்மில்  வளரும்போது,  நாமும்  இயேசுவைப்போல்  உள்ளுக்குள்  மேலும்  சுதந்திரத்தை  உணர்கிறோம்.

 திருத்தந்தை  பிரான்சிஸ்

பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய நிர்வாக அவை


சமூக அளவிலே ஆற்றப்படும் இறைபணிக்கு தெளிவான எடுத்துக்காட்டாய் அமைவது பங்கு. ஏனெனில் அது தன் எல்லைக்குள் காணப்பெறும் வேறுபட்ட எல்லா மனிதவளங்களையும் ஒன்றுதிரட்டி திருச்சபையின் பொதுமைக்குள் கொணர்கிறது. பங்கானது மறைமாவட்டத்தின் ஓர் உயிரணுவைப் போன்றுள்ளது. எனவே பொது நிலையினர் தம் சொந்த மறைமாவட்டத்தின்மீது அதிக அக்கறை கொண்டிருக்க வேண்டும். மறைமாவட்டம் மேற்கொள்ளும் முயற்சிகளில் பங்குகொள்ள வேண்டும்.
நோர்வே – ஒஸ்லோ மறைமாவட்டத்தில் உள்ள பங்குகளில் ஒன்றுதான் பேர்கன் புனித பவுல் பங்கு. இப்பங்கில் ஏராளமான தமிழ் கத்தோலிக்கர்கள் வாழ்கிறார்கள். இத்தமிழ் கத்தோலிக்கர்களின் ஆன்மீக, விசுவாச, சமூக, பண்பாட்டு வாழ்க்கை நிலைகளை மேம்படுத்துகின்ற, பாதுகாக்கின்ற பொறுப்பு பங்குக் குருவானவரின் அணுசரணையோடு தமிழ் கத்தோலிக்க ஆன்மீகக்குருவிடம் வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக இப்பொறுப்பு பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய நிர்வாகஅவையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிர்வாகஅவை, பேர்கன் தமிழ் கத்தோலிக்கரை ஒன்றுசேர்த்து இணைந்தியங்கும் பிற பக்திச்சபைகளையும் பணிக்குழுமங்களையும் உபகுழுக்களையும் ஒன்றிணைத்து தமிழ் கத்தோலிக்கர் சமய, சமுக பண்பாட்டு வாழ்வில் வளர உழைக்கிறது.

 

E-post : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Henry Richmond Manuel : 480 42 465 (- epost: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. )

 

 

பேர்கன் புனித பவுல் ஆலய தமிழ் கத்தோலிக்க ஒன்றிய நிர்வாக அவை

பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியத்தை 9 பேர்கொண்ட நிர்வாக அவை வழிநடத்துகின்றது. கடந்த 2021, மாசியில் பணிப்பொறுப்பேற்ற தற்போதைய நிர்வாக அவையில்:

1 - திரு. ஹென்றி றிச்மண்ட் மனுவல் (தலைவர்)

2 - திருமதி. அமிர்தா இம்மானுவல் (செயலாளர்)

3 - திரு. ரஞ்சன் மரியாம்பிள்ளை (பொருளாளர்)

4 - திருமதி. ஜெனிற்றா சின்னராஜா (உப தலைவர்)

5 - திரு. சிறில் அந்தோனிப்பிள்ளை சிறிதர் (உப செயலாளர்)

6 - திருமதி. நீக்கிளாப்பிள்ளை மேரி அசுன்ரீனா நிலாவதி 

7 - திரு. ஞானதாசன் சந்தியோகு அலெக்ஸாண்டர் ஜெயந்தன்

8 - திரு. விஜயகுமார் ராசையா

9 - திரு. டோமினிக் ஜெரோஷன் நவி தாஸ் ஆகியோர் பணியாற்றுகின்றனர். 

 

 

Kontonavn 
Bergen Tamilkatolske Forening

Driftkonto 36242493111

Vipps: 55 65 17

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Nygårdsgaten 3, 5015 Bergen

 

 

Go to top
Template by JoomlaShine