ஆண்டவர்  தாம்  செய்யும்  அனைத்திலும்  நீதியுடையவர்;  அவர்தம்  செயல்கள்  யாவும்  இரக்கச்  செயல்களே.  தம்மை  நோக்கி  மன்றாடும்  யாவருக்கும்,  உண்மையாய்த்  தம்மை  நோக்கி  மன்றாடும்  யாவருக்கும்,  ஆண்டவர்  அண்மையில்  இருக்கிறார்.  அவர்  தமக்கு  அஞ்சி  நடப்போரின்  விருப்பத்தை  நிறைவேற்றுவார்;  அவர்களது  மன்றாட்டுக்குச்  செவிசாய்த்து  அவர்களைக்  காப்பாற்றுவார்.

திருப்பாடல்கள் 145:17-19

 

செபிக்கும்  மனிதர்,  அடிப்படை  உண்மைகளைப்  பாதுகாக்கின்றனர்,  இந்நாள்களின்  மனத்தளர்வுகள்,  துன்பங்கள்  மற்றும்,  சோதனைகள்  போன்ற  அனைத்தின்  மத்தியில்,  மனித  வாழ்வு,  நாம்  வியந்துநோக்கும்  இறையருளால்  நிறைந்துள்ளது  என்பதை,  அவர்கள்  அனைவருக்கும்  மீண்டும்,  மீண்டும்  எடுத்துரைக்கின்றனர்,  எந்நிலையிலும்,  வாழ்வு  ஆதரவளிக்கப்படவேண்டும்  மற்றும்,  பாதுகாக்கப்படவேண்டும்.

திருத்தந்தை  பிரான்சிஸ்

வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 7ம் திகதி


சம்மனசானவர் தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதின் பேரில் செபிப்போமாக


செபம்:

சர்வேசுரன் மேன்மையான மகிமைப் பிரதாபத்துக்குத் தெரிந்து கொண்ட நிகரில்லாத பரிசுத்த கன்னிகையே! பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியே, தாழ்ச்சியுள்ள மாமரியே!

வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 6ம் திகதி

தேவாலாயத்தில் தேவமாதாவின் சீவியம்


செபம்:

திவ்விய கன்னிகையே! என் இரட்சகருடைய தாயாவதற்கும், பாவிகளுக்கு அடைக்கலமாவதற்கும் தெரிந்து கொள்ளப்பட்டவளே. 

வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 5ம் திகதி

தேவமாதா தம்மைக் காணிக்கையாக சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்ததின் பேரில் செபிப்போமாக

செபம்:

புனித கன்னி மரியாயே, மூன்று வயதில் தேவாலயத்துக்குச் சென்று சர்வேசுரனுக்கு உம்மை ஒப்புக் கொடுத்தீரே. நான் உம்மைச் சிநேகித்து உமக்கு ஊழியம் செய்வதற்கு என்னை உமக்கு ஒப்புக் கொடுக்க வேண்டுமென்று ஆசையை ஏற்றுக் கொள்ளும்.

வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 4ம் திகதி

தேவமாதாவின் திருநாமத்தின் பேரில் செபிப்போமாக

செபம்:

மிகவும் நேசத்துக்குரிய பரிசுத்த கன்னிகையே! உம்முடைய திருநாமத்தை உச்சரிக்கும் பொழுதெல்லாம் நெஞ்சிலே யாவர்க்கும் உமது பேரில் பக்தி உண்டாகிறதும் அல்லாமல் உம்மை நினைக்கிறவர்கள் எல்லோரும் அதிகமதிமாய் உம்மைச் சிநேகிக்கத் துணிகிறார்கள். ஆண்டவளே, என் பலவீனத்தை நீக்கி எனக்குத் திடனளித்து, இந்தக் கண்ணீர்க் கணவாயில் எனக்கு வேண்டிய உதவிகளை நல்கியருளும்.

வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 3ம் திகதி

தேவமாதா பிறந்ததின்பேரில் செபிப்போமாக


செபம்: 

நேசத்துக்குரியவளாய்ப் பிறந்த கன்னிமரியாயே வாழ்க! நீதி சூரியனுக்கு முன் உதிக்கிற விடியற்காலத்து நட்சத்திரமே வாழ்க. நீர் பிறந்த நேரத்தில் உம்முடைய திருப்பாதத்தைத் தாள் பணிந்து வணக்கத்தோடு உம்மை ஸ்துதித்து என்னை முமுவதும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.

வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 2ம் திகதி

சென்ம பாவமில்லாமல் உற்பவித்த தேவதாயின் மகிமையின் பேரில் செபிப்போமாக

செபம்: இயேசுநாதருடைய மாதாவே! ஆதிமனிதன் பாவம் செய்த பிறகு பாம்பினுடைய தலையை நசுக்க சர்வேசுரனால் குறிக்கப்பட்டவள் நீரே. பசாசின் கபட தந்திரத்தில் ஒருக்காலும் அகப்படாமல் பசாசை ஜெயித்தவள் நீரே, பசாசானது உமது திருப்பாதத்தின் கீழிருக்கிறதைக் கண்டு நான் சந்தோஷப் படுகிறேன்.

வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 1ம் திகதி

தேவமாதா சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்டதின் பேரில் செபிப்போமாக

செபம்: இயேசுநாதருடைய திவ்விய தாயாரே! அநேகர் தங்கள் பாவத்தினால் கெட்டுப்போய் நரகத்தில் விழுந்து மோட்சத்துக்குத் தெரிந்து கொள்ளப்பட மாட்டார்கள் என்ற பரம இரகசியத்தை ஆராய்ந்து எண்ணுகிறபோது நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன்.

தொற்றுநோய் மற்றும் நோய்க்கிருமி பரவும் காலங்களில் சிலுவையில் அறையுண்ட இயேசுவை நோக்கிச் செபம்

அன்பான  இயேசுவே,  உலகின்  மீட்பரே,  நாங்கள்  உம்மேல்  கொண்டுள்ள  நம்பிக்கை எம்மை ஒருபோதும் கைவிடாது. எம்மேல் இரக்கம் வைத்து எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றும்.உலகெங்கும்பரவிவரும் இந்நோய்க்கிருமியின் தாக்கத்திலிருந்து எங்களைக் காத்தருள உம்மையே வேண்டுகிறோம்.

காவல் தூதரை நோக்கி செபம்:

காவல் தூதரைநோக்கி செபம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் மரபு மன்றாட்டுகளில் ஒன்றாகும். இது காவல் தூதரின் பரிந்துரையினை வேண்டும் விதமாக அமைந்துள்ளது. சிறுவர்களுக்கு துவக்கத்தில் கற்றுக்கொடுக்கப்படும் செபங்களில் இதுவும் ஒன்று. இது கடவுளின் அன்பில் கத்தோலிக்க திருச்சபைக்கு இருக்கும் நம்பிக்கையினையும் அவர் அளித்துள்ள அருட்கொடையான காவல் தூதரின் உள்ள நம்பிக்கையினையும் எடுத்தியம்பும் விதமாக அமைந்துள்ளது.

செபம்:

எனக்கு காவலாயிருக்கிற இறைவனின் வானத்தூதரே, இறைவனின் கருனையால் உம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான ஒளியைத்தந்து, என்னை எல்லாத்தீமைகளிலிருந்தும் காத்து நடத்தி ஆண்டருளும் - ஆமென்

ஜூன் மாதம் இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது:

தாழ்ச்சியும், தயாளமும் நிறைந்த இதயமே! அன்புத் தீ சுடர்விட்டு எரியும் இதயமே! இதயங்களின் அரசும், மையமுமான இதயமே! ஆறுதல் அனைத்தின் ஊற்றான இதயமே! எங்கள் உயிரும் வாழ்வுமான இயேசுவின் திரு இதயமே!

எங்கள் மேல் இரக்கமாயிரும்.

ஆமென்.

திருச்சிலுவையின் மகிமை விழா

பேரிரக்கமுள்ள இறைவா,

மாந்தர் அனைவரின் மீட்புக்காக உம் ஒரே திருமகன் பணிவுடன் சிலுவையை ஏற்கத் திருவுளமானீர். மனித பார்வைக்கு வலுவின்மையாகவும் இகழ்ச்சிக்குரியதாகவும் இடறலாகவும் தோன்றும் சிலுவையின் மறைபொருளில் பொதிந்திருக்கின்ற உண்மையான இறைவல்லமையையும் இறைமாட்சியையும் இறைஞானத்தையும் ஆழ்ந்து உணர்ந்து, உம் திருமகனின் சிலுவை அளிக்கும் மீட்பை முழுமையாகப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு அருள்புரியும்.

உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். - ஆமென்.

Go to top
Template by JoomlaShine