✠ புனிதர் லாரன்ஸ் ✠ (St. Lawrence of Brindisi)

கத்தோலிக்க குரு  / மறைவல்லுநர்  (Roman Catholic Priest  / Doctor of the Church)

பிறப்பு : ஜூலை 22, 1559 பிரிந்திசி, நேப்பிள்ஸ் அரசு (Brindisi, Kingdom of Naples)

இறப்பு : ஜூலை 22, 1619 (வயது 60) லிஸ்பன், போர்ச்சுகல் (Lisbon, Portugal)

ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை

அருளாளர் பட்டம் : ஜூன் 1, 1783 திருத்தந்தை  ஆறாம் பயஸ்

புனிதர் பட்டம் : டிசம்பர் 8, 1881 திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ

நினைவுத் திருவிழா : ஜூலை 21

பாதுகாவல் :  பிரிந்திசி (Brindisi)

புனிதர் லாரன்ஸ் (Saint Lawrence of Brindisi) ஒரு கத்தோலிக்கக் குருவும், கப்புச்சின் சபைத் (Order of Friars Minor Capuchin) துறவியுமாவார்.

கியுலியோ சீசர் ருஸ்ஸோ (Giulio Cesare Russo) எனும் இயற்பெயர் கொண்ட இவர், நேபிள்ஸ் அரசின், பிரிந்திசி (Brindisi) மாகாணத்தில், வெனீஷிய (Venetian) வணிகர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். வெனிஸ் நகரில் உள்ள புனித மார்க் கல்லூரியில் கல்வி பயின்ற பின்னர் "சகோதரர் லாரன்ஸ்" என்னும் பெயரோடு வெரோனாவில் (Verona) உள்ள கப்புச்சின் சபையில் இணைந்தார். 

இவர் பதுவை நகர பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற்றார். இவர் ஒரு திறமையான மொழியியலாளர் ஆவார். இவர் பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் செமிட்டிக் (Semitic languages) மொழிகளை சரளமாக திறமை கொண்டவராவார். ஹெப்ரூ (Hebrew), அரபிக் (Arabic), அராமைக் (Aramaic), அம்ஹரிக் (Amharic), டிக்ரினியா (Tigrinya), டிக்ரே (Tigre), அஸ்சிரியன் (Assyrian), மால்டிஸ் (Maltese) உள்ளிட்ட மொழிகள், “செமிட்டிக்” (Semitic languages) என்று அழைக்கப்படுகின்றன. கி.பி. 1582ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்ட லாரன்ஸ், ஒரு அறிவு செறிந்த குருவாக திகழ்ந்தார்.

கி.பி. 1596ம் ஆண்டு, ரோமில் உள்ள கப்புச்சின் சபைக்கு தள தலைவராக (Definitor General) நியமிக்கப்பட்டார்; திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட், அந்த நகரத்தில் உள்ள யூதர்களிடம் மறைபணியாற்றி அவர்களை மனம் மாற்ற இவரை அனுப்பினார். கி.பி. 1599ம் ஆண்டு தொடங்கி, லாரன்ஸ் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் பல கப்புசின் மடங்களை நிறுவுவதன் மூலம் கத்தோலிக்க மறுமலர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.

கி.பி. 1601ம் ஆண்டு, ரோமைப் பேரரசர் இரண்டாம் ருடால்ஃபின் (Rudolph II) இராணுவ படைகளுக்கு ஆன்மீக குருவாக பணியாற்றினார். அப்போது ஓட்டோமன் துருக்கியர்களுக்கு (Ottoman Turks) எதிராக போராட உதவ பிலிப் இம்மானுவலை (Philippe Emmanuel) சேர்த்துக்கொண்டார். ஒட்டோமன் பேரரசிடமிருந்து (Ottoman Empire) ஹங்கேரி (Hungary) நாட்டிலுள்ள (Székesfehérvár) என்னும் இடத்தை கைப்பற்ற நடந்த

போரின்போது, சிலுவையை மட்டுமே கையில் கொண்டு படைக்கு முன் சென்றார்.

இவர் கப்புச்சின் சபையின் தலைவராக (Vicar General of the Capuchin friars) கி.பி. 1602ம் ஆண்டும், அதன் பின்னர் 1605ம் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 1605ம் ஆண்டு அதனை ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் திருப்பீட தூதுவராக பவேரியாவுக்கு  பணியாற்ற அனுப்பப்பட்டார். பிறகு ஸ்பெயின் நாட்டின் திருப்பீட தூதுவராக பணியாற்றியபின்னர், இவர் 1618ம் ஆண்டு ஓய்வுபெற்றார். 1619ம் ஆண்டு, ஸ்பெயின் அரசருக்கு நேபிள்ஸ் (Viceroy of Naples) நடவடிக்கைகள் குறித்த ஒரு சிறப்பு தூதராக இவர் அனுப்பப்பட்டார். இந்த பணியை முடித்த பிறகு, லிஸ்பன் (Lisbon) நகரில், தனது பிறந்தநாள் அன்று மரித்தார்.

இவருக்கு 1783ம் ஆண்டு, திருத்தந்தை ஆறாம் பயஸ் அவர்களால் முக்திபேறு பட்டமும், 1881ம் ஆண்டு, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ அவர்களால் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. 1959ல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானால் இவர் திருச்சபையின் மறைவல்லுநராக (Doctor of the Church) அறிவிக்கப்பட்டார்.