தூய கன்னிமரியாவின் கணவர புனித யோசேப்பு

Saint Joseph

 இவர் இயேசுவின் வளர்ப்பு தந்தை ஆவார்.  புனித கன்னி மரியாவின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.

புனிதரின் வாழ்வு: யோசேப்பு தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர்.  இவரது தந்தையின் பெயர் ஏலி என்கிற யாக்கோபு ஆகும். நாசரேத்தில் வாழ்ந்து வந்த யோசேப்பு தச்சுத் தொழில் செய்து வந்தார். தாவீது குலத்து கன்னிப் பெண்ணான மரியாவுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வேளையில், மரியா தூய ஆவியின் வல்லமையால்

இறைமகனைக் கருத்தாங்கும் பேறுபெற்றார். மரியா திடீரென கருவுற்றதால் யோசேப்பு குழப்பம் அடைந்தார். நேர்மையாளரான இவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கிவிட நினைத்தார். மரியா கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை வானதூதர் வழியாக அறிந்த இவர் மரியாவை ஏற்றுக் கொண்டார்.

இயேசு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் கோவிலில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடியபோதும் மரியாவையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் யோசேப்பு பாதுகாத்தார். பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட பொழுது, யோசேப்பு மிகுந்த கவலையுடன் தேடி அலைந்து அவரைக் கண்டுபிடித்தார். தச்சுத் தொழிலில் வந்த வருமானம்மூலம் குடும்பத்தைக் காப்பாற்றினார். மரியாவும் நெசவுத் தொழில்மூலம் இவருக்கு உதவினார்.

யோசேப்பு இயேசுவுக்கும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தார். மரியாவுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் யோசேப்பு விளங்கினார். சிறந்த வாய்மையும் பொறுமையும் கொண்ட யோசேப்பு, திருக்குடும்பத்தை சிறப்பாகத் தலைமைதாங்கி வழிநடத்தினார். இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவும் மரியாவும் அருகில் இருக்க யோசேப்பு பாக்கியமான மரணம் அடைந்தார்.

 

 

உலகத் திருச்சபையின் பாதுகாவலர்

1870 ஆம் ஆண்டு ஆயர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தந்தை சூசையை  உலகத்திருச்சபையின் பாதுகாவலர் என்று அறிவிக்குமாறு திருத்தந்தை ஒன்பதாம் பத்தினாதரிடம் விண்ணப்பித்தனர். அவர்  «கன்னி மரியாவுக்கும்> சூசைக்கும் மண ஒப்பந்தம் நிறைவேறியது. பரிசுத்த ஆவியின் துணையால்  கண்ணிமை கெடாமல் மரியா இயேசு பாலனை பெற்றெடுத்தார். பாலன் இயேசு அனைத்திலும் தனது தந்தைக்கு கீழ்படிந்து வந்தார். மனுஉரு எடுத்த இயேசுவை காண்பதற்காக அரசர்களும்> இறைவhf;கினர்களும் கhலq;கhலமாக காத்திருந்தும் முடியவில்லை. ஆனால் சூசையோ இயேசுவின் அருகில் இருக்கும் பேறுபெற்றார். இயேசுவை கண்குளிரகக் கண்டார். அவருக்கு முத்தங்கள் ஆயிரம் கொடுத்து> தூக்கி வளர்க்கும் பேற்றினைபெற்றhர். அவருக்கு மறைக்கல்வியையும்> தச்சுத் தொழிலையும் கற்றுக்கொடுத்தார். இத்தகைய சிறப்புf;களுக்கு சொந்தக்காரரான புனித தந்தை சூசையை திருச்சபை எக்காலமும் பெருமதிப்பு கொடுத்து இவரிடம் மன்றாட்டுகளை எழுப்பி பெற்று வந்துள்ளது. திருச்சபைக்கு ஆபத்து ஏற்ப்பட்டபோதெல்லாம் சூசையிடம் மன்றாடி அதற்குரிய பலனைப் பெற்று வந்தது». " இவ்வாறு தனது அறிக்கையில் திருத்தந்தை ஒன்பதாம் பத்தினாதர் குறிப்பிட்டார். அத்துடன் சூசையை «அகிலத் திருச்சபையின் பாதுகாவலர் » எனப் பிரகடனப்படுத்தினார். மேலும் திருச்சபை

முழுவதும் மார்ச் 19 ம் நாள் முதல் பெரு விழாவைக் கொண்டாடவும் கட்டளை பிறப்பித்தார்.

சூசை என்னும் பெயர் ஆங்கிலத்தில் St. Joseph என்று கூறுவார்.

J   -    Justice          -------- நீதியுள்ளவர்

O -    Obedience   -------- கீழ்படிதல் உள்ளவர்

S  -    Silence        --------- அமைதியானவர்   

E -     Experience --------- அனுபவம் மிக்கவர்

P -     Prudence    -------- விவேகம் நிரம்பியவர்   

H -    Humility      --------- தாழ்ச்சி உள்ளவர்

 

புனித சூசையப்பரின் அடைக்கலச் செபம்

      புனித சூசையப்பரே! எங்கள் ஆபத்துகளில் உம்மண்டை ஓடிவருகிறோம், உமது பரிசுத்த பத்தினியின் உதவியை மன்றாடியபின்பு

உம்முடைய அடைக்கலத்தை நம்பிக்கையுடன்  வேண்டிக் கொள்கிறோம் . உம்மை மாசில்லாக் கன்னிகையாகிய  தேவதாயாருடன்  ஐக்கியப்படித்திய அந்த நேசமூலமாக மன்றாடுவதுமன்றிக் குழந்தையாகிய யேசுநாதரை அரவணைத்த பிதாவின் நேசமூலமாகவும், யேசுகிறிஸ்துநாதர்  தமது இரக்கத்தினால் அடைந்துகொண்ட சுதந்திரத்தை நாங்கள் இழந்து போகதபடிக்குத் தற்காக்கவும் எங்கள் தேவைகளில் உமது வல்லமையைக் கொண்டு எங்களுக்கு உதவி புரியவும் உம்மை  மன்றாடுகின்றோம்.

      ஓ! தேவ  திருவுளத்தால்  திவ்விய குடும்பத்துக்குத்  காவலாகத் தெரியப்பட்டவரே! யேசுக்கிறிஸ்து நாதருடைய உத்தம குடும்பத்தைக் தற்காத்தருளும்.  அன்பான பிதாவே, சகலவிதமான ஒழுங்க்கீனங்களிலும் கேடுகளிலும் தவறுகளிலும்நின்று எங்களை விலக்கியருளும். எங்கள் ஆபத்துகளில் அதிக பலமும் தஞ்சமுமானவரே! பிசாசுகளுடன்  போர்போருதும் இந்த வேளையில் மோட்சத்தில்நின்று எங்களைக் கண்ணோக்கும். பாலக யேசுவை பெருந்தீங்கில் நின்று  இரட்சித்ததுபோல சருவேசுரனுடைய பரிசுத்த திருச்சபையை சதிகாரச் சத்துருக்களிட-மிருந்தும்  சகல பொல்லாப்புக்களில் நின்றும் காத்தருளும். 

உம்மைக் கண்டு பாவித்து உமது உதவியாற்தாபரிக்கப்பட்டு  பரிசுத்தராய்ச் சீவிக்கவும், நித்திய மோட்ச பாக்கியத்தை அடைந்து கொள்ளவும் எங்கள் ஒவ்வொருவரையும் உமது இடைவிடாத அடைக்கலத்தில் வைத்தருளும்.

----ஆமென் .

 

புனித சூசையப்பரை நோக்கி வல்லமையுள்ள செபம்

புனித சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது, வல்லமை மிக்கது.  இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது.  எனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும்  உம் அடைக்கலத்தில்  வைக்கின்றேன்.  

      உம் வல்லமைமிக்க பரிந்துரையால்  உம்  திருமகனும்  எங்கள் ஆண்டவருமாகிய இயேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத் தாரும். இதன் வழியாக மறு உலகில் எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும்  செலுத்தக் கடவேன்.

       புனித சூசையப்பரே! உம் திருக்கரங்களில் உறங்கும் இயேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய  தயங்கியதில்லை. இறைவன் உம் மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும்.  நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்கு தரும்படி கூறும். 

 மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே, எங்களுக்காக மன்றாடும்.      

     ஆமென் .