மனிதருடைய  நடத்தையெல்லாம்  அவர்  பார்வையில்  குற்றமற்றதாய்த்  தோன்றலாம்.  ஆனால்,  ஆண்டவர்  அவர்  உள்ளெண்ணத்தைச்  சீர்தூக்கிப்  பார்க்கிறார்.

பலிசெலுத்துவதைவிட  நேர்மையாகவும்  நியாயமாகவும்  நடப்பதே  ஆண்டவருக்கு  உவப்பளிக்கும்.
 
மேட்டிமையான  பார்வை,  இறுமாப்புக்  கொண்ட  உள்ளம்  —  இவை  பொல்லாரிடம்  பளிச்சென்று  காணப்படும்  பாவங்கள்.

ஒருவர்  பொய்  பேசிச் சேர்க்கும்  பொருள்,  காற்றாய்ப்  பறந்துவிடும்;  அவரது  உயிரையும்  அது  வாங்கிவிடும்.

ஏழை  கூக்குரலிடும்போது  எவன்  காதைப்  பொத்திக்கொள்கிறானோ,  அவன்  தானே  உதவிக்காக  மன்றாடும்போது  எவரும்  அவனுக்குச்  செவி  கொடுக்கமாட்டார்.

நீதி  நிலைநாட்டுவது  நேர்மையானவருக்கு  மகிழ்ச்சியளிக்கும்;  தீமை  செய்வோருக்கோ  அது  திகிலுண்டாக்கும்.

 - நீதிமொழிகள் 21:2-4, 6, 13, 15

லெபனாண் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடி அனர்த்தம்பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

140 மேற்பட்டோர் கொல்லப்பட ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

நகரின் பெரும்பகுதி பாதிப்படைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இல்லிடமிழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டடோருக்கு உதவிசெய்ய கத்தோலிக்க தொண்டு நிறுவனங்களும் நமது பேர்கன் புனித பவுல் ஆலயப்பங்கும் முனைந்து நிற்கின்றன.

மேற்படி மனிதநேயப்பணிக்கு 'பெய்ரூட் 2020"  என குறிக்கப்பட்ட கோயில் உண்டியலில் பங்களிப்புச் செய்யலாம் அல்லது 617931 என்ற Vipps இலக்கத்திற்கு பணம் செலுத்தலாம்.

சேகரிக்கப்படும் மொத்த நிதியுதவியும் Caritas மேற்பார்வையில் ஜேர்மன் ‘Kirke in Not’ அமைப்பின்மூலம் பாதிக்கப்பட்டோருக்கு அனுப்பப்படுகின்றது.

Bergen, 7. aug 2020

Alois Arnstein Brodersen Can.Reg., Sogneprest

நோர்வேயில் முதல் தமிழ் குரு அருள்பணியாளர் பிராங்ளின் பெர்ணாண்டோ     குருத்துவ அருள்பொழிவும் முதல் திருப்பலியும்


2020ம் ஆண்டு ஜூன் 20ம் நாள் நோர்வே தளத்திரு அவை வரலாற்றில் இன்னுமொரு முக்கிய நாளாகும். அருட்சகோதரர் பிராங்ளின் பெர்ணாண்டோ அவர்கள் ஒஸ்லோ மறைமாவட்ட ஆயர் மேதகு பேர்ண்ற் ஐட்ஸ்விக் (Bernt Eidsvig) அவர்களால் ஒஸ்லோ புனித யோவான் ஆலயத்தில் அருள்பணியாளராக குருத்துவ அருள்பொழிவு செய்யப்பட்டார்.

நோர்வே கத்தோலிக்க திருச்சபை

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கத்தோலிக்க விசுவாசம் நோர்வே மண்ணில் நிலைகொண்டது. புனித ஊளாவ் (St Olav) என்னும் நோர்வேஜிய மன்னன் கத்தோலிக்க மறையைப் பரப்ப தம் உயிரையும் ஈந்தார். பின்பு மத்தியகாலத்தில் எழுந்த  பிரிவினைச் சபையின் நெருக்குவாரத்தினால் நோர்வே கத்தோலிக்க திருச்சபை களையிழந்தது.
இருபதாம் நூற்றாண்டின் இறுதி தாசப்தங்களிலும் தொடர்ந்த 2000ம் ஆண்டையடுத்த  காலத்திலும் நோர்வேயை நோக்கிப் புலம்பெயர்ந்த கணிசமான கத்தோலிக்கரின் வருகையைத் தொடர்ந்தும் நோர்வே கத்தோலிக்க திருச்சபை புதுவடிவம் பெறுகிறது.
நோர்வே கத்தோலிக்க திருச்சபை முறையே, ஒஸ்லோ (Oslo), ட்றொம்சோ (Tromsø), ட்றொண்ட்ஹைய்ம்(Trondheim) என மூன்று நிர்வாக மறையலகுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் சுமார் 150000 கத்தோலிக்கரைக் கொண்டிருக்கும் ஒஸ்லோ மறைமாவட்டம் அதி வந்தனைக்குரிய ஆயர் பேர்ண்ற் ஐட்ஸ்விக் (Bernt Eidsvig) ஆண்டகை அவர்களின் ஆயத்துவத்தில் வளர்ந்து வருகின்றது. மொத்தம் 28 பங்குப் பணித்தளங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒஸ்லோ மறைமாவட்டத்தில் ஆயரவர்களோடு இணைந்து சுமார் 70 குருக்களும், 25இற்கு மேற்பட்ட துறவற சபைகளைச் சேர்ந்த ஆண், பெண் துறவிகளும் இன்னும் நூற்றிற்கு மேற்பட்ட பொது நிலைப்பணியாளர்களும் ஆர்வமாய்ப் பணிபுரிகின்றனர்.

 

Go to top
Template by JoomlaShine