ஆண்டவரே,  உம்  கூடாரத்தில்  தங்கிடத்  தகுதியுள்ளவர்  யார்?  உம்  திருமலையில்  குடியிருப்பவர்  யார்?  மாசற்றவராய்  நடப்போரே!  —  இன்னோர்  நேரியவற்றைச்  செய்வர்;  உளமார  உண்மை  பேசுபவர்;  தம்  நாவினால்  புறங்கூறார்;  தம்  தோழருக்குத்  தீங்கிழையார்;  தம்  அடுத்தவரைப்  பழித்துரையார்.  நெறிதவறி  நடப்போரை  இழிவாகக்  கருதுவர்;  ஆண்டவருக்கு  அஞ்சுவோரை  உயர்வாக  மதிப்பர்;  தமக்குத்  துன்பம்  வந்தாலும்,  கொடுத்த  வாக்குறுதியை  மீறார்.

  திருப்பாடல்கள் 15:1-4

முதல்வராக  இருக்க  விரும்புவோர்,  பணியாளர்களாக  இருக்க  வேண்டும்  என்று  அன்று  தன்  சீடர்களிடம்  இயேசு  கூறிய  வார்த்தைகள்,  இன்று,  நம்மனைவருக்கும்  பொருந்துவதாக  உள்ளன.  ஒருவரிடம்  என்ன  உள்ளது  என்பதை  வைத்து அல்ல,  மாறாக,  என்ன  அவர்  கொடுக்கிறார்  என்பதை  வைத்தே,  ஒருவர்  கணிக்கப்படுகிறார்.  ‘மானிட மகன்  தொண்டு  ஏற்பதற்கு  அல்ல,  மாறாக,  தொண்டு  ஆற்றுவதற்கு  வந்தார்'  என்ற  இயேசுவின்  வார்த்தைகளில்  அனைத்தும்  அடங்கியுள்ளன.  இயேசுவின்  பாதையில்,  அதாவது  பணியின்  பாதையில்  நடைபோடுவது  என்பது,  சிலுவையின்  சுவையைத்  தருவதாக  உள்ளது  என்றபோதிலும்,  பிறருக்கு  உதவும்  பணி  நம்மில்  வளரும்போது,  நாமும்  இயேசுவைப்போல்  உள்ளுக்குள்  மேலும்  சுதந்திரத்தை  உணர்கிறோம்.

 திருத்தந்தை  பிரான்சிஸ்

திருவழிபாட்டுப்  பாடல்கள்

26.09.2021

 

ஞாயிறு  தமிழ்  திருப்பலி

புனித  பவுல்  ஆலயம்,  பேர்கன்.

26-09-2021

 

வருகைப்பாடல்

ஒலிவடிவம்

 

 

இறைவனின் ஆவி நிழலிடவே
இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே
என்னை அழைத்தார் அன்பில் பணித்தார்
அவர் பணிதனைத் தொடர்ந்திடவே

வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும்
அடிமைகள் விடுதலை அடைந்திடவும்
ஆண்டவர் அரசில் துயரில்லை என
வான்; அறிய பறை சாற்றிடவும்

குருடரும் ஒளியுடன் நடந்திடவும்
குவலயம் நீதியில் நிலைத்திடவும்
அருள் நிறை காலம் அவனியிலே - இங்கு
வருவதை வாழ்வினில் காட்டிடவும்

 

 

தியானப்பாடல் / பதிலுரைப்பாடல்

ஒலிவடிவம்

 

 

பயன் படுத்தும் இறைவா
பதரான என்னைப் பயனுள்ள கருவியாய்
பயன் படுத்தும் இறைவா

எனது கரங்கள் உம் பணி புரிய
எனது கால்கள் உம் வழி செல்ல
எனது கண்கள் உம்மைப்போல் பார்க்க - 2
எனது நாவும் உம் புகழ் பாட

எனது செவிகள் உம் மொழி கேட்க
எனது மனமும் உம்மையே காட்ட
எனது மனம் உம்மையே நினைக்க - 2
எனது இதயம் உம்மில் அக்களிக்க

எனது இன்பம் பிறருக்கு நிறைவாய்
எனது வாழ்வும் பிறருக்கு ஒளியாய்
எனது வாழ்வு பிறருக்கு வாழ்வாய் - 2
எனது சாவு பிறருக்கு வாழ்வாய் 

 

 

காணிக்கைப்பாடல்

ஒலிவடிவம்

 

 

உன்னிடத்தில் என்ன இல்லை
என்னிடத்தில் ஒன்றுமில்லை
இயேசு உன் பாதத்தில் காணிக்கை நான் வைக்க
ஏதொன்றும் சொத்துமில்லை
பாவம் செய்தேன் இரத்தத்தில் சுத்தமில்லை

கண்களை நான் தந்திருப்பேன்
கண்களுக்கே பார்வையில்லை - 2
இறைவா உன் பாதத்தில் உள்ளத்தை நான் வைக்க
உள்ளத்தில் ஞானம் இல்லை
காய்ந்தே போனேன்
கண்ணீரும் கண்ணில் இல்லை - 2

நெஞ்சுக்குள்ளே வந்துவிடு
நிம்மதியைத் தந்துவிடு - 2
நேசிக்க வந்த என் நெஞ்சத்தை சுத்தம் செய்
நெற்றிக்கு முத்தம் கொடு
நீயே என்னைக் காணிக்கை பெற்றுக்கொடு - 2

 

 

 

திருவிருந்துப்பாடல்

ஒலிவடிவம்

 

 

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கின்றார்

வருந்திச் சுமக்கும் பாவம் - நம்மைக்
கொடிய இருளில் சேர்க்கும்
செய்த பாவம் இனிப்போதும்
அவர் பாதம் வந்து சேரும் - 2

குருதி சிந்தும் நெஞ்சம் - நம்மைக்
கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
அங்கு பாரும் செந்நீர் வெள்ளம்
அவர் பாதம் வந்து சேரும் - 2

சிலுவை சுமந்த கரங்கள் - நம்மை
வாழவைக்கும் கரங்கள்
இறைவாழ்வு நம்மில் மலர
அவர் பாதம் வந்து சேரும் - 2 

 

 

நன்றிப் பாடல்

ஒலிவடிவம்

 

 

என்னை வாழவைக்கும் இயேசு என்னோடு இருக்க
என்ன குறை வரும் எனக்கு
இயேசு நாமம் வாழ்கவே இயேசு நாமம் வாழ்கவே - 2

எளியவர் எல்லாம் வாருங்கள் என்றே
என் இயேசு அழைத்தாரே
ஆறுதல் தேடி அலைந்திட்ட என்னை
கரம் தொட்டு அணைத்தாரே
எல்லை இல்லா அன்பு கொண்டார்
தொல்லை எல்லாம் தீர்த்து வைக்க
எந்தன் உள்ளம் வந்த தெய்வமே

முடவர்கள் எல்லாம் நடந்தனர்
எந்தன் யேசுவின் வல்லமையால்
ஒளிதனை இழந்தோர் விழிதனை அடைந்தார்
கர்த்தரின் கருணையினால்
நம்பி வந்தேன் நல்லவரே
நன்மை எல்லாம் தந்து என்னை
என்றும் காக்க வந்த தெய்வமே

 

 

நிறைவுப் பாடல்

ஒலிவடிவம்

 

 

மாதாவே சரணம் - உந்தன்
பாதாரம் புவிக்காதாரம் - கன்னி
மாதாவே சரணம்
மாபாவம் எம்மை மேவாமல் - 2
காப்பாயே அருள் ஈவாயே - கன்னி

மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோயுறக்; கண்டோம் - 2
தபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம்
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம்

மாநிலத்தில் சமாதானமே நிலவ
நாஸ்திக உலகம் ஆஸ்திகமடைய - 2
உயிருடல் அனைத்தும் உவப்புடன் அளித்தோம் - 2
உம் இருதயத்தில் என்றுமே அணைப்பாய்

Go to top
Template by JoomlaShine