✠ புனித போஹெமியா நகர் ஆக்னெஸ் ✠ (St. Agnes of Bohemia )

பிறப்பு :  20 ஜூன் 1211 ப்ராக் (Prag), செக் குடியரசு

இறப்பு :  2 மார்ச் 1282  ப்ராக் (Prag), செக் குடியரசு

அருளாளர் பட்டம் : 1874 திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்

புனிதர் பட்டம் : 12 நவம்பர் 1989  திருத்தந்தை 2ம் ஜான் பால்

பாதுகாவல் :  செக் குடியரசு  (Czech Republic)

நினைவுத் திருநாள் :  மார்ச் 2

புனித ஆக்னெஸ், போஹெமியா அரசர் முதலாம் ஒட்டோகர் என்பவரின் மகள் ஆவார்.

இவர் இளம் வயதிலிருக்கும்போதே 2 முறை திருமணம் செய்வதற்கு நிச்சயமானவர். முதல்முறை போலேஸ்லவ்ஸ் (Boleslaus) என்பவருடனும், இரண்டாம் முறை அரசர் 2ம் பிரிட்ரிக் (Friedrich II) என்பவருக்கும் மண ஒப்பந்தமானவர்.

ஆனால் இருமுறையும் அரசியல் காரணமாக திருமணம் நடைபெறாமல் போனது. ஆக்னெஸ் தமக்கு திருமணம் நடைபெறக்

கூடாது என இறைவனிடம் இடைவிடாமல் வேண்டினார். அதன்படியே அவரின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றினார். இதனால் ஆக்னெஸ் மிக மகிழ்ச்சியடைந்தார்.

இவர் புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வை முன் மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தார். புனித கிளாராவின் நட்பைப் பெற்று வாழ்ந்தார் என்று அவரே எழுதிய கடிதங்கள் விளக்குகின்றது. இவர் மீண்டும் அரசர் 2ம் பிரட்ரிக் அல்லது அரசர் 2ம் ஹென்றி இவர்களுள் ஒருவரை திருமணம் செய்யவேண்டிய கட்டாயச் சூழ்நிலை உண்டானது. இதனால் 1234ம் ஆண்டு தனது அரசிக்குரிய கிரீடத்தை பெற்றார். இக்கிரீடத்தை பெற்றபோது தான் ஓர் கிளரீசியன் துறவி என்று தனக்குள் கூறிக்கொண்டு வார்த்தைப்பாடுகளைப் பெற்றார்.

இவர் தனது அரசிக்குரிய சொத்துக்கள், உடைமைகள் அனைத்தையும்கொண்டு, தேவாலயங்களுக்கும், துறவற இல்லங்களுக்கும் உதவினார். இவர் இறந்தபிறகு ஏராளமான புதுமைகளைச் செய்தார்.

செபம் :

ஏழ்மையின் நண்பனே எம் தலைவா!

நீர் ஏழைகளின் மேல் அன்பு கொண்டு, ஏழைகளுக்காகவே இவ்வுலகில் மனுவுரு எடுத்தீர். எங்களிடம் பணம், பதவி, பட்டமென அனைத்து செல்வங்கள் இருக்கும்போதும் மனநிம்மதி இல்லாமல் வாடுகின்றோம். புனித ஆக்னெசின் துணையாலும், உதவியாலும் எம்மிடம் உள்ளவற்றை பிறருடன் பகிர்ந்து, நிறைவுடன் வாழச் செய்தருள வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்,  ஆமென்