திருச்சிலுவையின் மகிமை விழா - (14 September)

பேரிரக்கமுள்ள இறைவா,

மாந்தர் அனைவரின் மீட்புக்காக உம் ஒரே திருமகன் பணிவுடன் சிலுவையை ஏற்கத் திருவுளமானீர். மனித பார்வைக்கு வலுவின்மையாகவும் இகழ்ச்சிக்குரியதாகவும் இடறலாகவும் தோன்றும் சிலுவையின் மறைபொருளில் பொதிந்திருக்கின்ற உண்மையான இறைவல்லமையையும் இறைமாட்சியையும் இறைஞானத்தையும் ஆழ்ந்து உணர்ந்து, உம் திருமகனின் சிலுவை அளிக்கும் மீட்பை முழுமையாகப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு அருள்புரியும். உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.                         ஆமென்.