✠ புனித பிரிஜிட் ✠ ( St. Brigit of Kildare )

கில்டாரே நகர் துறவி 

பிறப்பு : 453 கில்டாரே Kildare, அயர்லாந்து

இறப்பு : பிப்ரவரி 524 (அகவை சுமார் 70)கில்டாரே Kildare, அயர்லாந்து

நினைவுத் திருவிழா : ஃபெப்ரவரி 1

பாதுகாவல் : அயர்லாந்து, உணவு, குழந்தைகள், வீட்டு விலங்குகள், திடீர், விபத்துகளிலிருந்து

புனித பிரிஜிட், பேட்ரிக் (Patrick) என்பவரிடமிருந்து திருமுழுக்குப் பெற்றார் என்று கூறப்படுகின்றது. இவர் தனது சிறுவயதிலிருந்தே பக்தியிலும், கிறிஸ்தவ விசுவாசத்திலும் சிறந்து விளங்கினார் என்று வரலாறு கூறுகின்றது. இவர் தனக்கு 14 வயது நடக்கும்போதே தன்னை துறவி போல நினைத்து, அவர்களைப் போலவே உடை உடுத்தி வாழ்ந்துள்ளார். சிறப்பாக இவர் தான் பிறந்த ஊரிலேயே, ஊரின்

கடைப்பகுதிக்குச் சென்று அங்கிருந்த சிறிய குகை ஒன்றில் வாழ்ந்துள்ளார். அதன்பிறகு துறவிகளுக்கான துறவற இல்லம் ஒன்றையும் எழுப்பியுள்ளார். சில ஆண்டுகள் கழித்து ஆண் துறவிகளுக்கென்றும் துறவற இல்லம் ஒன்றை நிறுவியுள்ளார். இந்த இரு துறவற இல்லங்களும் அயர்லாந்தில் மிகப் புகழ்வாய்ந்து காணப்பட்டது. இவர் தன் வாழ்நாள் முழுவதும் இறைவனின் மகிமைக்காகப் பல பணிகளை ஆற்றியுள்ளார். இவர் இறந்தபிறகு, இவர் பயன்படுத்திய பொருட்கள் பல ஐரோப்பா முழுவதிலும் இருந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. சிறப்பாக இவர் அணிந்த செருப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் அனைத்தும் துப்ளின் நகரில் (Dublin) உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

செபம் :

என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்யும் எல்லாம் வல்ல தந்தையே!  உம்மீது அளவில்லா அன்புக் கொண்டு, உமக்காகவே வாழ்ந்த பிரிஜிட்டைப் போல உமக்காக வாழ தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒவ்வொருவரையும் நீர் கண்ணோக்கியருளும். தங்களின் சொல் செயல் சிந்தனைகளில் உம்மை பற்றிகொண்டு என்றும் உமக்காக வாழும் பேற்றைத் தந்தருள வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம், ஆமென்