✠ புனிதர்கள் சிரில் மற்றும் மெதோடியஸ் ✠ (Saints Cyril and Methodius)

ஆயர்கள் / ஒப்புரவாளர்கள் (Bishops / Confessors) அப்போஸ்தலர்களுக்கு நிகரானவர்கள் (Equals to the Apostles) ஐரோப்பாவின் பாதுகாவலர்கள் (Patrons of Europe) அடிமைகளின் அப்போஸ்தலர்கள் (Apostles to the Slavs)

பிறப்பு : சிரில் : கி.பி. 826 அல்லது 827 மெதோடியஸ் : கி.பி. 815 தெசலோனிக்கா, பைஸான்தீனிய பேரரசு (தற்போதைய கிரேக்க நாடு) (Thessalonica, Byzantine Empire (Present-day Greece)

இறப்பு : சிரில் : ஃபெப்ரவரி 14, 869 ரோம் (Rome)

மெதோடியஸ் : ஏப்ரல் 6, 885 வெலெராட், மொராவியா(Velehrad, Moravia)

ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) மரபுவழி திருச்சபை (Orthodox Church)

ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion) லூதரன் திருச்சபை (Lutheran Church)

நினைவுத் திருநாள் : ஃபெப்ரவரி 14

பாதுகாவல் : ரோமன் கத்தோலிக்க மற்றும் மரபுவழி திருச்சபைகளுக்கிடையேயான ஒற்றுமை (Unity between Orthodox and Roman Catholics), ஐரோப்பா (Europe), பல்கேரியா (Bulgaria), “மசெடோனியா” குடியரசு (Republic of Macedonia), "செக்" குடியரசு (Czech Republic), "ஸ்லோவேகியா" (Slovakia), "ல்ஜூப்ல்ஜனா" உயர்மறை மாவட்டம் (Archdiocese of Ljubljana)

புனிதர்கள் சிரில் மற்றும் மெதோடியஸ் ஆகிய இரு சகோதரர்களும் "பைஸன்டைன்" (Byzantine) நாட்டின் கிறிஸ்தவ இறையியலாளர்களும், மறை பரப்பாளர்களுமாவர். அவர்களின் நற்பணிகள் மூலம், அனைத்து அடிமைகளின் கலாசார வளர்ச்சியிலும் மேம்பாடு பெற்றனர். இதன் காரணமாகவே, இவர்களிருவரும், "அடிமைகளின்அப்போஸ்தலர்" என்று போற்றப்பட்டனர்.

தற்போதைய கிரேக்க நாடான "பைஸன்டைன்" (Byzantine) நாட்டில் பிறந்த இவர்களிருவரினதும் தந்தை பெயர்  லியோ (Leo) ஆகும். மரியா (Maria) இவர்களது தாயார் ஆவார். லியோ மற்றும் மரியாவுக்கு பிறந்த ஏழு குழந்தைகளில் சிரில் கடைக்குட்டி. சிரிலின் இயற்பெயர் காண்ஸ்டன்டைன் (Constantine) ஆகும். இவர் தமது மரணத்தின் சிறிது காலத்தின் முன்னே ரோம் நகரில் துறவறம் பெற்றபோது, சிரில் என்னும் மதப் பெயரை ஏற்றுக்கொண்டார்.

மைக்கேல் (Michael) எனும் இயற்பெயர் கொண்ட மெதோடியஸ், துருக்கி நாட்டின் வடமேற்கு பிராந்தியத்திலுள்ள மைசியன் ஒலிம்பஸ்

(Mysian Olympus) என்னுமிடத்தில் துறவறம் பெற்றபோது, தமது மதப் பெயராக மெதோடியஸ் எனும் பெயரை ஏற்றுக்கொண்டார்.

சிரிலுக்கு பதினான்கு வயது நடக்கையில் அவர்களது தந்தையார் மரணமடைந்தார். அந்நிலையில், பேரரசின் முதலமைச்சர்களுள் ஒருவராயிருந்த தியோக்டிஸ்டோஸ் (Theoktistos) என்பவர் அவர்களின் பாதுகாவலரானார். அவரே அவர்களது கல்விக்கும் உதவி புரிந்தார். இவர்கள் இருவரும் சிறப்பான முறையில் கல்வியைப் பூர்த்தி செய்தனர். சிரில், தமக்கு கிடைத்த ஆளுநர் பதவியை புறக்கணித்தார். ஆனால் அதே வேளையில் அவரது சகோதரரான மெதோடியஸ் ஸ்லாவிக் (Slavic) மொழி பேசும் மக்கள் வசிக்கும் பிராந்தியத்தில் அப்பதவியை ஏற்றுக்கொண்டார்.

சிரில், ஒரு துறவு மடத்தில் இணைந்தார். அவரது சகோதரர் மெதோடியஸ், சிறிது காலம் அரசு பதவியில் பணியாற்றிய பிறகு துறவு மடத்தில் இணைந்தார்.

மொராவியா (Duke of Moravia) பிராந்திய பிரபு, கிழக்குப் பிராந்திய பேரரசன் மைக்கேலிடம் (Eastern Emperor Michael) ஜெர்மன் ஆட்சியாளர்களிடமிருந்து அரசியல் சுதந்திரமும் திருச்சபை சுயாட்சியும் (Ecclesiastical Autonomy) கேட்டபொழுது, சிரில் மற்றும் மெதோடியஸ் ஆகிய இருவரின் வாழ்வில் திட்டவட்டமான மாற்றம் உண்டாகியது. அவர்கள் மறைப் பணியை ஏற்றுக்கொண்டனர்.

சிரிலுடைய முதல் பணி, கிழக்கு விதிமுறைகள் அமலிலிருந்த அப்பிராந்தியத்தில் ஒரு புதிய எழுத்துக்களை கண்டுபிடித்தலாயிருந்தது. பின்னர், அவருடைய சீடர்கள் சிரில்லிக் எழுத்துக்களை (Cyrillic alphabet) உருவாக்கினர். அவர்கள் சுவிசேஷங்கள், துதிப்பாடல், பவுல் எழுதிய கடிதங்கள் மற்றும் வழிபாட்டு புத்தகங்கள் ஆகியனவற்றை இணைந்து ஸ்லாவோனிக் மொழியில் மொழிமாற்றம் செய்தனர். ஸ்லாவோனிக் வழிபாட்டு முறையையும் உருவாக்கினர். மிகவும் சரளமாக அவர்கள் பிரசங்கித்த முறையானது, ஜெர்மன் மதத்தவரிடையே எதிர்ப்பை

உருவாக்கித் தந்தது. அப்போதைய ஜெர்மன் ஆயர், ஸ்லாவிக் ஆயர்களையும் குருக்களையும் அருட்பொழிவு செய்ய மறுத்தார்.

இதன் காரணமாக சிரில் ரோமுக்கு மேல்முறையீடு செய்தார். ரோம் நகருக்கு பயணித்த சிரிலும், மெதோடியஸும் திருத்தந்தை இரண்டாம் அட்ரியான் (Pope Adrian II) தமது புதிய கண்டுபிடிப்பான சிரில்லிக் எழுத்துக்களை (Cyrillic alphabet) அங்கீகரித்தது கண்டு அகமகிழ்ந்தனர். ரோம் நகரில் துறவறம் பூண்ட சிரில், நீண்ட காலம் வாழ இயலாமல் ஐம்பதே நாட்களில் மரணமடைந்தார்.

மெதோடியஸ் தமது மறை பணிகளை மேலும் பதினாறு வருடங்களுக்கு தொடர்ந்தார். அவர் ஸ்லாவிக் மக்களுக்கு திருத்தந்தையின் பிரதிநிதியாக செயல்பட்டார். புதிய ஆயர் ஒருவரை அருட்பொழிவு செய்தார்.

பவேரியன் ஆயர்கள் பலரது முன்னாள் அதிகார வரம்பிலிருந்த பகுதிகள் நீக்கப்பட்டதால், அவர்கள் மெதோடியஸுக்கு எதிராக பல குற்றச்சாட்டுப் புயலைக் கிளப்பினர். இதன் பயனாக, ஜெர்மன் பேரரசன் லூயிஸ் (Emperor Louis the German) மெதோடியசை மூன்று ஆண்டுகளுக்கு நாடு கடத்தினான். திருத்தந்தை எட்டாம் ஜான் அவரை விடுவித்தார்.

ஃபிராங்கிஷ் (Frankish) மொழி பேசும் குருக்களின் தொடர்ந்த தொந்தரவு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்று இருந்தது. அவர்கள் தொடர்ந்து மெதோடியஸின்மேலே மதங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். தம்மைக் காத்துக்கொள்ளவும், தமது கண்டுபிடிப்பான  ஸ்லாவோனிக் வழிபாட்டு முறையின் பயன்பாட்டினை நிலைநிறுத்தவும், மெதோடியஸ் ரோம் நகர் பயணித்தார். மீண்டும் தம்மை அவர்  நிரூபித்தார்.

அதன்பின்னர், மெதோடியஸ் ஜுர வேகத்தில், எட்டே மாத காலத்தில் மொத்த திருவிவிலியத்தையும் ஸ்லாவோனிக் மொழியில் மொழிபெயர்த்தார். கி.பி. 885ம் ஆண்டின் தவக்காலமான ஏப்ரல் மாதம், புனித செவ்வாய்க்கிழமையன்று (6ம் தேதி), தமது தேவாலயத்திலேயே

மெதோடியஸ் மரணமடைந்தார். அவர் மரிக்கும்போது அவரது சீடர்கள் அவரைச் சுற்றியிருந்தனர்.

மெதோடியஸின் மரணத்தின் பின்னரும் அவரது எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து எதிர்த்தே வந்தனர். சிரில் மற்றும் மெதோடியஸ் சகோதரர்களின் பணி மொராவியா நாட்டில் முடிவுக்கு வந்தது. அவர்களது சீடர்கள் சிதறிப்போயினர். ஆனால் இந்த வெளியேற்றங்கள் சிரில் - மெதோடியஸ் சகோதரர்களின் ஆன்மீக, வழிப்பாட்டு, மற்றும் கலாச்சார பணிகளை பல்கேரியா, போஹெமியா மற்றும் தென் போலந்து ஆகிய நாடுகளில் பரப்புவதில் சாதகமான விளைவைத் தந்தன. மொராவியா நாட்டின் பாதுகாவலர்களான இவர்கள் விசேடமாக, செக் மற்றும் ஸ்லோவாக் கத்தொலிக்கராலும், குரோஷியர்களாலும் (Croatians), செர்பிய மற்றும் பல்கேரிய (Orthodox Serbians and Bulgarians) மரபுவழி திருச்சபையினராலும் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். சிரில் - மெதோடியஸ் சகோதரர்கள் நீண்ட கால விருப்பமான கிழக்கு மற்றும் மேற்கு திருச்சபைகளின் ஒன்றிப்பிற்காக சிறப்பாக பணியாற்றியிருந்தனர்.

கி.பி. 1980ம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இச்சகோதரர்களை ஐரோப்பிய நாடுகளின் (புனிதர் பெனடிக்டுடன்) இணை பாதுகாவலர்களாக நியமித்தார்.