வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம்  23ம் திகதி


தேவமாதா பூர்வீக கிறிஸ்தவர்களுக்கு செய்த உதவியின்பேரில்


செபம்:

பரிசுத்த மரியாயே! என் தஞ்சமே எத்தனையோ பாவத்தைக் கட்டிக் கொண்டு பசாசுக்கு அடிமையாகி நித்திய நரகத்திற்குப் போவதற்குப் பாத்திரவான் ஆனேன்! நீர் என் பாவக்கட்டுகளை அவிழ்த்து என் எதிரிகளின் கையினின்று என்னை மீட்டீர்.

ஆனால் கெட்ட பசாசு என்னைக் கெடுக்க இடைவிடாது எனக்குச் சோதனை கொடுப்பதினால் அதற்குத் திரும்பி அடிமையாய்ப் போவேன் என்று மிகவும் பயப்படுகிறேன். பரிசுத்த கன்னிகையே! எனக்கு ஆதரவாயிரும். தஞ்சமாயிரும். உமது உதவியுடன் என் எதிரிகளை வெல்லுவேன் என்பதற்குச் சந்தேகமில்லை. ஆனால் எனக்கு வரும் தந்திர சோதனைகளிலும், விசேசமாய் என் மரண வேளையில் பசாசு என்னுடன் தொடுக்கும் கடின யுத்தத்திலும் நான் உம்மை மறந்து போகாமல் உமது அடைக்கலத்தை உறுதியான விசுவாச நம்பிக்கையுடன் தேடும் பொருட்டு எனக்கு விசேச உதவி செய்தருளும். அப்பொழுது இயேசு கிறிஸ்துநாதருடைய திருநாமத்தையும், உம்முடைய இன்பமான திருப்பெயரையும் பக்தியோடு சொல்லி இஷ்டப்பிரசாதத்தோடு நான் மரிக்கும்படிக்கு கிருபை செய்தருளும். – ஆமென்.  

 

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

கன்னிகைகளுக்குள் உத்தம கன்னிகையே நான் என் பாவங்களை வெறுத்து எப்பொழுதும் உம்மை நோக்கி அழும்படியாக உதவி செய்தருளும். 


ü புனித பெர்நர்துவின் செபம் ……

ü சென்ம பாவமில்லாமல் …..

ü விண்ணுலகில்… அருள்… திரி..