அறிவுரைக்குச்  செவிகொடு,  கண்டிப்பை  ஏற்றுக்கொள்;  பின்வரும்  காலமெல்லாம்  ஞானமுள்ளவனாய்  வாழ்வாய்.

மனிதர்  மனத்தில்  எழும்  எண்ணங்கள்  ஏராளம்;  ஆனால்  ஆண்டவரது  திட்டமே  நிலைத்துநிற்கும்.

நற்பண்பாளர்  வாக்குப்  பிறழாமையை  நாடுவர்.  பொய்யராயிருப்பதைவிட  ஏழையாயிருப்பதே  மேல். 

ஆண்டவருக்கு  அஞ்சி  நடந்தால்  ஆயுள்  நீடிக்கும்;  அவ்வாறு  நடப்பவருக்கு  மனநிறைவு  கிட்டும்;  தீங்கும்  அவரை  அணுகாது. 

சோம்பேறி  உண்கலத்தில்  கையை  இடுவார்;  ஆனால்  அதை  வாய்க்குக்  கொண்டுபோகச்  சோம்பலடைவார்.

 
 - நீதிமொழிகள் 19:20-24

லெபனாண் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடி அனர்த்தம்பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

140 மேற்பட்டோர் கொல்லப்பட ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

நகரின் பெரும்பகுதி பாதிப்படைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இல்லிடமிழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டடோருக்கு உதவிசெய்ய கத்தோலிக்க தொண்டு நிறுவனங்களும் நமது பேர்கன் புனித பவுல் ஆலயப்பங்கும் முனைந்து நிற்கின்றன.

மேற்படி மனிதநேயப்பணிக்கு 'பெய்ரூட் 2020"  என குறிக்கப்பட்ட கோயில் உண்டியலில் பங்களிப்புச் செய்யலாம் அல்லது 617931 என்ற Vipps இலக்கத்திற்கு பணம் செலுத்தலாம்.

சேகரிக்கப்படும் மொத்த நிதியுதவியும் Caritas மேற்பார்வையில் ஜேர்மன் ‘Kirke in Not’ அமைப்பின்மூலம் பாதிக்கப்பட்டோருக்கு அனுப்பப்படுகின்றது.

Bergen, 7. aug 2020

Alois Arnstein Brodersen Can.Reg., Sogneprest

There are no articles in this category. If subcategories display on this page, they may have articles.

Go to top
Template by JoomlaShine