✠ அருளாளர் ஒன்பதாம் பயஸ் ✠ (Blessed Pius IX)

திருத்தந்தை (Pope)

பிறப்பு : மே 13, 1792 செனிகல்லியா, மார்ச்சே, திருத்தந்தை நாடுகள்

(Senigallia, Marche, Papal States)

இறப்பு : பெப்ரவரி 7, 1878 (வயது 85) திருத்தூதரக அரண்மனை, ரோம்  நகரம், இத்தாலி(Apostolic Palace, Rome, Italy)

ஏற்கும் சமயம் :  ரோமன் கத்தோலிக்க திருச்சபை 

(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம் : 3 செப்டம்பர் 2000

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II)

 

"ஜியோவானி மரிய மஸ்தாய் ஃபெர்ரெட்டி" (Giovanni Maria Mastai Ferretti) எனும் இயற்பெயர் கொண்ட அருளாளர் ஒன்பதாம் பயஸ், கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 16 ஜூன் 1846 முதல் 1878ல் தமது இறப்புவரை ஆட்சி புரிந்தவர் ஆவார்.

மே 13, 1792ல் 'செனிகல்லியா' (Senigallia) என்னுமிடத்தில், "கிரோலமோ டேய் கொண்டி ஃபெர்ரெட்டி" (Girolamo dei conti Ferretti) எனப்படும் பிரபுத்துவக் குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்த இவர், பிறந்த அன்றே திருமுழுக்கும் பெற்றார். "வோல்டேர்ரா" மற்றும் ரோம் (Volterra and in Rome) நகரிலுள்ள "பியாரிஸ்ட்" (Piarist College) கல்லூரியில் கல்வி கற்றார். தமது சொந்த ஊரான 'செனிகல்லியாவில்' (Senigallia) இறையியல் கற்ற இவர், 1814ல் ஃபிரஞ்சு சிறையிருப்பிலிருந்து (French captivity) திரும்பியிருந்த திருத்தந்தை ஏழாம் பயசை (Pope Pius VII) சந்தித்தார். 1815ல் திருத்தந்தையின் உயர் காவலராக இணைந்த இவர், திடீரென தமக்கு ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக வி்ரைவிலேயே அதிலிருந்து நீக்கப்பட்டார். திருத்தந்தையின் கால்களில் தஞ்சமடைந்த இவரை எழுப்பிய திருத்தந்தை இவர் இறையியல் படிப்பைத் தொடர ஆதரவு தந்தார்.

ஏப்ரல் 10, 1819ல் மஸ்தாய் குருத்துவம் பெற்றார். 1827ல், தமது 35 வயதில் மஸ்தாய் திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோவால் (Pope Leo XII) "ஸ்போலேட்டோ" (Spoleto) உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். 1840ல், "புனித

மர்செல்லினோ ஈ பியெட்ரோவின்" கர்தினால் குருவாக (Cardinal-Priest of Santi Marcellino e Pietro) அறிவிக்கப்பட்டார்.

1846ல் திருத்தந்தை பதினாறாம் கிரகோரியின் (Pope Gregory XVI ) மரணத்தின் பின்னர் நடந்த திருத்தந்தை தேர்தலில் மஸ்தாய் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தந்தையாக அருட்பொழிவு செய்யப்பட்டார். தமது பெயரையும் ஒன்பதாம் பயஸ் (Pius IX) என்று ஏற்றுக்கொண்டார்.

32 ஆண்டுகள் திருத்தந்தையாக இருந்த இவரே அதிக காலம் இப்பதவியினை வகித்தவர் ஆவார். இவர் கூட்டிய முதல் வத்திக்கான் பொதுச்சங்கம் (1869-1870) திருத்தந்தையின் தவறா வரம் ஒரு விசுவாசக் கோட்பாடு என அறிக்கையிட்டது.

தூய கன்னி மரியாளின் அமலோற்பவத்தை இவர் ஆதரித்தார். மரியாளுக்கு இடைவிடா சகாய மாதா என்னும் பட்டத்தையும் அளித்தார். இப்பட்டத்துக்கு காரணமான கிரீட் தீவு பைசாந்திய ஓவியத்தை உலக இரட்சகர் சபை குருக்களின் பாதுகாவலில் ஒப்படைத்தார். 

இவர் தனது 26 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். பிறகு இவர் "மக்களின் பணியாளர்" என்றழைக்கப்பட்டு, மறைப்பணியாற்றினார். பின்னர் இவர் மக்களின் தூதுவராக சிலே Chile நாட்டிற்கு அனுப்பப்பட்டார். அங்குச் சென்ற சில ஆண்டுகளிலே ஸ்போலேட்டோ என்ற மறைமாவட்டத்திற்கு பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1833 ஆம் ஆண்டு இமோலாவிற்கு Imola பேராயராக அனுப்பப்பட்டார். 1840 ஆம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார். பின்னர் 16 ஜூன் 1846 ஆம் ஆண்டு 9 ஆம் பயஸ் என்ற பெயருடன் திருத்தந்தையாக உயர்த்தப்பட்டார். இவர் தனது பதவிக்காலத்தில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தார்.

இவர் மிகப் பொறுமையுடன் அனைத்துப் பிரச்சனைகளையும் மேற்கொண்டார். இவர் வாழும்போதே, புனிதராகப் புகழப்பட்டார். இவர் வாழ்ந்தபோது பல நோயாளிகளை குணமாக்கியுள்ளார்.

ஏறக்குறைய 32 ஆண்டுகள் திருத்தந்தையாக பணியாற்றிய இவர் இறைவாக்கினராகக் கருதப்பட்டார்.

திருத்தந்தை நாடுகளின் அரசராக இருந்த இறுதி திருத்தந்தை இவர் ஆவார். 1870ல் அது இத்தாலிய தேசியவாத படையினரால் கைப்பற்றப்பட்டு இத்தாலிய பேரரசுடன் இணைக்கப்பட்டது.

திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 6 ஜூலை 1985 அன்று இவரை வணக்கத்திற்குரியவர் என அறிவித்தார். திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானோடு இவருக்கும் 3 செப்டம்பர் 2000ல் அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரின் நினைவுத் திருவிழா நாள் பெப்ரவரி 7 ஆகும்.

செபம்: என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! நீர் உமது சக்தியை எமது திருத்தந்தை 9 ஆம் பயஸிற்கு வழங்கி உம்மை மேன்மைபடுத்த வழிகாட்டினீர். நீர் அவருக்களித்த அவ்வல்லமையை எம் திருத்தந்தைக்கும் வழங்கி ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள நலன்களை தந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.