ஊனியல்புக்கு  ஏற்ப  வாழ்வோர்  கடவுளுக்கு  உகந்தவர்களாய்  இருக்க  முடியாது.  ஏனெனில்,  ஊனியல்புக்கேற்ப  வாழ்வோரின்  நாட்டம் எல்லாம் அந்த  இயல்புக்கு  உரியவற்றின்மீதே  இருக்கும்;  ஆனால்,  ஆவிக்குரிய  இயல்புக்கு  ஏற்ப  வாழ்வோரின்  நாட்டம்  ஆவிக்கு  உரியவற்றின்மீதே  இருக்கும்.   ஊனியல்  மனநிலை  கொண்டிருப்போருக்கு  வருவது  சாவே;  ஆவிக்குரிய  மனநிலை  கொண்டிருப்போருக்கு  வருவது  வாழ்வும்  அமைதியும்  ஆகும்.   ஏனெனில்,  ஊனியல்  மனநிலை  கடவுளுக்குப்  பகையானது;  அது  கடவுளின்  சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பது இல்லை,  இருக்கவும்  முடியாது.
உரோமையர் 8:5-8

நாம்  அனைவரும்  ஒன்றாக  காப்பாற்றப்படுவோம்  அல்லது,  எவரும் காப்பாற்றப்படமாட்டோம் என்ற  விழிப்புணர்வை  வளர்த்துக்கொள்ளவேண்டியது,  இந்நாள்களில்  நமக்கு  தேவைப்படுகின்றது.  உலக  வாழ்வின்  ஒரு  பகுதியாக  இருக்கின்ற  அழிவும்,  துன்பமும்,  பிரச்சனைகளைப்  பெருக்கும்  தளமாக  அமைந்துள்ளன,  இவை,  பூமிக்கோளம்  முழுவதையும்  பாதிப்பதில்  கொண்டுபோய்  சேர்க்கும்.  

– திருத்தந்தை  பிரான்சிஸ் 

திருஅவை
அகிலமெங்கும் வியாபித்திருக்கின்ற கத்தோலிக்க திருஅவை இறைவனின் திருவுளம். வரலாற்றில் பல திருப்பங்களைக் கண்டும், தன் இளமைகுன்றாமல் மானிடருக்கெல்லாம் நற்செய்திகொண்வர நாளாந்தம் உழைக்கிறது இந்த இறையரசுக்குழுமம். நிர்வாகமுறைமைக்கென்று இது, அகில, தேச, மறைமாவட்ட, பங்குஅலகுகளாகபணிபரபு;புகின்றது. ஒரே இறைவன், ஒரே மீட்பர், ஒரே திருஅவை.

Go to top
Template by JoomlaShine