† விவிலிய பெண் முத்துக்கள்: வெரோனிக்கா †

விவிலிய பெண் முத்துக்கள் பதிவில் இன்று நாம் தியானிக்கப் போகிற பெண் மிகவும் முக்கிய மற்றும் சிறப்பு வாய்ந்தவர் ஆவார். இவரைப்பற்றி வேதாகமத்தில் அதிகமாக குறிப்பிடப்படவில்லை என்றாலும் இவர் செய்த விஷயத்தை எண்ணும் போதே கண்களில் நீர்த்துளிகள் சுரக்கின்றன.

வெரோனிக்கா; இவர் கிறிஸ்தவ பாரம்பரியத்தின் படி எருசலேமில் முதலாம் நுற்றாண்டில் வாழ்த்த ஓர் பரிசுத்தமான பெண். வெரோனிக்கா என்ற பெயருக்கு இலத்தீன் மொழியில் உண்மையின் உருவம் என்று பொருள். மாசிடோனியா மரபின்படி வெரோனிக்கா என்ற பெயருக்கு வெற்றியை சுதந்தரிப்பவர் என்று அர்த்தம்.

சிலுவைப்பாதையின் போது படைவீரர்களின் இரக்கமற்ற கொடுஞ்செயலால் இயேசுவின் மென்மையான மலர் போன்ற முகத்தில்

செந்நிற வியர்வை பெருக்கெடுத்து ஓடியது. அதனால் அவர் கண்களில் இருந்து பாதைகள் மறைக்கப்பட்டு கால்கள் தடுமாறின. இயேசுவின் அந்நிலையை காண்போர்களின் இதயத்தில் மரணவலி இருந்தன. இந்நிலையில் ஆச்சரியமூட்டும் நிகழ்வு நடந்தது. இப்படி நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. திடீரென்று பலரையும் விலக்கிவிட்டு பரிசேயர்கள், படைவீரர்கள், மறைநூல் அறிஞர்கள் என்று யாவரையும் பொருட்படுத்தாமல் இயேசுவின் அருகில் வந்து வெரோனிக்கா நின்றார். இயேசுவை கண்ட அவரின் கண்களில் இயேசுவின் மீது அவர் கொண்ட நிறைவாக அன்பு தெரிந்தது. எனது இயேசுவுக்கா இந்த நிலைமை? என்று கூறியவாறே இயேசுவின் திருமுகத்தை துணியால் துடைக்கலனார்.

21ஆம் நுற்றண்டிலே ஒரு பெண்ணால் அல்ல ஒரு சாதாரண எந்த மனிதனாலும் ஒரு அரசின் முடிவை எதிர்க்கவும் இயலாது, காவலர்களின் கெடுபிடிகளை தாங்கவும் இயலாது. ஆனால் வெரோனிக்கா தான் வாழ்த்த, பெண்கள் சமுதாயத்தில் பின்தங்கிய காலத்திலேயே யாரையும் பற்றியும் எண்ணாமல் எதற்கும் அஞ்சாமல், பிற்பகுதில் நடக்கக்கூடிய ஏளனங்களுக்கும் வேதனைகளுக்கும் இடம் கொடாமல் தனது வேதனை கலந்த அன்பை வாய் திறக்காமல் வெளிப்படுத்தினார். பாவிகளுக்கே வாரி வழங்கும் நம் இரக்கத்தின் சிகரமாகிய இயேசு பெருமான், அங்கும் ஓர் ஆச்சரியத்தை நிகழ்த்தினார். வெரோனிக்கா இயேசுவின் முகத்தை துடைத்த துணியில் அவருடைய மலர் திருவுருவம் படிந்தது. எத்துன்பத்தையும் பொருட்படுத்தாமல் வெரோனிக்கா செய்த அன்புச் செயலுக்கு இச்செயல் இயேசுவின் அன்புப் பரிசாக கிடைத்தது.

என்றோ மானிடராய் அவதரித்து வாழ்த்து முடித்து இன்று நம் உள்ளங்களில் ஜீவிக்கின்ற இயேசுவின் உருவ முகத்தை இப்போது நாம் கண்டு பரவசப்படுவது இத்துணியால்தான். இரத்தக் கறைப் படிந்த இயேசுவின் முக உருவம் கொண்ட துணி இன்றளவும் பிரான்ஸ் நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது.

வெரோனிக்கா யூத சமுதாயத்திலே ஒரு துணிச்சலான பெண். வெரோனிக்கா என்ற பெயர் விவிலியத்தில் நேரடியாக . குறிப்பிடப்படவில்லை. லூக் 8:43-48ல் 12 வருட காலமாக இரத்தப்போக்கினால் அவதியுற்ற ஒரு பெண் இயேசுவின் ஆடை விளிம்பை தொட்டவுடன் அவரின் வல்லமையினால் குணம் பெற்றார் என்பதை வாசிக்கிறோம். இப்பெண் வெரோனிக்காவாக இருக்கலாம் என்று சில வேத ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெரோனிக்கா இயேசுவின் இரத்தம் தோய்ந்த துணியை வைத்து திபேரிய பேரரசரை அவர் வியாதியில் இருந்து குணமாக்கினார் என நம்பப்படுகிறது.

வெரோனிக்காவின் இந்த இரத்தம் தோய்ந்த முகத்தின் பயபக்தி மார்க்கங்களை திருத்தந்தை 13ம் சிங்கராயர் 1885ல் அலங்கரித்தார். அதே வருடம் ஜூலை 12ல் அவர் புனிதையாக பிரகடனப்படுத்தினார். வெரோனிக்காவைப் புனிதையாக பல அங்கிலிக்கன் சபைகளும் கிழக்கிந்தியா சபைகளும் அங்கீகரித்துள்ளன. பிப்ரவரி 4ம் நாள் அவரது திருநாளாக கத்தோலிக்க திருச்சபை கொண்டாடுகிறது.