வைகாசி  மாசற்ற  மரியாவின்  வணக்க  மாதம் 22ம் திகதி


இயேசுக்கிறிஸ்துநாதர் மோட்சத்துக்கு எழுந்தருளின பிற்பாடு தேவமாதா எழுந்தருளின பிற்பாடு தேவமாதா ஜீவித்த ஜீவியம்


செபம்:

பரிசுத்த கன்னிகையே! இவ்வுலகத்தில் படவேண்டிய பாடுகளும் கஸ்தியும் வருத்தமும் கொஞ்சக் காலத்திற்காக இருந்த போதிலும் அவை பேரின்ப வீட்டில் அளவற்ற நித்திய ஆனந்தமும் மட்டற்ற மகிமையும் எங்களுக்குப் பெறுவிக்குமென்பது குன்றாத சத்தியமாம்.

ஆகையால் எங்கள் தாயே! உங்கள் உள்ளமெல்லாம் மகிழ்ந்து மிகுதியான சந்தோசத்தை அனுபவிக்கின்றது. இந்த துன்பம் நிறைந்த ஜீவியகாலம் எப்பொழுது முடியுமோவென ஆவலுடன் காத்திருக்கிறோம். உமது அண்டையில் சேர்த்து சகல மோட்சவாசிகளுடன் உம்மை வாழ்த்திப் புகழ்ந்து, அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் அமிழ்ந்து ஆனந்திக்கும் பாக்கியம் எங்களுக்கு எப்பொழுது கிடைக்கும்? ஏங்கள் தாயே! பாவம் அறியாத இடமும், புயலடிக்காத துறைமுகமும், இருள்படாத பிரகாசமும், மரணமில்லாத ஜீவியமுமான மோட்சத்தில் நாங்கள் சேருமளவும் எங்களைக் கைவிடாமல் மகாபட்சத்தோடு நடப்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். – ஆமென்   


இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

எங்கள் தாயே! நாங்கள் சாகிறவேளையில் எங்கள் ஆத்துமம் மோட்ச பேரின்பத்தை அடைய கிருபைசெய்தருளும்.


புனித பெர்நர்துவின் செபம் ……

சென்ம பாவமில்லாமல் …..

விண்ணுலகில்… அருள்… திரி..