வழிபாட்டுக்குழுவினர்


திருஅவையின் வாழ்வின் ஊற்றும் மையமும் உச்சமுமாய் இருப்பது திருப்பலியே. வழிபாடுகளே இறைவனை மனிதரிடமும், மனிதரை இறைவனிடமும் ஐக்கியப்படுத்துவதில் முதலிடம் பெறுகின்றது. இயேசுவின் இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்ற வேண்டுகோள் அவரது கல்வாரிப் பலியை ஆலயப்பீடத்தில் இரத்தம் சிந்தாவகையில் மீண்டும் மீண்டும் ஒப்புக்கொடுக்க உன்னத சந்தர்ப்பம் தந்திருக்கின்றது. 
அத்தகைய வழிபாடுகளை பக்திசிரத்தையோடும் ஒழுங்குநேர்த்தியோடும் ஒழுங்கமைக்க குருவிற்கு ஒத்தாசையாகப் பணியாற்றுகின்ற ஒரு குழுமமே வழிபாட்டுக் குழுவினர். ஆலயத்திற்குள்ளும் பிறஇடங்களிலும் பொதுவழிபாட்டு ஒழுங்குளை மேற்கொண்டு வாழிபாடுகள் சிறக்க இக்குழுவினர் உழைக்கின்றார்கள். 
செயற்பாடுகள்


1) திருப்பலி மற்றும் வழிபாடுகளை ஒழுங்குபடுத்தல்.
2) வழிபாடுகளுக்குரிய முன்னுரை, மன்றாட்டு, நன்றிச்செபங்களை ஆயத்தம்செய்து வாசகர்களைநியமித்தல். 
3) வணக்கமாதம் போன்ற விசேடதருணங்களில் இறையன்னையின் திருச்சுரூப வீட்டுத் தரிசிப்பு மற்றும் செபமாலைதியானத்தில் குடும்பங்களை ஊக்குவித்தல்.
4) இறைவார்த்தைப்பகிர்வு போன்ற செபவழிபாடுகளை ஒழுங்கமைத்தல்.

இவ்வாறான பணிகளினால் தாம் வாழும் இந்த பேர்கன் மண்ணில் தமிழ்மொழியில் கத்தோலிக்க இறைவழிபாடும் ஆன்மிகமும் சிறக்ககுருவுடன் இணைந்துசெயலாற்றுகின்றது பேர்கன் தமிழ் கத்தோலிக்க வழிபாட்டுக் குழு.