ஆண்டவர்  தாம்  செய்யும்  அனைத்திலும்  நீதியுடையவர்;  அவர்தம்  செயல்கள்  யாவும்  இரக்கச்  செயல்களே.  தம்மை  நோக்கி  மன்றாடும்  யாவருக்கும்,  உண்மையாய்த்  தம்மை  நோக்கி  மன்றாடும்  யாவருக்கும்,  ஆண்டவர்  அண்மையில்  இருக்கிறார்.  அவர்  தமக்கு  அஞ்சி  நடப்போரின்  விருப்பத்தை  நிறைவேற்றுவார்;  அவர்களது  மன்றாட்டுக்குச்  செவிசாய்த்து  அவர்களைக்  காப்பாற்றுவார்.

திருப்பாடல்கள் 145:17-19

 

செபிக்கும்  மனிதர்,  அடிப்படை  உண்மைகளைப்  பாதுகாக்கின்றனர்,  இந்நாள்களின்  மனத்தளர்வுகள்,  துன்பங்கள்  மற்றும்,  சோதனைகள்  போன்ற  அனைத்தின்  மத்தியில்,  மனித  வாழ்வு,  நாம்  வியந்துநோக்கும்  இறையருளால்  நிறைந்துள்ளது  என்பதை,  அவர்கள்  அனைவருக்கும்  மீண்டும்,  மீண்டும்  எடுத்துரைக்கின்றனர்,  எந்நிலையிலும்,  வாழ்வு  ஆதரவளிக்கப்படவேண்டும்  மற்றும்,  பாதுகாக்கப்படவேண்டும்.

திருத்தந்தை  பிரான்சிஸ்

வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 18ம் திகதி

தேவமாதா தமது திருமைந்தனிடம் அடைந்த சந்தோஷத்தின்பேரில் செபிப்போமாக

செபம்:

என் திவ்விய தாயாரே! என்பேரில் மிகுந்த பட்சம் வைத்து எனக்கு எண்ணிக்கையில்லாத உபகாரங்களைச் செய்து, இஷ்டப்பிரசாதத்தால் வருகிற மன அக்களிப்பை என் ஆத்துமத்தில் விளைவிக்கும்படிக்கு எவ்வளவு பிரயாசைப்பட்டீர்!

வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 17ம் திகதி

திருக்குடும்பமாகிய இயேசுநாதர், தேவமாதா, சூசையப்பர் இந்த உலகத்தில் சஞ்சரித்ததின் பேரில் செபிப்போமாக

செபம்:

என் இரட்சகருடைய தாயாரே! உமது திருக்குமாரனாகிய இயேசுநாதரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நீர் அடைந்த சந்தோஷத்தை குறித்து நான் இந்த உலகில் நல்ல ஒழுக்கத்துடன் நடக்கும்படிக்கு எனக்கு உதவி செய்தருளும்.

வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம்  16ம் திகதி

தேவமாதா சுத்திகரத்தின் பேரில் செபிப்போமாக

செபம்:

மிகவும் இரக்கமுள்ள கன்னிமரியாயே, உம்மை மகா அன்புக்குப் பாத்திரமான மாதா என்னும் பெயரால் கிறிஸ்தவர்கள் கூப்பிடுகிறதை நான் கேட்கும் பொழுதெல்லாம் மகிழ்ச்சியுறுகிறேன்.

வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம்  15ம் திகதி

தேவ திருப்பாலனின் பிறப்பு

செபம்:

என் ஆத்துமமே, சம்மனசுகளுக்கும் மனுமக்களுக்கும் மேலாகவிளங்கும் தேவ திருப்பாலனைப் பார். இதோ உலகத்துக்கு இராக்கினி எல்லா மக்களிலும் அதிக அழகு சோபனமுள்ள பாலனாக ஆராதனைக்குரிய இயேசுநாதரைத் தமது திருமடியில் வைத்து மிகுந்த பட்சத்துடன் அணைத்துக் கொள்ளுகிறாள்.

வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம்  14ம் திகதி

தேவமாதாவும், புனித சூசையப்பரும் நசரேத்திலிருந்து பெத்லகேமுக்குச் செய்த பயணம்

செபம்:

ஓ! மரியாயே, பரிசுத்த தாயாரே, உம்முடைய பிதாவிடத்தில் இயேசு கிறிஸ்துநாதர் மத்தியஸ்தராய் எனக்காக மனுப்பேசுகிறாரென்றும், நீரே உம்முடைய திருக்குமாரனிடத்தில் நல்லுபகாரியாய் எனக்காக மன்றாடுகிறீரென்றும் நினைத்து உறுதியான நம்பிக்கையுள்ளவனா(ளா)க இருக்கிறேன்.

வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 13ம் திகதி

 

தேவமாதா உலக மீட்பர் வருகைக்கு காத்திருக்கிறாள் 


செபம்:

மீட்பரின் மகிமைநிறை அன்னையே! எங்களுக்கு அன்னையாகவும், அடைக்கலமாகவும், ஆதரவாகவும் இருக்கச் சித்தமானீரே. நீர் மீட்பருடைய அன்னையாக இருப்பதால் அவர் உமது மன்றாட்டைப் புறக்கணிக்க மாட்டார்.

வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 12ம் திகதி

தேவமாதா எலிசபெத்தம்மாளைச் சந்தித்தபோது இயேசு கிறிஸ்துவால் செய்யப்பட்ட அற்புதங்களின்பேரில் செபிப்போமாக

செபம்:

எனது திவ்விய தாயாரே! என் நல்ல உபகாரியே ஆண்டவருடைய அன்னையாக இருக்கப் பாத்திரமானவளே, நான் அநேக கனமான பாவங்களைக் கட்டிக்கொண்டதால் உமது அருகில் வர அற்பமும் பேறு பெற்றவன(ள)ல்ல,

தேவமாதா எலிசபெத்தம்மாளை சந்தி;க்கிறார் அச்சமயத்தில் தேவமாதாவிடம் விளங்கிய மூன்று பிரதான புண்ணியங்கள்


செபம்:

பரிசுத்த கன்னிகையே! நீர் உம்முடைய சுற்றத்தினராகிய புனித எலிசபெத்தம்மாளைச் சந்திக்கும்போது அன்னை உம்முடைய வார்த்தை கேட்டுத் தன் பிள்ளை மகிழ்ச்சியினால் துள்ளியதென்று அகமகிழ்ந்து உச்சரித்தாள்.

வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம்  10ம் திகதி


வானதூதர் சொன்ன மங்கள வார்த்தையின்பேரில் செபிப்போமாக


செபம்:

 என் ஆண்டவளே! மீட்பரின் தாயாரே! சுகல பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவளே! கன்னிகைக்குள் பரிசுத்த கன்னிகையே! சிருஷ்டிகளுக்குள் மேலானவளே!

வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 9ம் திகதி


கர்த்தர் மனித அவதாரம் எடுக்கும்போது தேவமாதா கொண்டொழுகிய சுகிர்த புண்ணியங்களின் பேரில் செபிப்போமாக 


செபம்:

இயேசுக்கிறிஸ்துவின் இனிய அன்னையே! ஆண்டவருடைய வார்த்தையானது உமது திரு உதரத்தில் அவதாரம் எடுக்கும்பொழுது நீர் கொண்டிருந்த சுகிர்த உணர்ச்சிகள் சொல்லமுடியாது.

வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 8ம் திகதி

கர்த்தர் மனித அவதாரம் எடுத்த பரம இரகசியத்தில் புனித கன்னிமரியாயின் மகிமையை விளக்குகிறது குறித்து செபிப்போமாக


செபம்:

 பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவளே! சகல வரப்பிரசாதங்களுக்கும் காரணமாயிருக்கிற இயேசுநாதரை நீர் பெற்றதினால் சகல ஞான செல்வங்களும் உடையவளாகி

Go to top
Template by JoomlaShine