கடவுளுக்கு  உகந்த,  தூய,  உயிருள்ள  பலியாக  உங்களைப்  படையுங்கள்.  இதுவே  நீங்கள்  செய்யும்  உள்ளார்ந்த  வழிபாடு.  இந்த  உலகத்தின்  போக்கின்படி  ஒழுகாதீர்கள்.  மாறாக,  உங்கள்  உள்ளம்  புதுப்பிக்கப்  பெற்று  மாற்றம்  அடைவதாக!  அப்போது  கடவுளின்  திருவுளம்  எது  எனத்  தேர்ந்து  தெளிவீர்கள்.  எது  நல்லது,  எது  உகந்தது,  எது  நிறைவானது  என்பதும்  உங்களுக்குத்  தெளிவாகத்  தெரியும்.
உரோமையர் 8:29-31

நம்மில்  தமது  உறைவிடத்தை  அமைக்க விரும்பி,  அயராமல்  நம் இதயக்கதவைத்  தட்டிக்கொண்டிருக்கும்  கடவுளுக்கும்,  குழுவில்  உடன்வாழ்கின்ற  சகோதரர்களுக்கும்,   இதயக்கதவை  எப்போதும்  திறந்து  வைத்திருக்கவேண்டும்.  உடன்வாழ்  சகோதரர்களுக்கு  இதயக்கதவை  திறங்கள்.

 

-- திருத்தந்தை  பிரான்சிஸ் 

பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம்

1960பதுகளிலேயே ஈழத்தமிழர் நோர்வேயில், அதிலும் குறிப்பாக பேர்கனில் குடியேறத்தொடங்கியிருந்தனர். அவர்களுள் கத்தோலிக்கரின் ஆன்மிக விடயங்களில் கவனம் செலுத்தவென அவ்வப்போது கத்தோலிக்க குருக்களினால் ஆற்றப்பட்ட ஆன்மிகப்பணி காலக்கிரமத்தில் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டு ஒஸ்லோ மறைமாவட்ட நிர்வாகரீதியிலான பணிகளில் தனி இடத்தையும் பெற்றுக்கொண்டது.

அருட்த்தந்தை இருதயநாதன் அவர்களின் ஆரம்பப்பணிகள் (1988-1998) பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் உருவாகி சரியான பாதையில் பயணிக்க உறுதியான அடித்தளமிட்டன. அவரைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு முதல் யாழ் அமல மரித்தியாகிகள், முறையே

வண. ஜகத் பிரேம்நாத் அமதி (2004-2011),

வண. எட்மண்ட் றெஜினோல்ட் அமதி (2011–2017) மற்றும்

வண.ஜெயந்தன் பச்சேக் அமதி (2018- )

அகியோரின் தொடர்பணிகளினால் வழிநடத்தப்படுகின்றது. நடப்புக்காலத்தில் 150 இற்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்களைக் கொண்டிருக்கும் பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் பேர்கன் புனித பவுல் பங்குக்குழுமத்தில் உயர்த்துடிப்புள்ள ஓர் அங்கமாகச் செயற்பட்டுவருகின்றது.

 

Go to top
Template by JoomlaShine